Friday, February 12, 2016
தூத்துக்குடி சிதம்பரநகரில் செயல்பட்டு வந்த ரயில்வே முன்பதிவு மையம் வருகிற 15ம் தேதி முதல் மூடப்படுகிறது.
தூத்துக்குடி சிதம்பரநகரில் வ.உ.சி கல்விக்கழகம் சார்பில் ரயில்வே முன்பதிவு மையம் கடந்த 16.2.2013 முதல் செயல்பட்டு வருகிறது. இது தூத்துக்குடியில் மேற்குப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்த முன்பதிவு மையத்தினை வ.உ.சி கல்விக்கழகம் சேவை அடிப்படையில் நடத்தி வந்தது. இந்நிலையில் இந்த முன்பதிவு மையம் வருகிற 15ம் தேதி முதல் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ரயில் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.25 வசூலிக்க வேண்டும் என ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டதாம். இதற்கு வ.உ.சி. கல்விக் கழகத்தினர் சம்மதிக்கவில்லை. இதன் காரணமாக ரயில்வே முன்பதிவு மையம் மூடப்படுகிறது. இது ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரான நட்டர்ஜியிடம் கேட்டபோது, இந்த பிரச்சனை எனது கவனத்திற்கு கொண்டு வரப்படவில்லை. இது தொடர்பாக ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டெல்லியில் 'ஹிம்மத்' கைபேசி செயலி சேவையை துவக்கிவைத்த ராஜ்நாத் சிங், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம்பெண்ணுக்கு பெப்பர் ஸ்பிரே வழங...
-
திருச்சி மார்ச் 31 வீட்டு வாடகை கேட்டு நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊர...
-
நெல்லை கோயிலில் நடிகர் கமல்ஹாசன் வரம்பை மீறி நடந்துகொண்டதால் மக்கள் கொந்தளித்துள்ளனர். நடிகர் கமல் தற்போது பாபநாசம் என்ற படத்தில் நடித்த...
-
திருப்பூர் பாண்டியன்நகரில் பி.என்.ரோட்டில் இந்திராநகர் செல்லும் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த பகுதி வழியாக இருசக்கர வாகனங்களி...
-
திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே நடைப...
-
*திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது.* *திருச்சி மாவட்டத்தில் வரும் பிப்ரவரி மாத...
-
த மிழகத்தில் எந்தவித குற்ற செயல்களும் நடைபெறாமல் அமைதிப் பூங்காவாய் இருக்கிறது என்கிறார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால், கோயில் நகரம், கொலை நக...
-
*திருச்சி *உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இனி சீனப் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என மாநிலத்தலைவர் ...
0 comments:
Post a Comment