Friday, March 22, 2019

On Friday, March 22, 2019 by Tamilnewstv   


அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி நாடாளுமன்ற வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் திருச்சி தொகுதிக்கு உட்பட்ட முக்கியஸ்தர்களை சந்தித்து வருகின்றார் சிஎஸ்ஐ திருச்சபை பேராயர் சந்திரசேகரன் அவர்களிடம் சந்தித்து ஆசி பெற்றார் திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் அவைத்தலைவர் சாத்தனூர் ராமலிங்கம் ஜங்சன் பகுதி செயலர் தன்சிங் வழக்கறிஞர் சரவணன் மகளிர் அணி செயலாளர் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் உட்பட பல நிர்வாகிகள் ஆதரவு கோரினார்கள்.
On Friday, March 22, 2019 by Tamilnewstv in ,    



திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் பிரச்சாரம்

அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி நாடாளுமன்ற வேட்பாளர் சாருபாலா தொண்டைமான்  திருச்சி மாவட்டம் வரகனேரி  அல்முஹம்மதியா பள்ளிவாசல் முன்பு இஸ்லாமியர்களிமும் அவைத் தலைவர் ஹாஜி அல்லாஹ் மஸ்ஜித் இமாம் பஸ்ஸின் தாவூது ஆகியோரிடம் ஆதரவு கோரினார்

.திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் sdpi சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா கட்சி தலைவர் அரசன் செயலாளர் ரபீக் முபாரக் அவைத்தலைவர் சாத்தனூர் ராமலிங்கம் அரியமங்கலம் பகுதி செயலாளர் சரவணன் ஜங்சன் பகுதி செயலர் தன்சிங் பாலக்கரை பகுதி செயலாளர் கண்ணன் பொன்மலை பகுதி செயலாளர் சங்கர்  ஏர்போர்ட் பகுதி செயலாளர் ரமேஷ்  உறையூர் பகுதி செயலாளர் சதீஷ் அம்மா பேரவை செயலாளர் சரவணன் செயற்குழு உறுப்பினர் ராமமூர்த்தி இணைச் செயலர் சேட் லதா வழக்கறிஞர் அணி இணைச் செயலர் கோபி செழியன் மகளிர் அணி செயலாளர் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் இலக்கிய அணி செயலாளர் வரதராஜன் பொறியாளர் அணி செயலர் விக்னேஷ் உட்பட பல நிர்வாகிகள உடனிருந்தனர்.

Thursday, March 14, 2019

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனைக்கு தேசிய தர நிர்ணய அங்கீகாரம் பெற்றுள்ளது


ஜோசப் கண் மருத்துவமனை 1934 ஆம் ஆண்டு டாக்டர் ஜோசப் என்பவரால் நிறுவப்பட்டு இன்று வரை நடந்து கொண்டிருக்கிறது இம்மருத்துவமனைக்கு தேசிய தர நிர்ணய நிறுவனம் தன் மருத்துவ இறுதிநிலை அங்கீகாரச் சான்றிதழ் வழங்கியுள்ளது

மருத்துவமனையில் கண் பரிசோதனை மற்றும் கண் சம்பந்தப்பட்ட அனைத்து முறையான குறைபாடுகளும் நோய்களும் சிறந்த முறையில் தீர்வும் சிகிச்சை வழங்கப்படுகிறது அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இயந்திரங்கள் மூலமாக கண் பரிசோதனை செய்யப்பட்டு அதற்கேற்ற சரியான வழிமுறைகள் மேற்கொள்ளப்படுகிறது என்றும் கண் மருத்துவ சேவைகளில் முன்னோடியாக செயல்பட்டு வரும் ஜோசப் கண் மருத்துவமனை தென் தமிழகத்தில் முதல் கண் மருத்துவமனை ஆக இந்த உயரிய அங்கீகாரத்தை பெற்றுள்ளது கூட்டு முயற்சியோடு 300க்கும் மேற்பட்ட கடினமான தகுதிகளை நிவர்த்தி செய்து ஆய்வாளர்களால் பன்முறை ஆய்வு செய்தபின் இந்த தரச்சான்றிதழ் கிடைக்கப்பெற்றுள்ளது இந்த நிறுவனத்தில் ரூபாய் 2 கோடி செலவில் 6 அறுவை சிகிச்சை அரங்குகள் உலகத் தரத்திற்கு ஏற்ப நவீனமயமாக்கப்பட்டு உள்ளது தீயணைப்பு கருவிகள் பொருத்தப்பட்டு பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது இவற்றோடு சர்வதேச நோயாளிகள் கொள்கை ஜோசப் கண் மருத்துவமனை பின்பற்றி வருகிறது என்று தெரிவித்தனர்
On Thursday, March 14, 2019 by Tamilnewstv in ,    
உலக சிறுநீரக தினம் 2019
அப்போலோ மருத்துவமனை சார்பாக திருச்சியில் நேற்று உலக சிறுநீரக தினம் கொண்டாடப்பட்டது .ஒவ்வொரு வருடமும் உலக சிறுநீரக தினம் மார்ச் மாதம் இரண்டாம் வியாழக்கிழமையன்று கொண்டாடப்ப டும்.



