Sunday, January 10, 2016
On Sunday, January 10, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக அனைத்து மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் திருச்சியில் உள்ள தனியார் ஹோட்டலில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்றது.இதில் கலந்துகொள்வதற்காக திருச்சி வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்கிளிடம் பேசும்போது …. தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டிற்கு அனுமதி அளித்தது தவறு என முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கருத்து தெரிவித்திருப்பது மிகவும் துரதிஷ்டமானதுää அடிப்படையே புரிந்துகொள்ளாமல் கருத்து தெரிவித்திருப்பது தமிழர்களின் இருதயத்தை காயப்படுத்தும் சொல்லாகும்ää அவர் அதை திரும்பப்பெற்றுக்கொண்டால் தான் அது சரியாக இருக்கும் இது கடும் கண்டனத்திற்குறியது என்றார். தேமுதிக பொதுக்குழுவில் அதிமுகää திமுக பிடிக்காது என்று சொன்னது மட்டுமல்லாமல்ää திமுகவோடு கூட்டு சேர்ந்தால் அது புதைகுழியில் இறங்கியதற்கு சமம் என்று சென்ற வாரம் சொல்லியிருந்தார் அது ஒரு ரவுடி கட்சி என விஜயகாந்தின் துணைவியாரும் தொடர்ந்து கூறி வருகிறார்ää அது மட்டுமல்ல 2011ல் திமுகவின் அக்கிரமங்களை அழிப்பதற்காகவே அதிமுகவுடன் கூட்டனி அமைத்ததாகவும் கூறியிருந்தார். திமுகää அதிமுக ஆகியி இரண்டு கட்சிகளையும் விஜயகாந்த் சமதூரத்தில் வைத்திருப்பதாகவே நான் கருதுகிறேன் என்றார். நாங்களும் மக்கள் நல கூட்டனி சார்பில் கேப்டனை சந்தித்தோம்ää அவர் தேமுதிக மாநாட்டில் ஒரு நல்ல முடிவு எடுப்பதாக கூறியிருக்கிறார் என்றார். அதிமுக முயற்சியால் தான் ஜல்லிக்கட்டு கொண்டுவரப்பட்டது போன்ற தோற்றத்தில் அதிமுகவினர் பல இடங்களில் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனரே என்ற கேள்விக்கு …தமிழகத்தில் எந்த காரியத்தை யார் செய்தாலும் அதை மற்றவர்கள் அதற்கு ஆதாயம் தேடுவது தமிழ்நாட்டு அரசியல் வழக்கம்.அதிமுக ஜல்லிக்கட்டிற்காக நாங்கள் அனுமதி பெற்று தந்துவிட்டோம் என்கிறார்களே 48 எம்.பி.க்கள் உள்ளனரே நாடாளுமன்றத்தில் இதற்காக அழுத்தமான குரல் கொடுத்து அரசாங்கத்தை பதில் சொல்ல வைத்தார்களா என கேள்வி எழுப்பினார். இவர்கள் ஒரு வேலையும் செய்யவில்லை மாறாக ஒப்புக்கு கடிதம் மட்டுமே எழுதி வந்தனர் என்றார். இந்த விஷயத்தில் பொன்.ராதகிருஷ்ணனை நான் பாராட்டுகிறேன் என்றார். முந்தய அரசும்ää தற்பொழுதைய அரசும் தமிழர்களை கொலை செய்கின்ற சிங்கள அரசிற்கு நண்பனாக இருந்துகொண்டு ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்லாமல் தமிழக மீனவர்களுக்கும் பச்சை துரோகம் செய்து வருகின்றனர் என்பதால் தான் நான் கருப்பு கொடி காட்டி கூட்டனியை விட்டு வெளியே வந்தேன் தமிழக மீனவர்களுக்கு முந்தய அரசும்ää இப்போதைய அரசும் துரோகம் இழைக்கிறது என வைகோ குற்றம்சாட்டினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
திருச்சி ஸ்ரீரங்கம் ரயில்வே மேம்பாலத்தில் பிரபல ரவுடி தலை துண்டித்து படுகொலை - 3 பேர் காவல்நிலையத்தில் தலையுடன் சரணடைந்தனர். ...
-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் திருப்பூர் புறநகர் மாவட்டம் சார்பில் மக்களின் முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 6...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
0 comments:
Post a Comment