Friday, March 13, 2015
மதுரை புறநகர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக
சார்பில், மதுரையை அடுத்த ஊமச்சிகுளத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
திமுக இளைஞரணி மாநிலத் துணைச் செயலர் மமேஷ் பொய்யாமொழி, ரத்ததான முகாமைத்
தொடங்கி வைத்தார். மதுரை புறநகர் மாவட்ட திமுக செயலர்கள் பி.மூர்த்தி
(வடக்கு), மு.மணிமாறன் (தெற்கு) ஆகியோர் தலைமை வகித்தனர். சட்டப்பேரவை
முன்னாள் தலைவர் சேடப்பட்டி முத்தையா, ஒன்றியச் செயலர்கள் ரகுபதி (மதுரை
கிழக்கு) சிறைச்செல்வன் (மதுரை மேற்கு) உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
திமுக இளைஞரணியினர், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என
3500 பேர் ரத்ததானம் வழங்கினர். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை,
உசிலம்பட்டி அரசு மருத்துவமனை மற்றும் பல்வேறு தனியார் மருத்துவமனைகளின்
மருத்துவர்கள் மேற்பார்வையில் ரத்த வங்கிகளுக்கு ரத்தம் தானமாகப்
பெறப்பட்டது. அதைத் தொடர்ந்து யா.ஒத்தக்கடையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏழை
மாணவர்கள் 100 பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்பட்டது.
On Friday, March 13, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
Thursday, March 12, 2015
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 13வது மாநில மாநாட்டை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கட்டுரை, கவிதை போட்டிகள் நடத்தப்படுகின்றன.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 13வது மாநில மாநாடு மார்ச் 19ம் தேதி முதல் 22ம் தேதி முடிய நான்கு நாட்கள் திருப்பூரில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டை முன்னிட்டு வரும் 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருப்பூர் பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் (புதிய கட்டிடம்) கல்லூரி மாணவ, மாணவியருக்கான கட்டுரை, கவிதை போட்டிகள் நடைபெறுகின்றன.
கட்டுரை போட்டிக்கு கல்வி - அறிவைத் தூண்டுவதா? மதிப்பெண்ணைத் தாண்டுவதா? அல்லது கல்வெட்டு முதல் கணினி வரை.. தமிழே காண்! அல்லது எந்நாட்டிலும் இல்லாத சாதி, இங்கு மட்டும் ஏன்? என்ற மூன்று தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் நான்கு பக்க அளவில் கட்டுரை எழுதலாம்.
கவிதை போட்டியில் சாதி மதங்களைப் பாரோம்! அல்லது மெல்லத் தமிழ் இனி வளரும்! அல்லது தீண்டாமைக்குத் தீயிடுவோம்! என்ற மூன்று தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் இரண்டு பக்க அளவில் கவிதைகள் எழுதலாம்.
இந்த போட்டியில் பங்கேற்கும் கல்லூரி மாணவ, மாணவியருக்கு தேவையான தாள்கள் இங்கேயே தரப்படும். வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.3 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.2 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.ஆயிரம் மற்றும் பதக்கம், புத்தகம் பரிசாக வழங்கப்படும்.
இப்போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு மார்ச் 22ம் தேதி திருப்பூர் டவுன்ஹாலில் நடைபெறும் தமுஎகச மாநில மாநாட்டு கலை இரவு நிகழ்ச்சியில் பரிசளிப்பு விழா நடைபெறும்.
இந்த போட்டிகள் குறித்து மேலும் விபரங்களுக்கு: 94434 70780, 97860 73353, 90039 46766, 99445 54204, 99428 87500, 94861 08729, 90434 64007, 94421 64354 ஆகிய அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தமுஎகச மாநில மாநாட்டு வரவேற்புக்குழு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் வகையில் புதிய தலைமுறை தொலைகாட்சி மீதும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க கலை இரவு நிகழ்ச்சியிலும் தாக்குதல் நடத்திய இந்துத்துவ அமைப்பினரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்தியுள்ளது.
