Friday, September 21, 2018

On Friday, September 21, 2018 by Tamilnewstv in ,    



நேரு நினைவு கல்லூரி வணிக மேலாண்மையியல் சார்பில் "நீரின் பாதுகாப்பு மற்றும் சிக்கனம் பற்றிய விழிப்புணர்வு முகாம்"  வெள்ளக்கல்பட்டி கிராமத்தில் நடைபெற்றது. பேராசிரியர் கிருபாகரன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். மாணவர்கள் நீரின் மகத்துவம் மற்றும் நீர் சேமிப்பின் அவசியம் குறித்து நாடகம் மூலமாக விளக்கி கூறினர். மாணவர்கள் பிரேம் குமார் மற்றும் பிரகாஷ் நீரை சிக்கனமாக பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்து விவரித்தனர். மாணவர் கிருபா பிரகனேந்திரன் நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பயன் பெற்றனர்.இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வெள்ளக்கல்பட்டி பஞ்சாயத்தின் செயலர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ரவி ஆகியோர் செய்திருந்தனர்.

Wednesday, September 19, 2018

On Wednesday, September 19, 2018 by Tamilnewstv in ,    
திருச்சி – 18.09.18


திருச்சி பூம்புகார் விற்பனைமையத்தில் நவராத்திரி கொலு பொம்மைகள் கண்காட்சி தொடங்கியது – ஏராளமானோர் பார்வையிட்டு வாங்கிச்செல்கின்றனர்.
முக்கொம்பு மேலணை உடைப்பால் மூடப்பட்ட முக்கொம்பு சுற்றுலா மையம் விரைவில் திறக்கப்படும் - ஆட்சியர் பேட்டி.

தமிழகத்திலுள்ள கைவினைக் கலைஞர்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை விற்பனை செய்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் வகையில் பூம்பூகார் விற்பனைநிலையம் செயல்பட்டுவருகிறது. இதனிடையே தமிழக மக்களால் இல்லங்களில் நட்பை வளர்க்கும் விதமாகவும், சந்தோஷத்தை வெளிப்படுத்தும்விதமாக நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது. நவராத்திரி பண்டிகையையொட்டி திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் இன்று முதல் அக்டோபர் 20ம்தேதிவரை நடைபெறும் நவராத்திரி 'கொலுபொம்மைகள்' கண்காட்சி தொடங்கியது. இக்கொலு பொம்மைகள் கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் கு.ராஜாமணி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார். இக்கண்காட்சியில் சிறப்பு அம்சமாக பலவித கொலுபொம்மைகள், ராமாயண கதையை விளக்கும் பொம்மைகள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், கடவுள்கள், கொலு செட்டுகள், கொண்டபள்ளி பொம்மைகள், மரப்பாச்சி பொம்மைகள், காகிதக்கூழ், மண், பலிங்கு, மாக்கல், நவரத்தினகற்கள், மெழுகு, சந்தனமரம், நூக்கமரம் போன்ற பொருட்களால் ஆன பொம்மைகள், புதிய வரவுகள் என ரூ.50முதல் 25ஆயிரம் வரை இடம்பெற்றுள்ளது. கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த கொலு பொம்மைகளை ஏராளமானோர் பார்வையிட்டு பொருட்களை வாங்கிச்சென்றனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு ஆட்சியர் அளித்த பேட்டியில் முக்கொம்பு கொள்ளிடம் கதவணை சேதமடைந்து தற்காலிக பராமரிப்பு பணிகள் முழுஅளவில் முடிக்கப்பட்டு காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதுடன், 20ஆயிரத்து 152கனஅடி தண்ணீர் வரப்பட்டுள்ளது, கொள்ளிடத்தில் 700கனஅடி தண்ணீர் வெளியாகிறது. அதேபோன்று வாய்க்கால்பாசனத்திற்காக 500கனஅடிதண்ணீர் திறக்கப்படுவதுடன், நாளைமுதல் 200கனஅடி தண்ணீர் கூடுதலாக திறக்கப்படவுள்ளது. சம்பாசாகுடிக்கான தண்ணீர் உரியமுறையில் செல்ல பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுத்துவருகிறது. தண்ணீரை முழுவதும் நிறுத்துவதற்கான பணிகள் நடைபெற்றுவருகிறது. வடகிழக்குபருவமழைக்கு முன்னதாக கொள்ளிடத்தில் பாதுகாப்பானமுறையில் கண்காணிக்கவும், உரியமுறையில் வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. 410கோடி ரூபாய்க்கு கட்டப்படும் கதவணையின் பூர்வாங்கப்பணிகளுக்கான அறிக்கை தயாரிக்க ஆய்வுசெய்து தயரிக்கப்பட்டுவருவதுடன், அப்பணிகளும் விரைவில் முடிவடைந்து பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். தண்ணீர்வரத்து அதிகரித்து இருந்தாலேயே முக்கொம்பு கொள்ளிடம் உடைப்பு சரிசெய்யும் பணிகள் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், உடைப்பால் விவசாயத்திற்கும், தண்ணீர் விவசாயத்திற்கு செல்வதற்கும் எந்தவித தொடர்பும் இல்லையென ஆட்சியர் தெரிவித்தார். அதேநேரம் மேலணை உடைப்பால் மூடப்பட்ட முக்கொம்பு சுற்றுலா மையம் வருகிற சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பேட்டி : 1)திரு.கு.ராஜாமணி – மாவட்ட ஆட்சியர்

