Tuesday, May 19, 2020
On Tuesday, May 19, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மே 18
மத்திய நிதிஅமைச்சரின் கொரோனா நிதி
20இலட்சம் கோடி அறிவிப்பு விவசாயிகளுக்கு ஏமாற்றத்தையே தந்தது - விவசாயிகள் கோவனதுடன் அறை நிர்வாணத்துடன் ஊர்வலமாக சென்று திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலும், திருச்சி மாநகர தலைவர் மேகராஜன், மாநில செய்தித்தொடர்பாளர் பிரேம்குமார் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கோவணம் கட்டிக்கொண்டு,
அறை நிர்வாணத்துடன்
ஊர்வலமாக சென்று திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு கொடுத்தனர்.
அதில் இந்திய ஜனத்தொகை130 கோடியில் 85 கோடி பேர் விவசாயத்தை நம்பி இருப்பவர்கள்.
பிரதமர் மோடி கொரோனா-வால் பாதித்த மக்களுக்கு ரூ.20 லட்சம் கோடி நிவாரணநிதி ஒதுக்கியவுடனே இந்திய விவசாயிகள் எல்லோரும் விவசாய விளைபொருட்களுக்கு இலாபகரமான விலை கிடைக்கும் என்றும் கூறினீர்கள். ஆனால் 40கிலோ நெல்லுக்கு
ரூ.60முதல் ரூ.80 வரை லஞ்சம் கொடுத்துதான் விற்றோம். சூறாவளியால் அழிந்த வாழை மற்றும் விவசாய விளைபொருட்களுக்கு நஷ்டஈடு கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம், கடன் தள்ளுபடி கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம்,
கிடைக்கவில்லை.
நிதியமைச்சரின் அறிக்கையில் ஏமாற்றமே மிஞ்சியது. ஜனத்தொகை விகிதாசாரத்தின்படி பார்த்தால் விவசாயத்தை சார்ந்தவர்களுக்கு சுமார் 14 இலட்சம் கோடி நிவாரணமாக கொடுத்திருக்க வேண்டும்.
ஆனால், விவசாயிகளை கடன்காரர்களாக ஆக்குவதற்காகவும், வங்கி மேலாளர்களை கண்டு விவசாயிகள் ஓடி ஒழியும் அடிமைகளாக்குவதற்காகவும், விவசாய விளைபொருட்களுக்கு இலாபகரமான விலை கொடுப்பது எதுவும் இல்லாமலும், கடன் வாங்கி கொள்ளுங்கள் என்று கூறுவது, விவசாயிகள் கடனிலேயே பிறக்க வேண்டும், கடனோடு வாழ வேண்டும் என தான் உள்ளது.
விவசாயிகளை அழிவில் இருந்து காப்பாற்றுவது சம்மந்தமாகவோ, நிதியமைச்சர் அறிக்கையில் எதுவும் இல்லை.
வெள்ளம் வந்தாலும், வறட்சி வந்தாலும்
எல்லா விவசாயிகளும் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் எல்லோரையும் காப்பாற்றுங்கள்.
எனவே, நிதியமைச்சர் விவசாயிகளுக்கு இலாபகரமான விலை கிடைக்கும்வரை, அதுவரை கடன் தள்ளுபடியும், ஏக்கருக்கு ரூ.20,000/- நஷ்டஈடும்
60வயதடைந்த விவசாயிகளுக்கு சிறு, குறு, பெரிய விவசாயிகள் என்று பார்க்காமல் மகன், மகள் இருந்தாலும், நிலம் இருந்தாலும் அரசு ஊழியருக்கு பென்ஷன் கொடுப்பதுபோல் மாதம் ரூ.5,000/- ஓய்வூதியமும், தனிநபர் இன்சூரன்ஸ்-ம் கொடுத்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பேட்டி: அய்யாக்கண்ணு,
மாநில தலைவர்,
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி திருச்சி தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் நேரு பேச்சு திருச்சி மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்த...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா பகல்பத்து உற்சவம் நிறைவு நாளான இன்று 5ஆம் தேதி நம்பெருமாள் மோகினி அ...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. வேலூர் மாவட்...
-
பெருந்துறை சீனாபுரம், திங்களூர் ஊராட்சிகளில் 237 பேருக்கு 948 விலையில்லா ஆடுகளை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் வழங்கினார். 237 பேருக்கு ...
0 comments:
Post a Comment