Friday, May 20, 2016
உடுமலை சட்டப் பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் உடுமலை கே.ராதாகிருஷ்ணனுக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினர்.
உடுமலை சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் உடுமலை கே.ராதா கிருஷ்ணன் வெற்றி பெற்றதைக் கொண்டாடும் விதமாக உடுமலையில் அதிமுக சார்பில் வெற்றி ஊர்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த ஊர்வலம் தாராபுரம் சாலை வழியாக அதிமுக தலைமைத் தேர்தல் அலுவலகத்தைச் சென்றடைந்தது. இதில், உடுமலை கே.ராதாகிருஷ்ணனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வழிநெடுக அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடினர். அதன்பின்னர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இதில், அவர் பேசியதாவது: இந்தத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றதன் மூலமாக, கடந்த 5 ஆண்டுகால அதிமுக ஆட்சிக்கு மக்கள் முழு அங்கீகாரம் வழங்கியுள்ளனர். கொங்கு மண்டலத்தில் பொதுமக்கள் அதிமுகவுக்கு தங்கள் வாக்குகளை அள்ளி வழங்கியுள்ளனர். உடுமலைத் தொகுதியில் வளர்ச்சித் திட்டப் பணிகளில் முழு கவனம் செலுத்துவேன் என்றார்.
மடத்துக்குளம் முன்னாள் எம்எல்ஏ சி.சண்முகவேலு, உடுமலை டிஎஸ்பி விவேகானந்தன், ஆய்வாளர் தவமணி, அதிமுக நகரச் செயலாளர் கேஜி.சண்முகம், ஒன்றிய அதிமுக செயலாளர்கள் கே.ஆறுச்சாமி, நா.அண்ணாதுரை, ஆர்.ஜி.ஜெகநாதன், நகர்மன்ற துணைத் தலைவர் எம்.கண்ணாயிரம் உள்ளிட்டோர் உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர், : திருப்பூரில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 87 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.3 கோடியே 46 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது....
-
திருச்சி ஸ்ரீரங்கம் தமிழக அரசு உத்திரவுப்படி, காய்கறி விற்பனை தொடங்கி வைக்கப்பட்டது கொரோனா தொற்று வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாவதை தொடர்ந்து...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
சிங்களவர்களால், தமிழர்களை ஒரு போதும் அடக்க முடியாது. அவர்கள் அடங்கிப்போ கவும் மாட்டார்கள். சிங்களவர்க...
-
திருப்பூர் பி.என்.ரோடு லட்சுமிநகர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் தனியார் நிதிநிறுவனத்தில் கள்ளச்சாவியை பயன்படுத்தி மர்ம கும்பல் ஒன்...
-
உடுமலை சட்டப் பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் உடுமலை கே.ராதாகிருஷ்ணனுக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்து, பொது...
-
திருப்பூர் மாவட்டத்தில் அவினாசி பல்லடம் உடுமலை தாராபுரம் மற்றும் காங்கயம் உட்கோட்டங்களில் விநாயகர் 2014.சதுர்த்தி விழாவினை முன்னிட்ட...
-
அண்ணா பல்கலைக்கழகத்தின் ஈரோடு மண்டலத்துக்கு உள்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு இடையிலான பெண்களுக்கான பூப்பந்து போட்டி திண்டல் வேளாளர் என்...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
தாராபுரம், விசாரணைக்காக போலீசாரால் அழைத்து செல்லப்பட்ட கணவர் வீடு திரும்பாததால் பதற்றம் அடைந்த மனைவி தாராபுரம் போலீஸ் நிலையம் வந்து கதற...

0 comments:
Post a Comment