 “இந்தாண்டு எல்லோருக்கும் எல்லா இடங்களிலும்” சிறுநீரக ஆரோக்கியம் என்ற அடிப்படை கருத்தை கொண்டு கொண்டாடப்படுகிறது .ஒவ்வரு ஆண்டும் சுமார்   எட்டு லட்சம் பேர் நிரந்தர  சிறுநீரக நோயால் பாதிக்க படுகின்றனர் ..இதில் பத்து சதவிகிதம் மக்கள் சிகிச்சை மேற்கொள்கின்றனர் .மேலும் அவர்களில் ஒன்று முதல் இரண்டு சதவிகித மக்கள் மட்டும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள படுகிறது. இதில் சிறுநீரக நோய் குறித்தும் அது வராமல் தடுப்பது பற்றியும் மேலும் உணவு முறைகள் குறித்தும் கருத்து வலிவுறுத்தப்பட்டது



.இவ்விழாவில் முதன்மை சிறுநீரக சிறப்பு மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சு. வேல் அரவிந்த் மற்றும் சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அழகப்பன், டாக்டர் எல்.மகேந்திர வர்மன் ஆகியோர் பங்கு பெற்றனர் . மேலும் மருத்துவ மனையின் துணை மருத்துவ சேவை இயக்குனர் டாக்டர் செந்தில் குமார் அவர்கள் வரவேற்புரை உரையாற்றினார் மற்றும் டாக்டர் எல்.மகேந்திர வர்மன் நிறைவுரை நிகழ்த்தினார். இதில் சிறுநீரக நோய் பாதிக்க பட்டவர்கள், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களும் பங்கு பெற்று பயன்  பெற்றனர், இத்துடன் சிறுநீரகம் தானம் செய்தவர்களுக்கு கெளரவப்படுத்தப்பட்டது.
அப்போலோ சிறப்பு மருத்துவமனையின் நிறுவனரும் / தலைவருமாகிய மருத்துவர் பிரதாப் சி ரெட்டி அவரகள் குறிக்கோள் வாசகத்திற்கேற்ப, திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனை "தொற்ற நோய்" (NCD) ஒழிப்பு சம்பந்தமாக தொடர்ந்து இயங்கி வருகிறது.
இம்மருத்துவமனையில் 50 இக்கும் மேற்பட்ட சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது, சிறுநீரகம் தானம் செய்தவர்களை கெளரவப்படுத்தி சான்றிதழ் வழங்கப்பட்டது. இம்மருத்துவமனையின் சிறப்பம்சமாக திருச்சி மாவட்டத்தில் முதன்முறையாக நுண்துளை (Laparoscopic) முறையில் தானம் செய்பவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இம்முறையில் அறுவைசிகிச்சை மேற்கொள்வதால் உறுப்பு தானம் மேற்கொள்பவரின் மருத்துவமனை இருப்பு குறைக்கப்பட்டு, விரைவில் வீடு திரும்ப நேரிடுகிறது.
சிறுநீரக பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து விட்டால் மருந்து மாத்திரையிலேயே குணப்படுத்தி விடலாம். ஆனால் சிறுநீரக பாதிப்பின் அறிகுறியாக வலியும், தொந்தரவு எதுவும் நோயாளிக்குத் தெரியாது என்பதால் அதனை ஆரம்ப நிலையில் கண்டு பிடிப்பது மிக கஷ்டம். உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு என மருத்துவரிடம் சென்றால் அவரும் சிறுநீரக பரிசோதனை செய்ய சொல்வதில்லை. முழுதுமாக சிறுநீரகம் செயல் இழந்தப் பிறகுதான் பின்னரே சிறுநீரக நிபுணரிடம் (Nephrologist) போகிறார்கள்.
On Thursday, March 14, 2019 by Tamilnewstv in ,    
உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு  திருச்சி  ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் சிறுநீரக நோய்கள் தடுப்பு முறை மற்றும் ஆரம்பநிலை சிகிச்சை முகாம் நடைபெற்றது.