Tuesday, September 18, 2018

On Tuesday, September 18, 2018 by Tamilnewstv in ,    
திமுக சார்பாக மாவட்டத் தலைநகரங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


வைக்கிற இடத்தில் பணத்தை வைத்து விட்டார். கொள்ளையடித்த பணத்தை மடியில் கட்டிக் கொண்டா அலைகிறார். அதனால்தான் அமைச்சர் விஜயபாஸ்கர் மடியில் கனமில்லை வழியில்; பயமில்லை என சொல்கிறார் – திருச்சியில் கே.என்.நேரு பேச்சு.


அ.தி.மு.க ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்துகிடக்கிறது. பருப்பு மற்றும் முட்டை கொள்முதல், நெடுஞ்சாலைத்துறை டெண்டர், பொதுப்பணித்துறை மற்றும் நீர்நிலைகள் குடிமராமத்து செய்தல் என அனைத்திலும் ஊழல் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும்

குட்கா ஊழலில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல் துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்கியிருப்பது அம்பலமாகியுள்ளது. இந்த ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள்மீது, சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்களைக் கைதுசெய்ய வேண்டும்.மேலும், குட்கா ஊழலில் தொடர்புடைய அமைச்சர் விஜயபாஸ்கரை, அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும். அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

 தமிழக காவல்துறை தி.மு.க-வினர் மீது மட்டும் பொய் வழக்குப் போடுவதை வழக்கமாக வைத்துள்ளார்களே தவிர, அ.தி.மு.க-வினர் செய்யும் தவறுகளைக் கண்டும் காணாமல் விட்டுவிடுகிறது.

தேர்தலின்போது, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தற்காக என் மீதும் என் கட்சிக்காரர்கள் மீதும் போக்குவரத்து நெரிசலைக் காரணம் காட்டி வழக்குப்பதிவு செய்தார்கள் திருச்சி மாநகர காவல்துறையினர். அந்த வழக்கில் இருந்து நாம் தவறு செய்யவில்லை என்பதை நீதிமன்றம் மூலம் நிரூபித்து விடுதலை ஆகியுள்ளோம் என்றும் அண்ணா பிறந்தநாள் அன்று, நமக்கு ஒதுக்கிய நேரத்தில் பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கக் காத்திருக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால், அ.தி.மு.க மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர், பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடைஞ்சலாக வந்து மாலை அணிவித்தார்கள். ஆனால், போலீஸார் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி அ.தி.மு.க மற்றும் அ.ம.மு.க கட்சியினர்மீது சட்ட நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. மீண்டும் சொல்கிறேன், தி.மு.க ஆட்சிக்கு வந்தால் தவறுசெய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

 பி.ஜே.பி-யுடன் தி.மு.க ரகசியக் கூட்டணி வைத்திருப்பதாக மக்களவை துணைச் சபாநாயகர் தம்பிதுரை தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். அவர், தி.மு.க-வுக்கு உள்ள சிறுபான்மை மக்களின் ஆதரவைக் கெடுப்பதற்காகவே இப்படிப் பேசிவருகிறார். தி.மு.க எப்போதும் சிறுபான்மையினர் பாதுகாவலனாக இருக்கும். ஒருபோதும் சிறுபான்மை மக்களை நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம்.

