Friday, May 08, 2020
On Friday, May 08, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
திருச்சி
திருச்சியில் 10315,10409 நம்பர்கள் உடைய மதுபான கடையை திறக்க கூடாது என வலியுறுத்தி நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் கூறுகையில்
மது விற்பனை நேரம் தவிர 24 மணி நேரமும் இந்த மதுக்கடையில் காவல் துறை முழு ஒத்துழைப்புடன் டாஸ்மாக் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் மது விடுமுறை நாட்களிலும் மற்ற நாட்களிலும் 24 மணி நேரமும் விற்கப்படுகிறது சமீபத்தில் 15 நாட்களுக்கு முன்பு குடித்து குடித்து ஒருவர் இறந்துள்ளார்.
இதனைப்பற்றி நாங்கள் புகார் தெரிவித்தாலும் காவல்துறை டாஸ்மாக் அதிகாரி மாவட்ட ஆட்சியர் கண்டுகொள்வதில்லை என்றும் மேலும் இப்பகுதியில் டாஸ்மாக் விற்பனை செய்தால் நெடுஞ்சாலை என்பதாலும் யாத்ரி நிவாஸ் அருகில் இருப்பதாலும் பல ஊர்களில் இருந்தும் பல இடங்களிலிருந்தும் மது அருந்த இங்கு வருகிறார்கள் இந்த கடையில் 24 மணி நேரமும் முதல் விற்பனை ஆவதால் தொற்று பரவும் அபாயமும் உள்ளது என்ற அச்சத்துடன் பெண்கள் ஒன்று கூடி கடையை திறக்க கூடாது என்று மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பை ஏற்படுத்தியது .
மேலும் கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் தமிழகத்தில்
ஊரடங்கு காரணமாக
அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்ட நிலையில் நேற்று முதல் மதுபான கடைகள் செயல்படத் துவங்கியது.
இந்நிலையில் இந்த அழகிரிபுரம் பகுதியில் மதுபான கடை10315
10409 திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதியை சேர்ந்த பெண்கள், ஆண்கள் என 100 க்கும் மேற்பட்ட நபர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டனர். மேலும் ஸ்ரீரங்கம்
வட்டாச்சியர் ஸ்ரீதர்,
டாஸ்மாக் மாவட்ட மேலாளர் துரைமுருகன், மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர் 1மாதம் பின்னர் உரிய இடம் தேர்வு செய்யப்பட்டு பின்னர் கடையினை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்
என கூறியதை அடுத்து கலைந்து சென்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி திருச்சி தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் நேரு பேச்சு திருச்சி மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்த...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா பகல்பத்து உற்சவம் நிறைவு நாளான இன்று 5ஆம் தேதி நம்பெருமாள் மோகினி அ...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. வேலூர் மாவட்...
-
பெருந்துறை சீனாபுரம், திங்களூர் ஊராட்சிகளில் 237 பேருக்கு 948 விலையில்லா ஆடுகளை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் வழங்கினார். 237 பேருக்கு ...


0 comments:
Post a Comment