Wednesday, February 10, 2016
தூத்துக்குடியில் வாகனம் மோதி உயிரிழந்த பாதயாத்திரை பக்தர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி விஸ்வபுரத்திலிருந்து சில தினங்களுக்கு முன்பு, இருக்கன்குடிக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள் மீது எப்போதும் வென்றான் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் உயிரிழந்தார். 4பேர் படுகாயம் அடைந்தனர். இதில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில சிகிச்சை பெற்று வந்த விஸ்வபுரத்தைச் சேர்ந்த முருகன் மகன் ராம்குமார் (16) என்பவர் சிசிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
இதையடுத்து விபத்து ஏற்படுத்திய வாகனத்தை கண்டுபிடித்து, விபத்திற்கு காரணமானர்களை கைது செய்ய வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி அவரது உறவினர்கள் மற்றும் விஸ்வபுரத்தைச் சேர்ந்த மக்கள் சுமார் 100பேர் பாளை ரோட்டில் விவிடி சிக்னல் முன்பு மறியலில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான பெண்களும் கலந்து கொண்டனர். மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து வந்த மத்தியபாகம் இன்ஸ்பெக்டர் ரேனிஸ் ஜேசுபாதம், தென்பாகம் இன்ஸ்பெக்டர் சுரேஸ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கபடும் என போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக காலை 10.40 மணி முதல் 11.25 வரை தூத்துக்குடி நெல்லை இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டு, அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டெல்லியில் 'ஹிம்மத்' கைபேசி செயலி சேவையை துவக்கிவைத்த ராஜ்நாத் சிங், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம்பெண்ணுக்கு பெப்பர் ஸ்பிரே வழங...
-
திருச்சி மார்ச் 31 வீட்டு வாடகை கேட்டு நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊர...
-
திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே நடைப...
-
நெல்லை கோயிலில் நடிகர் கமல்ஹாசன் வரம்பை மீறி நடந்துகொண்டதால் மக்கள் கொந்தளித்துள்ளனர். நடிகர் கமல் தற்போது பாபநாசம் என்ற படத்தில் நடித்த...
-
திருப்பூர் பாண்டியன்நகரில் பி.என்.ரோட்டில் இந்திராநகர் செல்லும் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த பகுதி வழியாக இருசக்கர வாகனங்களி...
-
*திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது.* *திருச்சி மாவட்டத்தில் வரும் பிப்ரவரி மாத...
-
*திருச்சி *உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இனி சீனப் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என மாநிலத்தலைவர் ...
-
J.J. College of Engineering and Technology, Tiruchirappalli Graduation Day – 26.08.2018 J.J. College of Engineering and Technolog...
-
லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு தெலுங்கு பேராசிரியர்களும் இன்று ஐதராபாத் வந்து சேர்ந்து தங்கள் குடு...
0 comments:
Post a Comment