திருப்பூர் ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை சிஐடியு தமிழ் மாநிலக் குழுக் கூட்டம் துணைத் தலைவர் ஆர்.சிங்காரவேலு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலப் பொருளாளர் மாலதி சிட்டிபாபு, மாநில துணைப் பொதுச் செயலாளர்கள் வி.குமார், ஆர்.கருமலையான், கே.திருச்செல்வன், திருப்பூர் மாவட்டச் செயலாளர் எம்.சந்திரன் உள்பட மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்ற பின் மத அடையாளம் மற்றும் பண்பாட்டுத் தளத்தில் மாற்றுக் கருத்து மற்றும் நம்பிக்கை கொண்டோரை குறிவைத்து இந்துத்துவ அமைப்பினர் தாக்குகின்றனர். இது இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை மதிக்க மறுக்கிற ஜனநாயக விரோத செயலாகும். இதை பாஜக அரசு பகிரங்கமாக கண்டிப்பதற்கு பதிலாக வேடிக்கை பார்க்கிறது. இதை தொடர் தாக்குதலுக்கான சமிக்கையாக கருதி இந்துத்துவ வன்முறையாளர்கள் தொடர் வன்முறைகளில் ஈடுபடுகின்றனர். இதை சிஐடியு தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. குறிப்பாக தமிழகத்தின் எழுத்தாளர்கள் பெருமாள்முருகன், புலியூர் முருகேசன் ஆகியோரை தாக்கியதும், அவர்களின் எழுத்துரிமையைப் பறிக்கிற செயலிலும் வகுப்புவாத சாதிய சக்திகள் இறங்கினர்.
கடந்த மார்ச் 7ம் தேதி தமுஎகச சங்கத்தின் சார்பில் உடுமலைபேட்டையில் நடந்த கலை இரவு நிகழ்ச்சிகளின் மீது தாக்குதல் தொடுத்து நிகழ்ச்சியை சீர்குலைக்க முயற்சி செய்துள்ளனர். மார்ச் 8ம் தேதியன்று ஆயுதங்களுடன் சென்று புதிய தலைமுறை தொலைகாட்சி நிறுவனத்தின் மீது இந்து முன்னணி அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். மீண்டும் 12ம் தேதி அதிகாலை 3 மணியளவில் புதிய தலைமுறை தொலைகாட்சி நிறுவனத்தின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இத்தகைய வன்செயல்கள் கடும் கண்டனத்திற்குரியதாகும். சிஐடியு தமிழ்நாடு மாநிலக்குழு தாக்குதலுக்கு காரணமான இந்துமுன்னணி உள்ளிட்ட அமைப்புகளை சார்ந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறது. தொடர் தாக்குதலில் இந்துத்துவ அமைப்பினர் ஈடுபடுவதற்கு காரணம் மாநில அரசு கண்டுகொள்ளாத போக்கே ஆகும் என சிஐடியு குற்றம் சுமத்துகிறது. எனவே தமிழக அரசும், காவல் துறையும் பிரச்சனைகளின் தீவிரத்தன்மையை உணர்ந்து நியாயமான நடவடிக்கை எடுப்பதும், "கலாச்சார காவலர்கள் என தன்னைத்தானே அறிவித்துக் கொண்டு அலையும் கும்பலை" கைது செய்யவும், கருத்துரிமையை பாதுகாக்க வேண்டும் என சிஐடியு தமிழ்நாடு மாநிலக்குழு வற்புறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளது.
சிஐடியு மாநிலக்குழுக் கூட்டம் தொடர்ந்து வெள்ளிக்கிழமையும் நடைபெறுகிறது.
On Thursday, March 12, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஓய்வூதியர்கள் தங்கள் ஆதார் எண்ணை கருவூலங்களில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக ஆ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருச்சி: காவிரிக் கரையை அடைத்து திருமண மண்டபம் கட்டியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச் சாலையில் பார்சன் காலண...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
அகில இந்திய தெலுகு சம்மேளனம் சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது.அதில் சில்பா ரங்கராஜன் தலைமை தாங்கினார் நாயுடு வரவேற்புரை ஆற்றினர்.கருணாக...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
திருப்பூர், அக்.4- திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் உள்ள நடேசன் நகர் ஹைஸ்கூல் மேடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
-
திருச்சி 17.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சியில் ரஜினி ரசிகர்கள் திமுக நேரு வை சந்தித்து ஆதரவு...
-
பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம், தேர்த் திருவிழா புதன்கிழமை (ஏப்ரல் 1) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருப்பூர் மாவட...
.jpg)

