Sunday, April 12, 2020
On Sunday, April 12, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன்9443086297
திருச்சி ஏப் 12
திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதிக்கு 4 வயதில் பெண் குழந்தையும், ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்த குழந்தைகளின் தந்தை டெல்லியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு வீடு திரும்பினார். கடந்த10 நாட்களுக்கு முன்பு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனை தொடர்ந்து அவரது மனைவி தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் திருச்சி எடத்தெரு கீழப்புதூர் பகுதியில் உள்ள தாயார் வீட்டுக்கு வந்தார். கீழபுதூரில் உள்ள வீட்டிற்கு வந்தனர். அங்கு அந்த வீட்டில் மொத்தம் 12 பேர் இருந்துள்ளனர். இதையடுத்து ,12 நபர்களுக்கும் மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டனர்.
இதில் ஏற்கனவே கரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வருபவரின் ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து இன்று காலை தாயும், குழந்தையையும் மருத்துவ குழுவின் 108 ஆம்புலென்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்குள்ள தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் உடனடியாக அப்பகுதி முழுவதும் தூய்மை பணியாளர்கள் கிருமி நாசினியை தெளித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
திருச்சி உழவர் சந்தை பகுதியில் தமிழக தேவேந்திர குல வெளாளர்கள் பட்டியல் மாற்ற இயக்கம் சார்பாக மாநகர் மாவட்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில்...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
நீண்ட காலமாக தயாராகி வரும் ஷங்கரின் ஐ படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் விக்ரம் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக எமி ஜாக...
-
மதுரை மாவட்டம் மருத்துவ கல்லூரியில் (MEDI -EXPO 2014 ) மருத்துவ விழிப்புணர்வு கண்காட்சி மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் சுப்பிரமணியன் அவர்கள் இ...
-
மே-1ஆம் தேதியை உலகம் முழுவதும் தொழிலாளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் ஒரு விஷேச தினமாக தமிழகத்தின் சினிமா ரசிகர்கள் கொண்டாடுவதற்...
-
திருச்சி பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம். திருச்சி...
-
திருச்சி பத்தாண்டுகளுக்கு மேலாக அக்குபஞ்சர் மருத்துவம் பார்த்து வந்தவரை போலி மருத்துவரை கைது - சுகாதார துறை இணை இயக்குனர் நடவடிக்கை...

0 comments:
Post a Comment