Saturday, May 16, 2020
On Saturday, May 16, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மே 15
திருச்சியில்
அரிசி மளிகை மற்றும் காய்கறிகள் பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்குவதற்கு முன்பு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களை வரிசையில் அமரச் செய்து சமூக இடைவெளியை பின்பற்ற வலியுறுத்தி அவர்களுக்கு ஆலோசனை வழங்கிய பின்னர் பொருட்களை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பொதுமக்களுக்கு வழங்கினார்.
கொரோனா தாக்குதல் காரணமாக
தமிழகத்திலும்
ஊரடங்கு மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏழை - எளிய பொதுமக்கள் உணவுக்கு கஷ்டப்பட்ட வருகின்றனர்.
தமிழக அரசு சார்பிலும், பல்வேறு அரசியல் கட்சியினரும், தன்னார்வலர்களும் நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். இந்த வகையில் திருச்சியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கிழக்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 45 நாட்களுக்கு மேலாக வார்டு வாரியாக
நிவாரண பொருட்களை தொடர்ந்து வழங்கி வருகிறார்.
இன்று மலைக்கேட்டை பகுதிக்குட்பட்ட 13வார்டு பொதுமக்களுக்கு அப்பகுதியில்
உள்ள லூர்துசாமி பிள்ளை பூங்காவில்
அரிசி, மளிகை மற்றும் காய்கறிகள் அடங்கிய
தொகுப்பை 250 குடும்பத்தினருக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கருத்தில் கொண்டு நாற்காலி போட்டு அமர வைக்கப்பட்டனர்.
மேலும் முக கவசம் அணிந்து பொருட்களைப் வாங்கி சென்றனர்.
முன்னதாக அங்கு வந்த அமைச்சர் பொதுமக்களிடம் தனி மனித இடைவெளி மற்றும் முக கவசம் குறித்து கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
J.J. College of Engineering and Technology, Tiruchirappalli Graduation Day – 26.08.2018 J.J. College of Engineering and Technolog...
-
திருச்சி மார்ச் 31 வீட்டு வாடகை கேட்டு நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊர...
-
திருப்பூர் பாண்டியன்நகரில் பி.என்.ரோட்டில் இந்திராநகர் செல்லும் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த பகுதி வழியாக இருசக்கர வாகனங்களி...
-
த மிழகத்தில் எந்தவித குற்ற செயல்களும் நடைபெறாமல் அமைதிப் பூங்காவாய் இருக்கிறது என்கிறார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால், கோயில் நகரம், கொலை நக...
-
மாணவியர்க்கு வனத்துறை .எம்.எஸ்.எம்.ஆனந்தன் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் திருப்பூர் கலெக்...
-
திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே நடைப...
-
சபரிநாதன் 9443086297 தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பாக திருச்சியில் வேலை...
-
*திருச்சி *உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இனி சீனப் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என மாநிலத்தலைவர் ...
0 comments:
Post a Comment