தம்பிதுரை, மத்திய அமைச்சர் பதவி கிடைக்காத விரக்தியில் பி.ஜே.பி-யைப் பழிவாங்குவதற்காக இப்படிப் பேசிவருகிறார். அவர், பலமுறை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை, விமானம் மற்றும் விமான நிலையங்களில் சந்தித்துள்ளார். இதனால், தி.மு.க-வுக்கும் தம்பிதுரைக்கும் தொடர்பு உள்ளது என்று கூற முடியுமா? என்றும்

 பி.ஜே.பி தேசியச் செயலாளர் ஹெச் ராஜா, தொடர்ந்து வரம்பு மீறிப் பேசிவருகிறார். அவர்மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார் மேலும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  வடக்கு மாவட்டச் செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, லால்குடி சௌந்தரபாண்டியன், துறையூர் ஸ்டாலின் குமார் மற்றும் திமுக தொண்டர்கள்
 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
On Tuesday, September 18, 2018 by Tamilnewstv in ,    
திருச்சி இந்திரா கணேசன் பொறியியல் கல்லுரியில் மேலாண்மைத் துறை சார்பாக மாணவர்கள் ஒருங்கிணைப்பாளர் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக  ITC கம்பெனியின் தொழிற்சாலை மேலாளார் திரு. சரவணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இதில் மாணவர்களுக்கு மேலாண்மையை எவ்வாறு மேம்படுத்துவது என்பது தொடர்பான கருத்துகளை எடுத்துரையாற்றினார்.
 நிகழ்ச்சியின் போது இரண்டாமாண்டு மாணவர்கள் முதலாமாண்டு மாணவர்களுக்கு பதவிப் பரிமாற்றம் செய்து கொடுத்தார்கள்.
இந்த நிகழ்ச்சியில் கல்லூரி நிர்வாகம் சார்பில் செயலாளர் திரு. ராஜசேகரன், இயக்குனர் திரு. பாலகிருஷ்னன், முதல்வர் திரு. பாரதிராஜா,துறைத் தலைவர் திரு. தியாகராஜன் மற்றும் துறை பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.

On Tuesday, September 18, 2018 by Tamilnewstv in    
திருச்சி
18.09.2018
 
 தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கைத்திறத்தொழில்கள் வளர்ச்சி கழகத்தின் , பூம்புகார் விற்பனை நிலையம் திருச்சி சிங்காரதோப்பில்  மாநகர மக்களின் பேராதரவோடு 44 வருடங்களை வெற்றிகரமாக கடந்து 45 வது வருடத்தில் அடிஎடுத்து வைக்கிறது என்பதை மகிழ்வோடு தெரிவிப்பதோடு வழமைபோல் இவ்வாண்டும் வருகின்ற நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு 18.09.2018  முதல் 20.10.2018 வரை (ஞாயிறு உட்பட) கொலு கண்காட்சி நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
இக்கண்காட்சியின் சிறப்பு அம்சமாக பலவித கொலு பொம்மைகள், கொலு செட்டுகள், கொண்டபள்ளி  பொம்மைகள், மரபாச்சி பொம்மைகள், காகிதக்கூழ் பொம்மைகள், மண், பளிங்குக்கல், மாக்கல், நவரத்தின கற்களினாலான பொம்மைகள் குறைந்த பட்சமாக ரூ.50 முதல் ரூ.25000 வரை இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