 சிறுநீரக தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதே போல் இந்த ஆண்டும் சிறுநீரக நோய்கள் தடுப்பு முறை மற்றும் ஆரம்பநிலை சிகிச்சைக்கான முகாம் நாளை பரண்ட்லைன் மருத்துவமனையில் மருத்துவ மனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

இம்முகாமில் சிறுநீரக பாதிப்புகளான சிறுநீரில் புரதசத்து கசிவு, ரத்த டயாலிசிஸ், பெரிடோனியல் டயாலிசிஸ், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளுக்கான ஆலோசனை, தற்காலிக சிறுநீரக செயலிழப்பு, நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு  மற்றும் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், இரத்தம் கலந்து சிறுநீர் போவது, சிறுநீரில் கிருமித் தொற்று, சிறுநீரக கல் தொந்தரவு, கட்டுப்பாடின்றி சிறுநீர் கசிவு, சிறுநீரகப் புற்றுநோய் போன்ற நோய்களுக்கு சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.

சிறுநீரக சிறப்பு மருத்துவர் மற்றும் மாற்று சிறுநீரக மருத்துவ ஆலோசகர் டாக்டர் எஸ் கந்தசாமி, டாக்டர் எஸ் பாலமுருகன், சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் என் கார்த்திகேயன் ஆகியோர் கலந்துகொண்டு இலவச ஆலோசனை வழங்குகினார்கள்.

மேலும் முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் யூரியா கிரியேட்டின், யூரின் ரொட்டின், ரேண்டம் பிளட் சுகர் ஆகிய பரிசோதனைகள் செய்யப்பட்டது.

தேவைப்படும் நபர்களுக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்யப்பட்டது.  இம்முகாமில் 75க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். முகாமில் முதலமைச்சரின்  விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அறுவைச் சிகிச்சைக்காக 25 பேர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். முகாம் ஏற்பாடுகளை மக்கள் தொடர்பு அதிகாரிகள் கதிரவன், உதய பாஸ்கர் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் செய்திருந்தனர் .

Saturday, March 09, 2019

On Saturday, March 09, 2019 by Tamilnewstv   


திருச்சி மக்கள் அரசு கட்சி தலைவர் பேட்டி
கட்சித் தலைவர் பேட்டி



இதுநாள்வரை 22 நாட்கள் ஆன பிறகும் அவர் எங்கு இருக்கிறார் என்ன ஆனார் என்று எந்த பதிலும் இல்லை நீதிமன்றத்திலே வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது.பல்வேறு கட்சித் தலைவர்களும் அமைப்புக்களும் போராட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் குறிப்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அதைப்போல விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மதிமுக தலைவர் வைகோ அவர்கள் எதிர்க்கட்சி தலைவர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் போன்றவர்கள் தொடர்ச்சியாக முகிலனை கண்டுபிடித்துக் கொடுக்க வேண்டும் என்ற நிலை பற்றி அறிவித்திட வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தியும் கூட தமிழ்நாட்டினுடைய அதிமுக அரசு எடப்பாடி தலைமையிலான இந்த அரசு மெத்தனமாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது குறிப்பாக இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போதும் கூட நான் என்ன நானே சென்று அவர் என்ன தேட முடியும் என்று மிகவும் கேலியும் நக்கலும் ஒரு பதிலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்து இருப்பது என்பது இந்த தமிழ்நாடு மக்கள் மீதும் குடிமகன் மீதும் அவருக்கு அக்கறை இல்லை என்பதைத்தான் காட்டுகிறது அந்த அடிப்படையில் உடனடியாக பல்வேறு நபர்களை இதுபோல குறிப்பாக சொன்னால் 1980களில் மக்களுக்காக போராடிய அப்பு என்பவர் காணாமல் போய்விட்டார் என்று சொல்லி இதனால் வரை அவர் என்ன ஆனார் என்று தெரியவில்லை ஆனால் உண்மையில் நடந்தது அவர் படுகொலை செய்யப்பட்டு அவர் தீர்த்துக்கட்டிய பட்டு விட்டார் என்பது உண்மை ஆனால் இதுவரை அரசு ஆவணங்களில் அரசு ரெக்கார்டில் என்ன இருக்குன்னு சொன்னாங்க அப்போது காணாமல் போய்விட்டார் அதேபோல மூத்த வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சங்கரசுப்பு அவருடைய மகன் காணாமல் போனார் அவருடைய உடல்நிலை உயிரற்ற உடலம் மீட்கப்பட்டது திருச்சியில் அவருடைய முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் காணாமல் போனார் அவர் உடல் உயிரற்று மீட்கப்பட்டது இதுபோல ஆனால் இதுவரை கொலையாளிகள் யார் என்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை அந்த வரிசையில் முகிலனும் சேர்ந்து விடுவார்கள் என்ற அச்சம் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் நிலவிக்கொண்டிருக்கிறது அந்த கம்பெனிக்கு ஆதரவாக ஸ்டெர்லைட் கம்பெனிக்கு ஆதரவாக கார்ப்பரேட் முதலாளிகள் கூட்டு சேர்ந்து எடப்பாடி பழனிச்சாமி அரசு முடித்து விட்டார்களோ என்று அவருடைய உயிருக்கு ஒரு ஆபத்தை ஏற்படுத்தி விட்டது என்கிற ஐயம் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது ஆகவே தமிழ்நாடு அரசு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு உடனடியாக முகிலனை குறித்த உண்மைத் தகவலை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் முகிலன் எங்கு இருக்கிறார் என்ன ஆனார் என்று மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் உடனடியாக கண்டுபிடித்து தரவேண்டும் என்று மக்கள் அரசின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்



