Thursday, February 20, 2020
திருச்சி 20-02-2020
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில்,
வேளாண் மண்டலம் குறித்த சட்ட முன்வடிவை
முதலமைச்சர் தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிமுகம் செய்துள்ளார். இதன் மூலம் நடைமுறையிலுள்ள, செயல்பாட்டில் உள்ள ஹைட்ரோகார்பன் திட்டங்கள் நிறுத்தப்பட மாட்டாது. இந்த தேதிக்கு முன்பாக செயல்பாட்டில் உள்ள திட்ட அளவில் ஏற்கப்பட்ட ஹைட்ரோகார்பன் திட்டங்கள் நிறுத்தப்படாது.
இனிமேல் வரக்கூடிய ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு தான் அனுமதி மறுப்பு என்று சொல்லப்படுகிறது. கிட்டத்தட்ட 4000 ஏக்கருக்கும் மேற்பட்ட பகுதியை ஹைட்ரோகார்பன் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆயத்த பணி தொடங்கப்பட்டுள்ளது.
இப்பொழுது செயல்பாட்டில் உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
ஏற்கனவே ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்காக பதிக்கப்பட்ட குழாய்களை அகற்ற வேண்டும் என்பதற்காக போராடினார்களோ அந்த குழாய்கள் எடுக்கப்படாது. இப்போதுள்ள சட்டப்படி செயலில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட திட்டமாக உள்ள இவைகளுக்கு தடை கிடையாது என்று சொல்லி இருக்கிறார்கள்.
எனவே இதில் பல குழப்பங்கள் இருக்கிறது. குறிப்பாக திருச்சி மாவட்டம் லால்குடி, புள்ளம்பாடி இந்த பாதுகாக்கப்பட்ட மண்டலத்தில் சேர்க்கப்படவில்லை. கரூர் மாவட்டம் குளித்தலை சேர்க்கப்படவில்லை. இவை அனைத்தும் வேளாண்மை நிறைந்த பகுதிகள் ஆகும். இதுகுறித்து குறைகளை களைய முதலமைச்சர் தலைமையில் துணை முதலமைச்சர் உள்பட 24 பேர் கொண்ட குழு பரிசீலித்து அதன் முடிவுகளை சேர்த்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
அதனால் குறைபாடுகளுடன் தற்போது அவசரமாக பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்தை நிறைவேற்றாமல் அடுத்து ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் கழித்து வேறு சட்டமன்ற கூட்டத்தில் இதை நிறைவேற்றிக் கொள்ளலாம். இதற்காக போராட்டம் நடத்தியவர்கள் மீதான வழக்குகள் குறித்த எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை. என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...

0 comments:
Post a Comment