இக்கண்காட்சியை திரு.கு.இராசாமணி,இ.ஆ.ப.,மாவட்டஆட்சித்தலைவர்,    திருச்சிராப்பபள்ளி,அவர்கள் 18.09.2018 செவ்வாய் கிழமை அன்று மாலை 6.00  மணியளவில் குத்துவிளக்கேற்றி கண்காட்சியை துவக்கி வைத்தார்கள்.
இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ள பொம்மை செட்டுகள்:
                 அஷ்ட பைரவர் செட், நவதுர்கா வாகனம், கிராமிய விளையாட்டுகள் செட், வேத மூர்த்திகள் செட், கார்த்திகை தீபம், கள்ளழகர் செட், கல்யாண ஊர்வலம்,  கிரிக்கெட், சஞ்சீவி செட், பெருமாள் ஊர்வலம் செட், நவ கண்ணிகள் செட், பானைகிருஷ்ணன் செட், தசாவதாரம் செட், அஷ்டலக்ஷ்மி செட், கயிலாய மலைசெட், கார்த்திகை பெண்கள் செட், ஸ்ரீரங்கம் செட், அன்னபூரணி செட்,          விநாயகர் செட், மஹாலக்ஷ்மி வரம் செட், மாயா பஜார் செட்,                             சீனிவாச கல்யாணம் செட், மீனாட்சி கல்யாணம் செட், மும்மூர்த்தி செட், ராமர் பட்டாபிஷேகம் செட், தாத்தா பாட்டி செட், பெருமாள் தாயார் செட்,
    ராமர் பாலம் செட், சுக்ரீவர் பட்டாபிஷேகம் செட், கனகதாரா செட், முருகர் உபதேசம் செட், கஜேந்திர மோட்ஷம் செட், மாங்கனி செட், கீதா உபதேசம் செட், ஜோதிர்லிங்கம் செட், பரத நாட்டியம் செட், அசோகவனம் செட், பீஷ்மர் அம்பு படுக்கை செட், கனையாழி செட், ஆழ்வார் செட், கோபியர் டான்ஸ் செட், விவசாய செட், தட்டாங்கி செட், ஜடாயு மோட்சம் செட், ராமர் செட், அகலியா சாப விமோட்சம் செட் முதலான பொம்மைகள்  கல்கத்தா, மணிபூர், இராஜஸ்தான், ஒரிஸா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் பிற மாநிலங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட பொம்மைகள், எண்ணற்ற தனி பொம்மைகளும் பலவிதமான மாடல்களில் வண்ணங்களில் இடம் பெற்றுள்ளன.
              இக்கண்காட்சியில் காட்சிக்கும் விற்பனைக்கும் உள்ள பல்வேறு மாநிலங்களிலிருந்து தருவிக்கப்பட்டுள்ள அழகிய கொலு பொம்மைகளை திருச்சி மாநகர மக்கள் வாங்கி தங்கள் இல்லத்திற்கு அழகூட்டி, வரும் நவராத்திரி பண்டிகையை சிறப்பாக கொண்டாடி மகிழ அன்புடன் அழைக்கின்றோம்.
     என பூம்புகார் சார்பாக மேலாளர் தெரிவித்தார்

Thursday, September 13, 2018

On Thursday, September 13, 2018 by Tamilnewstv   
திருச்சி      13.09.18



திருச்சி மலைக்கோட்டை

உச்சிப்பிள்ளையாருக்கு பிரம்மாண்ட கொழுக்கட்டை படையல்


விநாயகர் சதுர்த்தியையொட்டி திருச்சி மலைக்கோட்டையில் 150 கிலோ எடையில் பிரம்மாண்ட கொழுக்கட்டை தயாரிக்கப்பட்டு மாணிக்க விநாயகருக்கும், உச்சிப் பிள்ளையாருக்கும் படையலிடப்பட்டது.





திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயிலில் மாணிக்க விநாயகர் மற்றும் மலை உச்சியில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயில்கள் மிகவும் பிரசித்தமானவை. ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா இந்த கோயில்களில் சிறப்பாக நடை பெறும்.




இந்த ஆண்டு, விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி 150 கிலோ எடையில் கோயிலின் மடப்பள்ளியில் பிரம்மாண்டமான கொழுக் கட்டை தயார் செய்யும் பணி இருதினங்களாக நடைபெற்று வந்தது. இதனை சரிபாதியாகப் பிரித்து மாணிக்க விநாயகருக்கும், உச்சிப் பிள்ளையாருக்கும் படையல் செய்யப்பட்டது.

கோயிலின் மடப்பள்ளியில் இருந்து இந்த பிரம்மாண்ட கொழுக்கட்டையை துணியில் மூட்டையாகக் கட்டி தொட்டில் போன்று வைத்து அதனை உச்சிப் பிள்ளையார் சன்னதிக்கு தூக்கிச் சென்றனர்.

கொழுக்கட்டை படையல் போடப்பட்டு,மகா தீபாராதனை நடைபெற்ற பின்னர், அங்கு கூடியிருந்த பக்தர்களுக்கு கொழுக்கட்டை பிரசாதம் வழங்கப்பட்டது.

