Tuesday, June 01, 2021
திருச்சி
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் அமைச்சர்கள் முழு வீச்சோடு செயல்பட்டு கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி கொரோனா தடுப்பு உதவி மையத்தை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு இன்று தொடங்கி வைத்தார்.
மேலும் தடுப்பு ஊசியின் தேவையை வலியுறுத்தும் பிரச்சாரம் வாகனத்தை தொடங்கி வைத்தார்.
இந்த மையத்தின் மூலம் ஆதரவற்றவர்களுக்கு அத்தியாவசிய மளிகை பொருட்கள், இலவசமாக வழங்குதல் சாலையோரம் மற்றும் தேவையுடையவர்களுக்கு மதிய உணவு வழங்குதல், தடுப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தல், ஆம்புலன்ஸ் உதவி எண்கள் மூலம் உதவி செய்தல், கொரோனாவால் உயிரிழந்த நபர்களை நல்லடக்கம் செய்வதற்கான குழுவினரை பயன்படுத்துதல், கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தை களுக்கு மாவட்ட அரசு குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு மையம் மூலம், அவசரத் தேவைக்கான மருத்துவ எண்களை கொடுத்து உதவுதல், மற்றும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வரக்கூடியகளுக்கு மூன்று வேளையும் உணவு வழங்குவதற்கான பணிகள் என ஜமால் முஹம்மது உதவி மையத்தின் மூலம் வழங்குவதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.
கல்லூரி உதவி மையத்தினை திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு 100 குடும்பங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.
மேலும் இவ்விழாவில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் கல்லூரியின் செயலாளர் மற்றும் தாளாளர் காஜா நஜிமுதீன், பொருளாளர் ஜமால், உள்ளிட்ட கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் திமுக முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி திருச்சி தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் நேரு பேச்சு திருச்சி மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்த...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா பகல்பத்து உற்சவம் நிறைவு நாளான இன்று 5ஆம் தேதி நம்பெருமாள் மோகினி அ...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. வேலூர் மாவட்...
-
பெருந்துறை சீனாபுரம், திங்களூர் ஊராட்சிகளில் 237 பேருக்கு 948 விலையில்லா ஆடுகளை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் வழங்கினார். 237 பேருக்கு ...
0 comments:
Post a Comment