Friday, March 20, 2015

On Friday, March 20, 2015 by Tamilnewstv in    

On Friday, March 20, 2015 by Tamilnewstv in    
  பூம்புகார்
தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம்
பூம்புகார் விற்பனை நிலையம்ää
மேலபுலிவார்டு ரோடுää சிங்காரத்தோப்புää
திருச்சி-8. தொலைபேசி எண்-2704895

 மாபெரும் சிறப்பு தள்ளுபடி விற்பனை
(கைவினைää கைத்தறிää நகைகளின்
சிறப்புக் கண்காட்சி மற்றும் விற்பனை)
19.03.2015

கலாச்சாரம்ää பண்பாடுää பாரம்பரியம் இவைகளை பேணிக் காக்கும் ஒரு அரசு நிறுவனம் என்றால் அது தமிழ்நாடு கைவினை தொழில்கள் வளர்ச்சிக் கழகம் ஆகும். கைவினைஞர்களின் வாழ்வாதாரமாகவும் அடுத்த தலைமுறையினர் பின்பற்றும் வகையில் கைவினைக் கலைகளை பொதுமக்களுக்கு கொண்டு சென்று நமது கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் கைவினைக் கலைகள் மூலம் அவர்களுக்கு அறியப்படுத்தி அவர்களுக்கு பயன்பெறும் வகையிலும் கைவினைக் கலைகள் அழித்துவிடாமல் அதற்கு உயிர் கொடுத்து காப்பதற்கு பல முயற்சிகளை செம்மையாக பூம்புகார் நிறுவனம்; செய்து வருகிறது.

தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகம் கைவினைஞர்களின் பொருட்களுக்கு சந்தை வாய்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்தில் தமிழகம் முழுவதும் மற்றும் புதுடெல்லிää கொல்காத்தாää பெங்க@ர் உட்பட 15 விற்பனை நிலையங்களை நடத்தி வருவதோடுää மற்றொருவித சந்தை வாய்ப்பாக இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் பலவகைக் கண்காட்சிகளை நடத்தி வருகிறது.

          இவ்வாண்டு 200க்கும் மேலான சிறப்புக் கண்காட்சிகளை கைவினைஞர்களும்ää பொதுமக்களும் பயன்பெறும் வகையில் நாடெங்கும் நடத்தி வருகின்றது.

இதன் ஒருகட்டமாக திருச்சி சிங்காரத்தோப்பில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையம் வரும் 20.03.2015 முதல் 31.03.2015 வரை (ஞாயிறு உட்பட) “மாபெரும் சிறப்பு தள்ளுபடி விற்பனைஎன்ற தலைப்பில்  கைவினைää கைத்தறிää நகைகளின் சிறப்புக் கண்காட்சியை நடத்த உள்ளது.

          இக்கண்காட்சி 20.03.2015 அன்று மாலை 5.00 மணியளவில் துவங்கியது.

இக்கண்காட்சியில் சிறப்பு அம்சமாக இடம்பெறும் பொருட்கள் ஐம்பொன் சிற்பங்கள்ää பித்தளை விளக்குள்ää தஞ்சை கலைத்தட்டுகள்ää தஞ்சை ஒவியங்கள்ää சந்தன மரப்பொருட்கள்ää ரோஸ் மரச்சிற்பங்கள்ää ஜெய்ப்பூர் நவரத்தின கற்கள்ää முத்து

-2-

நகைகள்ää ராசிகேற்ற கற்கள்ää ஐம்பொன் வளையல்கள்ää கொலுசுகள்ää 1கிராம் நெக்லஸ்ää அமெரிக்கன் டைமன் நகைகள்ää பவளம் மாலைகள்ää குந்தன் கல் மாலைää மெசிரிஸ் காட்டன் புடவைகள்ää குறிஞ்சி பிளவர் சேலைகள் மற்றும் ஆந்திரா காட்டன் சேலைகள் ஆகியவைகள் இடம் பெற்றுள்ளன.

