Wednesday, September 12, 2018
விநாயகர் சதுர்த்திக்காக ராட்சத கொழுக்கட்டை தயாரிக்கும் பணி நாளை தொடங்குகிறது
மலைக்கோட்டை
திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உச்சிப்பிள்ளையார்ää மாணிக்க விநாயகருக்காக 150 கிலோவில் தயாரிக்கப்படும் ராட்சத கொழுக்கட்டை தயாரிக்கும் பணி நாளை தொடங்குகிறது.
மலைக்கோட்டை கோவில்
தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் மிகப்பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். ரத்தினாவதி என்ற பெண்ணுக்கு சிவபெருமான் அவள் தாய் வடிவில் வந்து சுகப்பிரசவம் செய்த தலம். ஆகையால் இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தாயுமானசுவாமி என்று அழைக்கப்படுகிறது. இந்த மலைக்கோட்டை கோவிலில் அடிவாரத்தில் மாணிக்க விநாயகரும்ää மலையின் உச்சியில் உச்சிப்பிள்ளையாரும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்து வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி விழா
இந்த மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை ஒவ்வொரு வருடமும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த வருடத்திற்கான விநாயகர் சதுர்த்தி விழா வரும் வியாழக்கிழமை 13-ந்தேதி காலை 9 மணிமுதல் 10.30 மணிக்குள் நடைபெறுகிறது. இந்த விழாவிற்காக 150 கிலோவில் மிக பிரமாண்டமான கொழுக்கட்டை தயாரிக்கும் பணி நாளை காலை (புதன் கிழமை) தொடங்குகிறது. இந்த கொழுக்கட்டை தயாரிப்பதற்கான அனைத்து வேலைகளும் இன்று ஆரம்பிக்கப்பட உள்ளது.
கொழுக்கட்டை தயாரிக்க
இதில் கொழுக்கட்டை தயாரிப்பதற்காக தேங்காய்,பச்சரிசி மாவு, வெல்லம், ஏலக்காய்,நெய், பருப்பு உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி ராட்சத கொழுக்கட்டை தயாரிக்கப்படும்.
இதற்கான ஏற்பாடுகளை இணை ஆணையர் கல்யாணி கோவில் உதவி ஆணையர் விஜயராணி மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர் .
இந்த விநாயகர் சதுர்த்தி விழா வரும் 13-ந்தேதி தொடங்கி 26-ந்தேதி வரை 14 நாட்கள் நடைபெற உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சியில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி திருச்சி வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி அருகில் தமிழ்நாடு க...
-
கொடுமுடி அருள்மிகு மகுடேஸ்வரர் வீரநாராயண பெருமாள் கோவிலில் மண்டலாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மகுடேஸ்வரர்–வீரநாராயண பெருமாளுக்...
-
ஈரோடு மாவட்டத்தில் யூரியா உரம் தட்டுப்பாட்டால் விவசாயிகள் பெரிதும் அவதி அடைந்து உள்ளனர். எனவே வேளாண்மைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என...
-
மதுரை மாவட்டம் மருத்துவ கல்லூரியில் (MEDI -EXPO 2014 ) மருத்துவ விழிப்புணர்வு கண்காட்சி மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் சுப்பிரமணியன் அவர்கள் இ...
-
திருப்பூர் வடக்கு ஒன்றியம் பொங்குபாளையம் ஊராட்சி பள்ளிபாளையம் மாகாளியம்மன் கோவில் திடலில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா பொய் வழக்கில் இருந்து...
-
படிப்பு விஷயத்தில் பெற்றோர் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமியை அவிநாசி அருகே புதன்கிழமை மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்...
-
சுய உதவிக் குழு வங்கிக் கடன் திட்டத்தைத் மிகச் சிறப்பாக செயல்படுத்தும் தனியார் வங்கியாக தமிழ்நாடு மெர்க்கன்டை வங்கி தேர்வு செய்யப்பட்...
-
சென்னை புறநகரில் அ.தி.மு.க.வினர் மொட்டை அடித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நந்தம்பாக்கத்தில் மேயர் சைதை துரைசாமி பங்கேற்றார். அ...

0 comments:
Post a Comment