Saturday, April 18, 2020
On Saturday, April 18, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி
அச்சகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் - பிரிண்டர்ஸ் அசோசியேஷன் கோரிக்கை
திருச்சி மாவட்ட பிரின்டர்ஸ் அசோசியேஷன் தலைவர் பிரசாத், செயலாளர் மோகன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் தமிழக அரசுக்கும், மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும், சுகாதார அலுவலர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
கடந்த மார்ச் 24-ஆம் தேதி முதல் மத்திய, மாநில அரசு அறிவித்திருந்த 21 நாள் ஊரடங்கில் நாங்களும் பங்கேற்று, தற்போது வரை அச்சங்களை திறக்காமல் உள்ளம். ஊழியர்கள் பணிக்கு வராமல் இருக்கிறார்கள். இந்நிலையில் தற்போது மீண்டும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட அச்சகங்கள் உள்ளன.
அதில் பணியாற்றும் ஊழியர்கள் வருமானமின்றி பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர்.. அச்சகங்களில் ஊழியர்கள் தினக்கூலியாகவும், வார கூலியாகவும் பணிபுரிந்து வருகிறார்கள். அமைப்புசாரா நல வாரியங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கியது போல் அச்சகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் அச்சகங்களுக்கு வாங்கப்பட்ட ஆர்டர்கள் வருடாந்திர வேலைகள் மற்றும் வரும் ஆண்டிற்கான பள்ளி, கல்லூரி பிரிண்டிங் ஆர்டர்கள் என அனைத்து பணிகளும் பாதியிலேயே நிறுத்தப்பட்டு உள்ளது.
அரசு சிறு குறு நிறுவனங்களுக்கு ஏப்ரல் 20ஆம் தேதி முதல் தடை நீக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் குறைந்த தொழிலாளர்களைக் கொண்டு இயங்கும் அச்சகம் செயல்பட ஆவணம் செய்ய வேண்டும். அச்சகங்களில் அரசு அறிவித்தபடி முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் பணியாற்றுவோம் என்றனர்.
அச்சகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் - பிரிண்டர்ஸ் அசோசியேஷன் கோரிக்கை
திருச்சி மாவட்ட பிரின்டர்ஸ் அசோசியேஷன் தலைவர் பிரசாத், செயலாளர் மோகன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் தமிழக அரசுக்கும், மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும், சுகாதார அலுவலர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
திருச்சி மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட அச்சகங்கள் உள்ளன.
அதில் பணியாற்றும் ஊழியர்கள் வருமானமின்றி பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர்.. அச்சகங்களில் ஊழியர்கள் தினக்கூலியாகவும், வார கூலியாகவும் பணிபுரிந்து வருகிறார்கள். அமைப்புசாரா நல வாரியங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கியது போல் அச்சகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் அச்சகங்களுக்கு வாங்கப்பட்ட ஆர்டர்கள் வருடாந்திர வேலைகள் மற்றும் வரும் ஆண்டிற்கான பள்ளி, கல்லூரி பிரிண்டிங் ஆர்டர்கள் என அனைத்து பணிகளும் பாதியிலேயே நிறுத்தப்பட்டு உள்ளது.
அரசு சிறு குறு நிறுவனங்களுக்கு ஏப்ரல் 20ஆம் தேதி முதல் தடை நீக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் குறைந்த தொழிலாளர்களைக் கொண்டு இயங்கும் அச்சகம் செயல்பட ஆவணம் செய்ய வேண்டும். அச்சகங்களில் அரசு அறிவித்தபடி முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் பணியாற்றுவோம் என்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
திருச்சி 14.9.16 சபரிநாதன் 9443086297 தமிழர்களின் 200 கோடி சொத்துக்களை சு 10 றையாடிய கன்னட வெறியர்களை கண்டித்து...
-
திருப்பூர், பி.என்.ரோடு பொன்னம்மாள் நகரில் வசித்து வருபவர் பழனிசாமி(வயது 50). இவரது மனைவி பத்மாவதி(44).இருவரும் கட்டிடத்தொழிலாளிகள். இவர்க...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் பொதுக் கழிப்பிடத்தில் இருந்து பிறந்து ஒரு நாளே ஆன பெண் குழந்தை புதன்கிழமை மீட்கப்பட்டது. திருப்பூ...
-
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றுள்ளதால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன. 10 வருடங்களுக்கு ...
-
திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் போலீஸார் செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சோதனை மேற்கொண்டனர். திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு ப...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
-
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரம் தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய...

0 comments:
Post a Comment