Wednesday, September 12, 2018

On Wednesday, September 12, 2018 by Tamilnewstv   

திருச்சி உறையூர் ராமலிங்கநகர் விவிட் மாண்டஸரி மழலையர் பள்ளியில் இயற்கையையும், சுற்றுசூழலையும் பாதுகாக்கும் புதிய முயற்சியாக விதை விநாயகர் சதுர்த்தி விழாவினை இன்று உற்சாகமாக கொண்டாடினர்.
புவி வெப்பமடைவதை தடுக்கவும், மழை வளம் பெறவும் மரம், செடிகள் அதிகம் வளரவேண்டி பள்ளி-கல்லூரி விழாக்கள், அரசு விழாக்கள், குடும்ப விழாக்கள் மட்டுமல்லாது இயற்கையை போற்றி பாதுகாத்திட பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களுடன் செடிகளை கொடுத்து வருவது அறிந்த ஒன்று.

அதேபோல் பல்வேறு பள்ளி கல்லூரிகளில் மாணவ மாணவிகளின் உதவியுடன் விதைப்பந்துகளை தயாரித்து வயல் வெளிகளிலும், ஆற்றங்கரைகளிலும், சமவெளிகளிலும் சமூக ஆர்வலர்கள் தூவி வருகின்றனர். மழைக்காலம் வரும் சமயம் இதுவென்பதால் அவைகளாகவே நீர் கிடைக்கப்பெற்றபின் வனங்களாக மாறும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது.
அந்தவகையில் நாளை நடக்கவிருக்கின்ற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று விவிட் பள்ளியில் பயிலும் மாணாக்கர்களுக்கு இயற்கையை நேசிக்கும் சிந்தனையையும், முன்னோர்கள் கடைபிடிக்கும் இந்த விழாக்களின் முக்கியத்துவத்தையும் உணர்த்திடும் வகையில் களி மண்ணால் தத்தம் கரங்களால் விநாயகரை வடிவமைக்க வைத்து அந்த விநாயகர் சிலைகளில் வெண்டை, பாகற்காய், அவரை, கீரை வகைகளின் விதைகள், வெள்ளரி பிஞ்சுகளின் விதைகளை பதித்து அவரவர் வீடுகளுக்கு கொடுத்து மரம், செடி கொடிகளின் விதைகளை மாணவர்களும் பெற்றோர்களும் தத்தம் இல்லங்களில் விதைக்கும் புதுவித விழிப்புணர்வினை இன்று ஏற்படுத்தியிருக்கின்றனர்.
மேலும், இந்த விநாயகர் உருவங்களை வடிவமைத்த மழலையர்கள் மனதில் பெரும் உற்சாகமும், பொற்றோர்கள் மனதில் பரவசமும் உச்சமாகத்தான் இருந்தது என்றும், இந்த விநாயகர் சிலைகளை தத்தம் வீடுகளிலேயே சிறிய டப்பாக்கள், மண் பாண்டங்களில் 3-வது நாள் கரைத்து சிறிதளவு மண் சேர்த்து விட்டால் விரைவில் இந்த விநாயகர்கள் செடியாய், கொடியாய், மரமாய் இல்லங்களை அலங்கரிப்பார்கள் எனவும் பள்ளி நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விவிட் பள்ளியின் தாளாளர் கமலசரஸ்வதி, முதல்வர் கல்பனா பாலாஜி, ஆசிரியை ஜாஸ்மின் மற்றும் அலுவலக உதவியாளர் மலர்க்கொடி ஆகியோர் செய்திருந்தனர்.
On Wednesday, September 12, 2018 by Tamilnewstv   




 திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில்
விநாயகர் சதுர்த்திக்காக ராட்சத கொழுக்கட்டை தயாரிக்கும்  பணி நாளை தொடங்குகிறது
மலைக்கோட்டை

திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு  உச்சிப்பிள்ளையார்ää மாணிக்க விநாயகருக்காக 150 கிலோவில் தயாரிக்கப்படும் ராட்சத கொழுக்கட்டை தயாரிக்கும் பணி நாளை தொடங்குகிறது.
மலைக்கோட்டை கோவில்
தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் மிகப்பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். ரத்தினாவதி என்ற பெண்ணுக்கு சிவபெருமான்  அவள் தாய் வடிவில் வந்து சுகப்பிரசவம் செய்த தலம். ஆகையால் இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தாயுமானசுவாமி என்று அழைக்கப்படுகிறது. இந்த மலைக்கோட்டை கோவிலில் அடிவாரத்தில் மாணிக்க விநாயகரும்ää மலையின் உச்சியில் உச்சிப்பிள்ளையாரும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்து வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி விழா
இந்த மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை ஒவ்வொரு வருடமும்  மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.  இந்த வருடத்திற்கான விநாயகர் சதுர்த்தி விழா வரும் வியாழக்கிழமை 13-ந்தேதி காலை 9 மணிமுதல் 10.30 மணிக்குள் நடைபெறுகிறது. இந்த விழாவிற்காக 150 கிலோவில் மிக பிரமாண்டமான கொழுக்கட்டை தயாரிக்கும் பணி நாளை காலை (புதன் கிழமை) தொடங்குகிறது. இந்த கொழுக்கட்டை தயாரிப்பதற்கான அனைத்து வேலைகளும் இன்று ஆரம்பிக்கப்பட உள்ளது.
கொழுக்கட்டை தயாரிக்க
இதில் கொழுக்கட்டை தயாரிப்பதற்காக தேங்காய்,பச்சரிசி மாவு, வெல்லம், ஏலக்காய்,நெய், பருப்பு உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி ராட்சத கொழுக்கட்டை தயாரிக்கப்படும்.