மேலும் ராஜஸ்தானில் இருந்து வரவழைக்கப்பட்ட திரைச் சீலைகள்ää காக்ரா ஜோலிää நைட்டிää ரஜாய்ää படுக்கை விரிப்புகள்ää வாரணாசி ஜரிகை வேலைப்பாடுகள்ää லக்னோ சிக்கான் சுடிதார்ää மொரதாபாத் கலைப்பொருட்கள்ää ஜெய்ப்பூர் வண்ண ஒவியங்கள்ää ஆயில் பெயிண்டிங்ஸ்ää வாட்டர் கலர் பெயிண்டிங்ஸ்ää தோல் பொருட்கள்ää வலம்புரி சங்குப் பொருட்கள்ää அகர்பத்திகள்ää வாசனை திரவியங்கள்ää ரோஸ் மரத்தில் பதிக்கப்பட்ட சுவர் அலங்கார பேனல்ää சகரன்ப10ர் மரத்தில் செய்யப்பட்ட மசாஜ் பொருட்கள்ää அலாய் மெட்டல்ää வெள்ளை உலோகத்தால் செய்யப்பட்ட கைவினைப் பொருட்கள்ää காகித கூழினால் செய்யப்பட்ட பொம்மைகள்ää மாவுக்கல் விநாயகர்ää சநதனக்கட்டைகள்ää சென்னபட்னா பொம்மைகள் மற்றும் எண்ணற்ற பரிசுப் பொருட்கள் ஒரே இடத்தில் குவிக்கப்பட்டுள்ளன.

          குறைந்தபட்சமாக ரூ.50 முதல் அதிகபட்சம் ரூ.3.00 இலட்சம் வரையில் கைவினைப் பொருட்கள் இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது. இக்கண்காட்சியின் மூலம் ரூ.3 இலட்சம் விற்பனை எதிர்ப்பார்க்கபடுகிறது.

          இவற்றுடன் சிறப்பம்சமாக ராஜஸ்தான் நகைகள்ää பேப்பர் நகைகள்ää கலம்காரி துணியால் செய்யப்பட்ட நகைகள்ää சந்தன மரக்கட்டைகளும்ää இவற்றை தேய்க்கும் கல் வரவழைக்கபட்டுள்ளன. கடன் அட்டைகளுக்கு எவ்வித சேவைக் கட்டணமும் இன்றி ஏற்றுக்கொள்ளப்படும்.
         
அனைத்து கலை பொருட்களுக்கும் சிறப்பு தளு;ளுபடி
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

       பஞ்சலோக சிற்பங்களுக்கு                   -        15மூ தள்ளுபடி
       பித்தளை விளக்குகளுக்கு            -        15மூ தள்ளுபடி
       மற்ற அனைத்து வகை கலைப்பொருட்களுக்கும் 10மூ தள்ளுபடி அளிக்கப்படுகிறது.

          இக்கண்காட்சியில் காட்சிக்கும் விற்பனைக்கும் உள்ள பல்வேறு மாநிலங்களிலிருந்து தருவிக்கப்பட்டுள்ளன. அழகிய கலைப் பொருட்களை திருச்சி நகர மக்கள் வாங்கி தங்கள் இல்லத்திற்கு அழகுகூட்டி மகிழ்விக்கவும் மற்றும் இச்சிற்பங்களை உற்பத்தி செய்யும் கைவினைஞர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவும் உதவுகிறது பூம்புகார் நிறுவன மேலாளர் தெரிவித்தார்

On Friday, March 20, 2015 by Tamilnewstv in    

Thursday, March 19, 2015

On Thursday, March 19, 2015 by Unknown in ,    

மேலூர் தொகுதியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தக்கோரிமாண்புமிகுமக்களின் முதல்வர்அம்மா அவர்களிடம் தொகுதி எம்.எல்.ஏ. ஆர்.சாமி, கோரிக்கை விடுத்தார். இதை ஏற்று இந்த திட்டத்தை ரூ.783 கோடி செலவில் செயல்படுத்த அம்மா அவரகள் ஆணை பிறப்பித்தார்.