பேட்டி மக்கள் அரசுக் கட்சி தலைவர் ரஜினிகாந்த் வழக்கறிஞர்

Friday, March 08, 2019

On Friday, March 08, 2019 by Tamilnewstv   
திருச்சி


திருச்சியில்

மகா சிவராத்திரி மற்றும் மீனாட்சி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.


ஸ்ரீ பகவன் நாம பிரச்சார சேவா மண்டலி சார்பில்   11ஆம் ஆண்டு மகா சிவராத்திரி மற்றும் மீனாட்சி திருக்கல்யாண

3 நாள் வைபவம் திருச்சி திருவானைக்காவல் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் துவங்கியது.

முதல் நாள் காலை

6 மணி அளவில் மகாகணபதி ஹோமம் அதனைத்தொடர்ந்து சப்தஜென்மபாப விமோசனம் மற்றும் சர்வரோஹ நிவாரணி யக்ஞம் நடைபெற்றது. மாலை சங்கீத உபன்யாசம் கலைமாமணி

வைஜெய்ந்திமாலா குழுவினரின் சங்கீத  உபன்யாஸம் நடைபெற்றது.  இரண்டாவது நாளான இன்று காலை

சித்தி புத்தி விநாயகருக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து        ராஜாராம் பாகவதரின் பஜனை  நடைபெற்றது.  மாலை மூவர் தேவாரம் மற்றும் டெல்லி ஸ்ரீசங்கர் பாகவதரின் மூவர் தேவாரம் கச்சேரி நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து நாளை காலை  மீனாட்சி கல்யாண வைபவம் மற்றும் வாத்தியார் வெங்கட்ராமராவின் வாத்யலஹரி  மற்றும் நாட்டிய நடைபெற்றது
On Friday, March 08, 2019 by Tamilnewstv in ,    
திருச்சி


திருச்சியில் மத்திய பேருந்து நிலையம் அருகே தனியார் அரங்கில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் கூட்டம் நடைபெற்றது


நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானங்களாக பணி நிரந்தரம் காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் துறைகள் ஈமானிய சட்டமன்ற கூட்டத் தொடரின் போது சென்னையில் மறியல் போராட்டம் நடத்துவதாக போராட்டத்தையே டாஸ்மார்க்கில் உள்ள இதர சங்கங்களை சந்தித்து அழைத்து இணைந்து போராட்டமாக நடத்திட அறைகூவல் விடுப்பது என்றும் அடுத்த சட்டமன்ற தொடரின்போது அரசியல் கட்சிகளின் சட்டமன்ற தலைவர்களை சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தி கேட்டுக் கொள்வது என்றும் விற்பனை கடைகளில் வேலை நேரத்தை பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை குறைத்திட அரசை கேட்டு கொள்வது என்றும் விற்பனைத் தொகையில் பிற மாவட்டங்களிலும் சென்னையில் உள்ள நடைமுறை போல் அரசு வங்கிகள் மூலம் நேரடியாக வசூலித்து விட நடவடிக்கை மேற்கொள்வது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இந்நிகழ்ச்சியில் மாநில தலைவர் பாலுச்சாமி மாநில பொதுச் செயலாளர் ராஜா மாநில பொருளாளர் அருள்மணி அரசு பணியாளர் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் பரமசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர்

Sunday, January 27, 2019






ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் தன்னாட்சிக் கல்லூரி இருபத்தி மூன்றாம் ஆண்டு விழா 
கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி செயலர் அம்மங்கி பாலாஜி வரவேற்றார்.






 ஆண்டவன் ஆசிரம தேசியத்தலைவர் ராஜகோபால் தலைமை உரையாற்றினார். கல்லூரி முதல்வர் ராதிகா அறிக்கை வாசித்தார். தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத் துறை அமைச்சர் வளர்மதி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றார்கள். நிகழ்ச்சியில் பாடசாலை மாணவர்களையும் கல்லூரியில் 20 ஆண்டுகள் பணி புரிந்தவர்களையும் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது.  இயக்குனர் ராமானுஜம் முன்னிலை வகித்தார் துணை முதல்வர் பிச்சைமணி நன்றி கூறினார்