Friday, May 22, 2020
On Friday, May 22, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
சுதந்திரத்திற்கு பின்
நம்நாட்டிலேயே அகதிகள் போல் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நடந்து செல்வதற்கு முற்றுப் புள்ளி வைத்திட வேண்டும்.
ஜோதிமணி எம்.பி.பேட்டி.
திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சிக்கு தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் கிருமி நாசினி இயந்திரம் மற்றும் முழுகவச உடை உள்ளிட்டவைகளை கரூர் எம்.பி.ஜோதிமணி வழங்கினார்.
பின்னர் சுமார் 500 க்கும் மேற்பட்டோருக்கு அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்.
இந்த நேரத்திலும் கூட டாஸ்மாக் கடைகளை திறந்திருப்பது என்பது மிகுந்த வேதனை என்ற நிலையிலும் மேலும் 2 மணி நேரத்தை கூட்டியிருப்பது அதை விட வேதனை.
நம் நாட்டில் சுதந்திரத்திற்கு பின் சொந்த நாட்டிலேயே புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அகதிகளைப் போல் காலில் ரத்தம் வடிய நடந்து செல்வது மிகுந்த வேதனையை ஏற்படுத்திய நிலையில் உடனடியாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களை மீட்க அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
20 லட்சம் கோடி கொடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால் அப்படி ஏதும் கொடுக்கப்படவில்லை. அப்படியானால் ஒரு லட்சம் கோடியை மக்களின் வங்கிக் கணக்கில் 7500 வீதம் செலுத்தி இருக்கலாம் என்று கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் திருப்பூர் புறநகர் மாவட்டம் சார்பில் மக்களின் முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 6...
-
திண்டுக்கல் அருகே சின்னாளபட்டியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் பேரூராட்சி நிர்வாகம் சார்பாக சுமார் 4500–க்கு மேல் குடி தண்ணீர் இணைப்புகள் ...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
திருச்சியிலிருந்து 773வெளிமாநில தொழிலாளர்கள் சிறப்பு ரயில் மூலம் அவரவர் ஊர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மேற்பார்வையில் அனுப்பி வைக்கப்பட்ட...
-
காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத மழையினால் வெள்ளபெருக்கு ஏற்பட்டு அதிக சேதம் உண்டானது. அதனால் லட்சக்கணக்கான மக்கள் வீடு மற்றும...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருப்பூர் மாநகரில் வருகின்ற 08.09.216 அன்று நடக்க விருக்கும் விநாயகர் ஊர்வலத்தை முன்னிட்டு போக்குவரத்துக்கு இடையுறு இல்லாதவாறு திருப்பூர் ம...


0 comments:
Post a Comment