அதன்படி, இந்த திட்டப் பணிகள் பல்வேறுகட்டங்களாக நடைபெற்று வந்தன. தற்போது 99 சதவீத பணிகள் நிறைவடைந்து உள்ளது. இந்த பணிகளை ஆய்வு செய்ய உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூமதுரைபுறநகர் மாவட்டகழகசெயலாளர்திரு ம.முத்துராமலிங்கம், எம்.எல்.ஏ ஆகியோர் இன்று மேலூர் வந்தனர். அங்குள்ள காந்திஜி பூங்காவில் இந்த திட்டத்துக்காக அமைக்கப்பட்டுள்ள பெரிய அளவிலான தரை நீர்த்தேக்க தொட்டி மற்றும் பம்ப் இயக்கம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த திட்டம் தொடர்பாக அதிகாரிகளிடம் பல்வேறு விளக்கங்கள் கேட்டு அறிந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், எம்.எல்.ஏ.க்கள் மேலூர் ஆர்.சாமி, தமிழரசன், கூடுதல் கலெக்டர் ரோகிணி ராம்தாஸ், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் ஜபார், மேலூர் நகரசபை தலைவர் சரவணன், சேர்மன்கள் செல்வராஜ், வெற்றிச்செழியன், உமாபதி, நகரசபை துணைத்தலைவர் மெகராஜ்பீபி, கொட்டாம்பட்டி யூனியன் துணைத் தலைவர் குலோத்துங்கன், தொகுதி செயலாளர் செல்வம், பஞ்சாயத்து தலைவர்கள் சுரேஷ், துரை அண்ணா, சசிகலா மோகன், சொக்கனாண்டி, முன்னாள் நகரசபை தலைவர் சாகுல் அமீது.

கவுன்சிலர்கள் அன்புக்கரசு, சந்திரன், ராஜி நாகசுப்பிரமணியன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து மேலூர் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்துக்காக மதுரை கிழக்கு தொகுதி மாங்குளத்தில் அமைந்துள்ள மிகப் பெரிய தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியையும் அமைச்சர்கள் வேலுமணி, செல்லூர் ராஜூ ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Tuesday, March 17, 2015

