Wednesday, December 23, 2015
தூத்துக்குடி டி.என்.டி. காலனியை சேர்ந்தவர் சுதாகர். இவரது மனைவி எஸ்தர் பாலா (வயது38). இவர்களுக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் கடந்த 2010ம் ஆண்டு சுதாகர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்து விட்டார்.
இதையடுத்து கடந்த 10.7.2015 அன்று மெஞ்ஞானபுரத்தை சேர்ந்த கல்லூரி ஊழியரான வின்சென்ட் பாஸ்கர் (37) என்பவருடன் எஸ்தர் பாலாவுக்கு 2–வது திருமணம் நடைபெற்றது. அப்போது பெண் வீட்டில் இருந்து 4 பவுன் நகைகள், 1½ லட்சம் ரொக்க பணம் ஆகியவை சீர்வரிசையாக கொடுக்கப்பட்டது.
திருமணமான 17–வது நாளில் வின்சென்ட் பாஸ்கர் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த எஸ்தர் பாலா தனது கணவரை அக்கம் பக்கம் தேடி வந்தார்.
இந்த நிலையில் எஸ்தர் பாலா தனது உறவினர்களுடன் நெல்லையில் உள்ள ஒரு ஜவுளிக்கடைக்கு வந்திருந்தார்.
அப்போது அங்கு கணவர் வின்சென்ட் பாஸ்கர் வேறோரு பெண்ணுடன் சுற்றி திரிவதை கண்டு அதிர்ச்சியடைந்து உறவினர்களுடன் கூறினார். உடனே அவர்கள் அனைவரும் சேர்ந்து வின்சென்ட் பாஸ்கரை மடக்கி பிடித்து புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர்.
அப்போது எஸ்தர் பாலா கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வின்சென்ட் பாஸ்கர் ஏற்கனவே ஜெயந்தி, அருமை பொருட்செல்வி, சாந்தி, அனிதா ஆகிய 4 பேரை திருமணம் செய்திருப்பதும் 5–வதாக எஸ்தர் பாலாவை ஏமாற்றி திருமணம் செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து வின்சென்ட் பாஸ்கர் மற்றும் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த புரோக்கர் திசையன் விளையை சேர்ந்த ஜான் இன்பராஜ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில், கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி காலேஜ் ரோட்டில் ...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
சாமுண்டிபுரத்தில் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுக் கடையை அப்புறப்படுத்தக் கோரி அந்த கடை முன் பொதுமக்கள் திங்கள்க...
-
தேசியக்கருத்தரங்கம் திருச்சிராப்பள்ளி, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறை நடத்திய தமிழிலக்கியங்களில் அறம் என்...
0 comments:
Post a Comment