Monday, September 04, 2017
மாணவர்கள்-தொழில் நிறுவனங்களை இணைக்கும் புதிய மொபைல் ஆப்
“ஹையர் மீ”
வேலைவாய்ப்பு தேர்வுக்கென மாணவர்களையும், தொழில் நிறுவனத்தையும் இணைக்கும் புதிய மொபைல் ஆப் “ஹையர் மீ”அறிமுக விழா திருச்சி SRM ஹோட்டலில் நடைபெற்றது.
சர்வதேச அளவில் வேலைவாய்ப்புக்காக அலையும் மாணவர்களையும், பணியாளர்களை தேடும் தொழில் நிறுவனங்களையும் இணைக்கும் வகையில், “ஹையர் மீ” என்ற புதிய மொபைல் அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் சிவானி குருப் நிறுவனங்களின் தலைவரும் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள சுய நிதியியல் தொழில்சார் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளின் கூட்டமைப்பு செயலாளருமான முணைவர்.செல்வராஜ் மற்றும் ஹையர் மீ நிறுவனர் சொக்கு வள்ளியப்பா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு புதிய மொபைல் அப்ளிகேசனை அறிமுகப்படுத்தி வைத்தனர்.
திரு.சொக்குவள்ளியப்பா அதன் செயல்பாடுகளை விளக்கினார். அவர் பேசும்பொழுது தற்போதுள்ள சூழ்நிலையில், சிறந்த கல்வி நிறுவனங்களில் படித்தால் கூட 10ல் ஒருவருக்கும் வேலைவாய்ப்பு அமைகிறது. பலர் தகுதியிருந்தும், ஒருசில காரணங்களால், வாய்ப்பை பெறமுடியாமல் தவிக்கின்றனர். இந்த நிலையை களைய, ‘ஹையர் மீ’ என்ற புதிய மொபைல் அப்ளிகேசன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இறுதியாண்டு பயிலும் இன்ஜினியரிங், கலை அறிவியல் மற்றும் டிப்ளமோ மாணவர்கள், இந்த அப்ளிகேசனில் தங்களது சுயவிவரத்தை பதிவு செய்து, தங்களுக்கான துறை தேர்வை எழுத வேண்டும்.
இதனுடன் இணைந்துள்ள தொழிற் நிறுவனங்கள், மாணவர்களின் திறமை மற்றும் தேர்வு மதிப்பெண்னை ஆராய்ந்து, தகுதிவாய்ந்தவர்களுக்கு பணி வழங்கும். இதன்மூலம் தேவையற்ற காலவிரயம், பண விரயம் மற்றும் அலைச்சல் தவிர்க்கப்படும். மேலும் மாணவர்கள் தங்களை சுயமதிப்பீடு செய்து, அறிவை வளர்த்துகொள்ள முடியும். இது வரை 150க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், இந்த திட்டத்தில் இனைந்துள்ளன. நடப்பாண்டில் தென்னிந்தியாவில் உள்ள 7 ஆயிரம் கல்லூரிகளைச் சேர்ந்த 10 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வினை எழுதி வேலைவாய்ப்பை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு சொக்கு வள்ளியப்பா கூறினார்.இவ்விழாவில் முன்னணி தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
திருச்சி 14.9.16 சபரிநாதன் 9443086297 தமிழர்களின் 200 கோடி சொத்துக்களை சு 10 றையாடிய கன்னட வெறியர்களை கண்டித்து...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் பொதுக் கழிப்பிடத்தில் இருந்து பிறந்து ஒரு நாளே ஆன பெண் குழந்தை புதன்கிழமை மீட்கப்பட்டது. திருப்பூ...
-
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றுள்ளதால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன. 10 வருடங்களுக்கு ...
-
மாணவர்கள்-தொழில் நிறுவனங்களை இணைக்கும் புதிய மொபைல் ஆப் “ஹையர் மீ ” வேலைவாய்ப்பு தேர்வுக்கென மாணவர்களையும், தொழில் நிறுவனத்தைய...
-
திருப்பூர், பி.என்.ரோடு பொன்னம்மாள் நகரில் வசித்து வருபவர் பழனிசாமி(வயது 50). இவரது மனைவி பத்மாவதி(44).இருவரும் கட்டிடத்தொழிலாளிகள். இவர்க...
-
திருச்சியில் மக்கள் அரசு கட்சியின் டெல்டா மாவட்ட ஆலோசனை கூட்டம் உறையூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது அப்போது தலைவர் வழக்கற...
-
திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் போலீஸார் செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சோதனை மேற்கொண்டனர். திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு ப...


0 comments:
Post a Comment