On Tuesday, March 17, 2015 by Unknown in ,    
இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி திருப்பூரில் பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர்.
ஊத்துக்குளி செட்டிதோட்டம் அண்ணமார்நகர் பகுதியிலுள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 20 ஆண்டுகளாக குடிசைப் போட்டு வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் கூலித்தொழிலாளர்களாவர். இந்தக் குடும்பத்தினர் தாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு இலவச வீட்டுமனைப் பட்டா கோரி பலமுறை விண்ணப்பித்தும் இதுவரை வழங்கப்படவில்லை. பட்டா இல்லாத காரணத்தால், அப் பகுதி வீடுகளுக்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை.
இதனால் அப் பகுதி மக்கள், ஆட்சியர் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு கொடுக்க வந்தனர். திடீரென அவர்கள் ஆட்சியர் அலுவலகத்துக்கு எதிரே பல்லடம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இந்தச் சாலையில் பொதுமக்கள் மேற்கொண்ட மறியலால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு தெற்கு காவல் ஆய்வாளர் நெல்சன் தமைமையிலான போலீஸார் விரைந்து வந்தனர்.
போலீஸார் வருவதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக மறியலை கைவிட்டு ஆட்சியர் அலுவலகத்துக்குள் சென்றனர். அங்கு ஆட்சியர் கு.கோவிந்தராஜை சந்தித்து தங்களது வீடுகளுக்கு இலவசமாக பட்டா வழங்க வேண்டும் எனக் கோரி மனுவை அளித்தனர்
On Tuesday, March 17, 2015 by Unknown in ,    
காங்கயம் பகுதியில் தகுந்த விலை கிடைக்காததால், வயலில் விளைந்த தக்காளிப் பழங்கள் தற்போது கால்நடைகளுக்கு தீவனமாகி வருகின்றன.
இதுகுறித்து தக்காளி பயிர் செய்த வீரணம்பாளையம் விவசாயி தங்கராசு கூறியது: தக்காளி சாகுபடி செலவு அதிகரித்துள்ளது. உரம், பூச்சி மருந்து ஆகியவற்றின் விலையும் உயர்ந்துள்ளது. மாதக்கணக்கில் பயிர் செய்த தக்காளியை பறிப்பதற்கு ஆள்கள் கிடைப்பதில்லை. ஆள்கள் கிடைத்தாலும், கூலி அதிகமாக கேட்கிறார்கள். உற்பத்தி செய்த பொருள்களை சந்தைக்கு கொண்டு செல்ல ஆட்டோ வாடகை செலவு அதிகரித்து வருகிறது.
வெளிமார்க்கெட் தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தக்காளி விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. தக்காளிக்கு உற்பத்தி செலவைக் காட்டிலும், குறைவாக விலை கிடைக்கிறது. இதனால் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த தக்காளியை மாடுகளுக்கும் உணவாக அளித்து வருகின்றனர்.
விவசாயிகளின் இந்த அவல நிலையைப் போக்குவதற்கு அரசு போதிய அளவு குளிர்சாதன காய்கறி கிடங்கு வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றார்
On Tuesday, March 17, 2015 by Unknown in ,    
தாராபுரத்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் பா.செளதாமினி, சிறந்த பெண் எழுத்தாளருக்கான விருது பெற்றுள்ளார்.
திருப்பூர் மத்திய அரிமா சங்கத்தின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில், "எந்த செயலிலும் வெற்றி பெறுவது எப்படி' என்ற நூலை எழுதிய தாராபுரத்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் பா.சௌதாமினிக்கு ஜீவானந்தம் விருது வழங்கப்பட்டது.
எழுத்தாளர் சௌதாமினி, அவரது கணவர் பாலதண்டபாணி ஆகிய இருவரும் தாராபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
On Tuesday, March 17, 2015 by Unknown in ,    
சீரான குடிநீர் விநியோகிக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, ஆட்சியரிடம் பாஜக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து ஆட்சியரிடம் அக்கட்சியினர் திங்கள்கிழமை அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
திருப்பூர் மாநகராட்சி முதலாவது மண்டலத்துக்கு உள்பட்ட 11-ஆவது வார்டு ஈ.பி.காலனியில் உள்ள மேல்நிலைக் குடிநீர் தொட்டியிலிருந்து 8 நாள்களுக்கு ஒருமுறை 2 மணி நேரம் வீதம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், 8 நாள்கள் குடிநீரை சேமித்து வைத்தால், டெங்கு காய்ச்சலை உண்டாக்கும் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் எனக் கூறி, மாநகராட்சி நிர்வாகம் தாற்காலிகமாக ஒரு மணி நேரம் மட்டும் குடிநீர் விநியோகிக்கிறது.
இதன்படி, தொடக்கத்தில் 4 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது 8 நாள்களுக்கு ஒரு முறை ஒரு மணி நேரம் மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடமும், கவுன்சிலர்களிடமும் பலமுறை கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, 4 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
On Tuesday, March 17, 2015 by Unknown in ,    
திருப்பூரில் வேலைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு சென்ற இரு பெண்கள் உள்பட மூன்று பேரை காணவில்லை. இச் சம்பவம் தொடர்பாக, திருப்பூர் ஊரகம் மற்றும் மத்திய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் சந்திராபுரத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மனைவி முருகேஷ்வரி (36). இவர் அதே பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். ஞாயிற்றுக்கிழமை காலை வேலைக்கு செல்வதாகக் கூறி சென்ற முருகேஷ்வரி, மாலையாகியும் வீடு திரும்பவில்லை. தகவலறிந்த ராமமூர்த்தி, நண்பர்கள், உறவினர்கள் வீட்டில் விசாரித்துள்ளார். எனினும், அவரது மனைவியை குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லையாம். தொடர்ந்து, ராமமூர்த்தி கொடுத்த புகாரின்பேரில், திருப்பூர் ஊரக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இதே போல், தாராபுரம் சாலை கோயில் வழி பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜின் மகள் மகேஷ்வரி (22). அதே பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த 3 ஆம் தேதி வேலைக்கு சென்ற இவர், வீடு திரும்பவில்லை. இதுகுறித்து தங்கராஜ் கொடுத்த புகாரின்பேரில், திருப்பூர் ஊரக போலீஸார் விசாரணை நடத்துகின்றனர்.
பாளையக்காடு கே.வி.ஆர். நகரைச் சேர்ந்த வள்ளி என்பவரின் மகன் ரமேஷ் (28). பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை காலை வேலைக்கு செல்வதாகக் கூறிவிட்டு சென்றவர், வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மத்திய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்