Thursday, December 31, 2015
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்தவர் ஜெபராஜ் (வயது 51). இவர் தண்ணீர் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி எஸ்தர் ஜெனிட்டா. இவர் கொம்மடிக்கோட்டையில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று எஸ்தர் ஜெனிட்டா தனது கணவருடன் சாத்தான்குளத்தில் உள்ள ஒரு வங்கிக்கு சென்றார். வங்கியில் ரூ.4 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் கணவருடன் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
பண்ணம்பாறை விலக்கு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மற்றொரு மோட்டார் சைக்கிளில் பின்னால் வந்து கொண்டிருந்த 2 மர்மநபர்கள் திடீரென ஜெபராஜ் மோட்டார் சைக்கிளை வழிமறித்து கணவர்– மனைவி இருவரையும் சரமாரியாக தாக்கிவிட்டு எஸ்தர் ஜெனிட்டாவிடம் இருந்த பணப்பையை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டனர்.
இச்சம்பவம் குறித்து சாத்தான்குளம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்குப்பதிவு செய்து தம்பதியை தாக்கி பணம் பறித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக சாத்தான்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நகைபறிப்பு, வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. எனவே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொள்ளை கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
#திருச்சி_அண்ணாநகர் #கஞ்சா_செடிகள்_அழிப்பு தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்ட தலைவர் ராயல் சித்திக் அவர்களின் பெரும் முயற்சியால் தி...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
உடுமலை அரிமா சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவற்றின் சார்பில் இலவச கண்பரிசோதனை முகாம் அரிமா சங்க தொழிற்பயிற்சி மையத்தில் நடந்தது. முக...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
மதுரையில் வீட்டை இடித்து விட்டு பள்ளம் தோண்டும் போது பழமையான அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு பாலாபிஷேகம் செய்து மக்க...
0 comments:
Post a Comment