Thursday, May 14, 2020
On Thursday, May 14, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மே 13
திருச்சியை சேர்ந்த
9பேர் பேருந்து மூலம்
மகாராஷ்ட்ராவிலிருந்து திருச்சிக்கு அழைத்து வரப்பட்டனர்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமா வெளிமாநிலங்களில் இருக்கும் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் அவதியுற்று வந்தனர். இதே போல் தமிழர்களும் சொந்த ஊருக்கு வர முடியவில்லை. இந்நிலையில் மத்திய அரசு அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுப்பட்டது. இதன் ஒரு பகுதியாக மகாராஷ்ட்ரா, குஜராத் மாநிலத்தில் பணிபுரியம் தமிழகத்தில் திருச்சி, நாகப்பட்டினம். தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களை
சேர்ந்த
29தொழிலாளர்கள் பேருந்து மூலம் தமிழ்நாடு எல்லையான ஓசூர் வந்தடைந்தனர். அங்கிருந்து அவர்கள்
பேருந்து மூலம் இன்று காலை திருச்சி வந்தனர். அவர்களில்
திருச்சி பாலக்கரை, திருவெறும்பூர், மணப்பாறை, மற்றும் துறையூர் பகுதிகளை
சேர்ந்த 9 நபர்கள் திருச்சி மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் இறக்கி விடப்பட்டு பின்னர் தஞ்சை, திருவாரூர், செல்லும் நபர்கள் பேருந்து மூலம் சென்றனர். இந்நிலையில் திருச்சியில் இறக்கி விடப்பட்ட
9நபர்களுக்கும் மருத்துவர்கள்
தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை மேற்கொண்டனர். பின்னர் அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொரனா வைரஸ் நோய் தொற்று உள்ளதா என்பதை கண்டறியும் பரிசோதனை செய்வதற்காக
அழைத்துச் சென்றனர். அங்கு அவர்கள் பரிசோதனை செய்த பின்னர் 14 முதல் 20 நாட்கள் வரை தனிமைப்படுத்தப்பட்ட பின்பு அவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்படுவார்கள் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே உள்ள பிரப் ரோட்டில் ஒரு பூக்கடை உள்ளது. இந்த கடை அருகே இன்று காலை சுமார் 7 அடி நீளமுள்ள ஒரு சாரை...
-
லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு தெலுங்கு பேராசிரியர்களும் இன்று ஐதராபாத் வந்து சேர்ந்து தங்கள் குடு...

0 comments:
Post a Comment