Saturday, December 11, 2021
திருச்சி மாவட்டம் முத்தரசநல்லூர் வெள்ளாளர் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் வெள்ளாளர் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு சித்தி விநாயகர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர் இடும்பன் மதுரைவீரன் கருப்பண்ணசுவாமி சமேத ஸ்ரீ சக்தி மாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிசேக விழா கடந்த 4ஆம் தேதி அன்று முதல் கால யாக பூஜையுடன் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து 5 ஆம் தேதி ஸ்ரீசக்தி மாரியம்மனுக்கு முதல் கால யாக பூஜையும் சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது
ஆறாம் தேதி திங்கட்கிழமை அன்று மூன்றாம் கால யாக பூஜையும் இதனைத் தொடர்ந்து ஏழாம் தேதி யாகசாலையில் மண் நீர் நெருப்பு காற்று ஆகாயம் ஆகிய ஐந்து ரூபமாக விளங்கும் அன்னைக்கு ஐந்தாம் கால யாக பூஜையும் நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர் விழாவிற்கான ஏற்பாடுகளை காரியகாரப்பிள்ளை சிவக்குமார் மற்றும் விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
-
திருச்சி டிச 17 கோரிக்கை வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் தொடர் போராட்டம் - போலீஸ் அனுமதி இல்லை என்றால் தடை மீறி நடத்தப்படும் - தேசிய தெ...
-
தமிழகத்தில் தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான், பொங்கல் என பல பண்டிகைகள் முக்கியமானதாக கொண்டாடப்பட்டு வருகிறது. பண்டிகைகள் மட்டும் இன்றி பிறந்த...
-
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி சமத்துவ மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம் சாத்தான்குளத்தில் நடைபெற்றது. தென் மண்டல அமைப்...
-
திருப்பூர்,பட்டாகேட்டு, 63 வேலம்பாளையம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ரேஷன்கார்டு, ஆதார் அட்டை போன்ற ஆவணங்களை ஒப்படைக்க கலெக்டர் அலுவலகத்துக...
-
மதுரை மாநகராட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த திமுக கவுன்சிலர்கள் பொதுமக்கள் உருவ பொம்மைக்கு நாமம் போட்டு வினோத ஆர்ப்பாட்டத்தை ம...
-
அமெரிக்க அதிபர் ஒபாமாவும், அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், இரு நாடுகளும் தங்கள் உறவுகளில் சாதாரணம...
0 comments:
Post a Comment