Monday, June 24, 2019

On Monday, June 24, 2019 by Tamilnewstv in ,    
திருச்சி   ஜூன் 24

பொறியியல் படிக்கும் மாணவனுக்கு வேலை வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.


தமிழ்நாடு சுயநிதி பொறியியல் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் கூட்டமைப்பு மற்றும் அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்கம்



 இவற்றில் நடத்த உள்ள ஆன்லைன் கவுன்சிலிங் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று தொலைநோக்கு - 2019 என்ற பெயரில் திருச்சி அரசு கலையரங்கம் அரங்கில் கருத்தரங்கம் நடைபெற்றது.


தமிழ்நாடு சுயநிதி பொறியியல் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் கூட்டமைப்பு தலைவர் முனிரத்தினம் மற்றும் செயலாளர் டாக்டர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயல் துறை தலைவர் அன்புத்தம்பி, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் ஜிபிஎஸ் நிறுவனத்தில் முதுநிலை மேலாளர் ராஜகோபாலன், கே7 கம்ப்யூட்டர் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி புருஷோத்தமன், அரசு தொடக்க கல்வி இயக்கத்தின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர்  மாணவர்களுக்கு விளக்க உரையை வழங்கினார்.

இக்கத்தரங்கில்
நடப்பாண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் கவுன்சிலிங் முறையானது அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து அரசு தொழில்நுட்பக் கல்விக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் கவுன்சிலிங் குறித்த விழிப்புணர்வையும், செயல்முறைவிளக்கங்களையும்,  மாணவர்களுக்கு விளக்கி கூறப்பட்டது. மேலும் வேலை வாய்ப்பு  என்பது பொறியியல் படிப்பிலோ அல்லது பாடத் திட்டத்தில்லை மாணவர்கள் பொறியியல் பட்டப்படிப்போடு அத்துறை சார்ந்த புதிய தொழில் நுட்ப்பங்கள், அயல்நாட்டு மொழிகள், skills எனப்படும் மென்திறன்கள் போன்றவற்றைக் கற்றுக் கொண்டால் வேலை வாய்ப்பு கிடைப்பது நிச்சயம் என்பதை விளக்கி கூறினர்.
இக்கருத்தரங்கில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் 1500-க்கும் மேற்பட்டோர்் கலந்து கொண்டனர்.


பேட்டி:
1) புருஷேத்தம்மன்,
2) முனிராஜ்

Saturday, June 22, 2019

On Saturday, June 22, 2019 by Tamilnewstv   
திருச்சி ஹோண்டா டூ வீலர் இந்தியா திருச்சியில் புதிதாக குழந்தைகள் போக்குவரத்து பூங்காவை திருச்சிராப்பள்ளி மாநகர காவல் துறையுடன் இணைந்து இந்நகரின் முதல் போக்குவரத்து பூங்காவை தொடங்கி இருக்கிறது


சாலைகளை பயன்படுத்துவர்களுக்கு குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு போட்டுப் அவர்களிடையே விபத்தில்லாமல் வாகனத்தை ஓட்டுவது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வரும் ஹோண்டா மோட்டார் சைக்கிள் ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட் திருச்சி மாநகர காவல்துறை உடன் இணைந்து இந்தியாவில் ஹோண்டா நிறுவனத்தின் 14வது போக்குவரத்து பூங்காவை தொடங்கியுள்ளது
ஹோண்டாவின் 14வது போக்குவரத்து பயிற்சி பூங்கா தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திருப்பத்தூர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு திருச்சிராப்பள்ளி மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் மற்றும் ஹோண்டா மோட்டார் சைக்கிள் ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட் கம்யூனிகேஷன் பிரிவின் துணைத் தலைவர் பிரபு நாகராஜ் ஆகியோர் முன்னிலையில் அரசு அதிகாரிகள் மற்றும் ஹோண்டா டூவீலர் இந்தியா நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டு துவக்கி வைக்கப்பட்டது

Monday, June 10, 2019

On Monday, June 10, 2019 by Tamilnewstv   
திருச்சி அண்ணா நகர் உழவர் சந்தையில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமையில் பாராளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்த பொது மக்களுக்கு நன்றி தெரிவித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது

அதில் சிறப்புரையாற்றிய ஸ்டாலின் பேசுகையில் இன்று திருச்சி மாவட்டத்தில் அன்பிலர் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது நாடாளுமன்றத் தேர்தல் சட்டமன்ற இடைத்தேர்தல் வெற்றி பெற செய்த வாக்காள பெருமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடைபெறுகிறது இது மிகுந்த எழுச்சியோடு உணர்ச்சியோடு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது 



