Tuesday, February 25, 2020
திருச்சி வைணவ திவ்ய ஸ்தலங்களில் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கத்தில் தெப்பத்திருவிழா
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் மாசி தெப்பத்திருவிழா
தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் மாசி தெப்பதிருவிழா வரும் 5-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி மேலவாசலில் உள்ள தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத்திருவிழா வரும் 27-ந் தேதி தொடங்கி வருகிற 6ம் தேதி வரை நடைபெறும்.
தெப்பத்திருவிழாவின் முதல் நாள் ஹம்ச வாகனத்திலும், 2ம் நாள் ஹனுமந்த வாகனத்திலும், 3ம் நாள் கற்பகவிருட்ச வாகனத்திலும், 4ம் நாள் வெள்ளி கருட வாகனத்திலும், 5ம் நாள் இரட்டை பிரபை வாகனத்திலும், 6ம் நாள் யானை வாகனத்திலும் நம்பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். தெப்பத்திருவிழாவின் 7ம் நாள் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளுகிறார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் விழாவின் 8ம் நாளான 5-ந்தேதி மாலை நடைபெறுகிறது. இதையொட்டி அன்று மாலை 3 மணியளவில்; நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து திருச்சிவிகையில் புறப்பட்டு மேலவாசலில் உள்ள தெப்பக்குள ஆஸ்தான மண்டபத்திற்கு மாலை 5 மணிக்கு வந்து சேருகிறார். இரவு 7.15 மணியளவில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.30 மணி முதல் இரவு 9 மணிவரை தெப்ப உற்சவம் கண்டருளுகிறார். இரவு 9.15 மணிக்கு தெப்பக்குளத்தின் மைய மண்டபம் சென்றடைகிறார். பின்னர் அங்கிருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.
9ம் திருநாளான 6-ந் தேதி பந்தக்காட்சி நடைபெறுகிறது. இதையொட்டி காலை 7.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி பகல் 1.30 மணியளவில் தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபம் சேருகிறார். பகல் 2 மணி முதல் மாலை 4 மணிவரை திருமஞ்சனம் கண்டருளுகிறார். பின்னர் மாலை 7 மணிக்கு மண்டபத்திலிருந்து ஒற்றை பிரபை வாகனத்தில் புறப்பட்டு பந்த காட்சியுடன் சித்திரை வீதிகளில் வலம் வந்து படிப்பு கண்டருளி இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். இத்துடன் தெப்பத்திருவிழா நிறைவடைகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், ஸ்ரீரங்கம் கோவில் இணைஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் கந்தசாமி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
தண்ணீர் நிரப்பும் பணி
ஸ்ரீரங்கம் மேலவாசலில் உள்ள தெப்பக்குளம் ஐந்தரை ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு வரும் 5-ந்தேதி மாசி தெப்ப உற்சவம் நடைபெறுவதால் தெப்பக்குளத்திற்கு காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் இருந்து வாய்க்கால் மூலமாக தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வைகை அணையில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால், இன்னும் இரு மாதங்களுக்கு மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யக் கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறத...
-
உடுமலை,உடுமலை நகராட்சி வாரச்சந்தையை புதுப்பொலிவுபெறும் வகையில் புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், அ...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
திருச்சி 15.08.16 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ரூபாய் 18 இலட்சம் ...
-
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. அப்போது கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த பூர்...
-
திருச்சி மார்ச் 26 தமிழகத்திலும், புதுச்சேரியிலும் மக்களவை மற்றும் சட்டப் பேரவை இடைத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல்...
-
திருச்சி மன்னார்புரத்தில் முன்னாள் வேலைவாய்ப்பு அலுவலகம் இயங்கி வந்த இடத்தில் எல்பின் என்கிற மோசடி நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இ...
-
காங்கயம் அருகேயுள்ள நிழலி கிராமம் வழியாக செல்லும் ஓடையில் ஆங்கிலேயர் காலத்தில் திட்டமிடப்பட்ட இடத்தில் தடுப்பணை கட்டப்படவேண்டும் என அப்பகு...
0 comments:
Post a Comment