Friday, March 05, 2021
திருச்சிராப்பள்ளி மாவட்டம் அண்ணா விளையாட்டரங்கில் உள்ள நீச்சல்
குளத்தில் தினசரி நீச்சல் பயிற்சி பெறுவதற்கு நிலையான இயக்க நடைமுறை விதிமுறைகளுடன் 10 வயதுமுதல்65 வயதிற்குட்பட்டவர்களுக்கு
அனுமதி மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தகவல்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைணயம் விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் தினசரி பயிற்சியை துவங்குவதற்கு விதிமுறைகளுடன் வழிகாட்டு
நெறிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி திருச்சிராப்பள்ளி அண்ணா
விளையாட்டரங்கத்தில் நீச்சல் பயிற்சிக்கு 06.03.2021 முதல் அனுமதிக்கப்படுகிறது.
10 வயது முதல் 65 வயதிற்குடபட்ட பொதுமக்கள் தினசரி நீச்சல் பயிற்சி
மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர். நீச்சல் பயிற்சிக்கு வரும் நபர்களிடம் உள்ளே நுழையும் பொழுது வெப்பமானி சோதனை செய்யப்படும். இதற்கொன தனிக்குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்படும். விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தனித்தனி உபகரணங்களை பயன்படுத்த வேண்டும் விளையாட்டு
உபகரணங்களை பகிர்ந்து கொள்ள கூடாது. பயிற்சிக்கு முன்பும் பின்பும் கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும். விளையாட்டு பயிற்சிகளை பாதுகாப்பான சூழலில் மேற்கொள்ளப்பட வேண்டும நீச்சல் குளத்தில் 20 நபர்களுக்கு மிகாமல் சமூக இடைவெளி விட்டு பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
விளையாட்டு வளாகத்தில் சமூக இடைவெளியுடன் தொற்று பரவாமல் இருக்க கிருமி நாசினி மூலம் கைகளை கழுவுதல் முககவசம் அணிதல் நீச்சல் குளத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எச்சில் துப்பாமல் தூய்மையாக பயன்படுத்துதல் வேண்டும்.
வழிகாட்டுநெறிமுறைகள் அறிக்கை பலகையில் தெரிவிக்கப்பட்டுள்ளதை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் சளி காய்ச்சல் மற்றும் இருமல் ஆகிய காரணங்களினால் விளையாட்டு மைதானத்திற்குள் அரங்கிற்குள் நுழைய முற்றிலுமாக தடை
செய்யப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று அதிகமுள்ள பகுதிகளில் நீச்சல் குளம்
இயங்குவதற்கு அனுமதி இல்லை.
விதிமுறைகளுடன் பயிற்சி மற்றும் போட்டிகள் நடத்த அனுமதிக்கபடுவர்.
மேலும் முக்கிய விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர்அண்ணா விளையாட்டரங்கம் திருச்சிராப்பள்ளி (தொலைபேசி எண்.0431-2420685) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு இவ்வாறு தெரிவித்துள்ளார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...
-
திருப்பூர் வடக்கு போலீசாருக்கு திருப்பூர் பி.என்.ரோடு எஸ்.வி.காலனி 2–வது வீதியில் உள்ள ஒரு வீட்டில் கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதாக தகவ...
-
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் கடந்த 20 நாட்களாக சுற்றித்திரியும் ஒற்றை குரங்கு பார்ப்போரையும் பள்ளி மற்றும் கல்ல...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...

0 comments:
Post a Comment