 இதற்கான ஏற்பாடுகளை  இணை ஆணையர் கல்யாணி கோவில் உதவி ஆணையர் விஜயராணி  மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர் .
இந்த விநாயகர் சதுர்த்தி விழா வரும் 13-ந்தேதி தொடங்கி  26-ந்தேதி வரை 14 நாட்கள் நடைபெற உள்ளது.
On Wednesday, September 12, 2018 by Tamilnewstv in ,    
திருச்சியில் இந்து முன்னணி மாநில


பொதுச்செயலாளர் முருகானந்தம் பேட்டி

விநாயகர் சதுர்த்தி விழாவிற்கான கட்டுபாடுகளை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும்.


 விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் உள்ள பட்டி, தொட்டி எங்கும்  கொண்டாடக்கூடிய மிகச் சிறப்பான ஒரு விழா. இந்த விழாவிற்கு இந்த வருஷம் அரசாங்கம் இதுவரை இல்லாத அளவில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மின்சார துறையில் அனுமதி பெற வேண்டும். இட உரிமையாளரிடம் அனுமதி பெற வேண்டும். மாசுக்கட்டுப்பாடு அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும் என்று தமிழக அரசு ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. உடனடியாக இவைகளை பெற வேண்டுமென்றால் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே பெற முடியும். இதற்காக பல ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்ய நேரிடும். இந்த விழாவை சிறு குழந்தைகள் முதல் அனைவரும் கொண்டாடுகின்றனர். அதனால் இந்த கட்டுப்பாடுகளை அரசாங்கம் உடனடியாக எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி அதனால் நாளை ( இன்று) காலை சென்னை சேப்பாக்கத்தில் இந்து முன்னணி மாநில தலைவர் சுப்பிரமணியன் உண்ணாவிரதம் இருக்க உள்ளார். நாளை (இன்று) மாலைக்குள் தமிழக அரசு ஒரு சரியான முடிவை இந்த விவகாரத்தில் எடுக்கவில்லை என்றால். நாளை மறுநாள் புதன்கிழமை தமிழகம் முழுவதும் பெரிய அளவில் போராட்டங்களை நடத்த உள்ளது. இந்த விழாவை கொண்டாட எத்தனை தடைகள் வந்தாலும் சரி, எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் சரி அவற்றை போராடி நிச்சயமாக வெற்றிகரமாக இந்த விநாயகர் சதுர்த்தி விழா நடத்துவோம். விநாயகருக்கு தீங்கு செய்பவர்கள் நல்லா இருந்ததா சரித்திரமே கிடையாது. அதனால இந்த அரசாங்கமானது இந்த விநாயகர் சதுர்த்தி விழா நடத்துவதற்கு இவ்வளவு தடைகள் போடுவதை உடனடியாக வாபஸ் வாங்க வேண்டும். கடந்த ஆண்டு எவ்வாறு இந்த விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது, அதேபோல இந்த ஆண்டும் நடைபெற தமிழக அரசு வழிவகை செய்யவேண்டும் என்று கூறினார். முன்னதாக விநாயகர் சதுர்த்தி விழா முடிந்து, விநாயகர் சிலைகளை கரைக்கப்படும் திருச்சி காவிரி பாலம் பகுதியில் மேடை அமைக்கும் இடத்தை பார்வையிட்டார். அப்போது இந்து முன்னணி மாநகர நிர்வாகிகள் ஆறுமுகம் உட்பட பலர் உடன் இருந்தனர்.