வீரர்களின் கோட்டையாக விளங்கும் திருச்சியில் தென்னூர் பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த மாபெரும் கூட்டத்தில் நேரு மற்றும் கழக நிர்வாகிகள் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்துள்ளார்கள் ஒட்டுமொத்தமாக அனைவருக்கும் ஒரே சொல்லில் நன்றி சொல்வது என்றால் அன்புள்ள அதற்குப் பிறகு திருச்சியை தீரர்கள் கூட்டமாக மாற்றி வழிநடத்திக் கொண்டிருக்கும் மாவட்ட கழக செயலாளர் நேரு அவர்கள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்றார்
திமுக சார்பில் கலைஞர் அறிவாலயத்தில் கலைஞர் அவர்களுக்கு அண்ணா அவர்களுக்கு சிலை அவர்களுக்கு கலர் ஆக இருந்த அன்பில்லை அன்பில்லை தெரிந்து வைத்துள்ளோம் அன்பிலார் பற்றி உங்களிடம் அதிக சொல்ல வேண்டியது இல்லை அன்பிலே அன்பிலே நேருவிற்கும் என்ன வேறுபாடு என்றால் அன்பில் கோபப்படமாட்டார் சத்தம் போடமாட்டார் நேருவின் பணி கோபமாக பேசுவது அடுத்த வினாடியே தோளில் கைபோட்டு அரவணைத்துச் செல்வார் கூட்டம் என்றால் அதை எப்படி நடத்த வேண்டும் மாநாடு போல் நடத்த வேண்டும் என்பதை உருவாக்கித் தந்த மாவட்டம் திருச்சி ஆகவே நான் திருச்சி திமுகவின் கோட்டையாக என்று கலைஞர் சொல்வார் திமுகவின் வீரர்கள் கூட்டம் திருச்சி என்பதை பெருமையுடன் சொல்வேன் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இதே தென்னூரில் பிரச்சாரத்திற்கு நான் வந்திருந்தேன் திருநாவுக்கரசர் அவர்களிடம் சொன்னேன் எப்போது நீங்கள் திருச்சிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அப்போது வெற்றி பெற்று விட்டீர்கள் என்று மூன்று இலட்சத்திற்கு அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் இந்த வெற்றிக்கு பாடுபட்ட அனைவருக்கும் இதயப்பூர்வமான நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு அணி வேட்பாளர்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்காளர்கள் ஆதரவு தந்ததற்கு நான் மீண்டும் நன்றி தெரிவிக்கிறேன் திருச்சி கோட்டையாக மாற்றிய பெருமை அன்பிலார் கொண்டு அவர் கலைஞருக்கு நம்பிக்கை உடையவராக வாழ்ந்து காட்டினார் அண்ணாவின் பாசத்தை பெற்றிருந்தார் கலைஞர் அவர்களிடம் அன்பிலார் உரிமையுடன் சண்டை போடுவார் நட்பை பார்த்து பேராசிரியர் சொல்வார் கலைஞர் அன்பிலார் நட்பு என்பது கணவன் மனைவி போடுவது என்று லால்குடி சட்டமன்றத்தில் வேட்பாளராக அன்பில் 1957இல் போட்டியிட்டார் பெரியாரும் அண்ணாவும் பிரிந்திருந்த ஆனாலும் கூட காங்கிரஸ் மேடையில் பிரச்சாரம் செய்த பெரியாரிடம் அன்பிலர் ஆசி பெற்று சென்றார் 1956 இல் திருச்சியில் மாநாடு நடத்திய தேர்தலில் போட்டியிட முடிவு செய்யப்பட்டது 1967 இல் வெற்றி பெற்ற அண்ணா முதலமைச்சர் ஆனார் அன்பில் அவரிடம் கலைஞரிடம் அண்ணா சொன்னார் திமுக ஆட்சிக்கு வந்து உள்ளது பெரியாரைப் பார்க்க வேண்டும் என்றார் அன்பிலார் அவர்கள் தான் பெரியாரை சந்தித்து அண்ணா பெரியார் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து கொடுத்தார் 19 வருடம் கழித்து சந்தித்தார்கள் கலைஞர் தேர்தல் பிரச்சாரம் செய்யும்போது அன்புடன் இருப்பார் கலைஞர்களை அண்ணா சாலை anna salai ஒரே நாளில் திருச்சி திறந்து வைக்கப்பட்டுள்ளது மாநாடு என்றால் திருச்சி தான் நினைவுக்கு வருகிறது ஐம்பெரும் முழக்கங்களை திருச்சியில் கலைஞர் உருவாக்கித் தந்தார் அண்ணா வழியில் அயராது உழைப்போம் ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம் வன்முறையை தவிர்த்து வெல்வோம் இந்தி திணிப்பை எதிர்ப்போம் மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்ற முழக்கங்களை முன்வைத்து இதை தொடர்ந்து கடைப்பிடித்த காரணத்தால் மாபெரும் வெற்றி பெற்றுள்ளோம் தேனியில் அவர்கள் கோடிகளை கொட்டி அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள் நாம் 38 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறோம் என்றால் நான் காரணம் என்று சொல்லவில்லை ஸ்டாலின் என்று சொன்னால் கலைஞர் மகன் மட்டுமா அத்தனை பேருமே கலைஞர் மகன்கள் பேரன்கள் நீங்கள் உழைத்த உழைப்பால் வெற்றி கிட்டி உள்ளது இந்த வெற்றியை வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் பெறுவதற்கு சூளுரை ஏற்க வேண்டும் திமுக ஐந்து முறை வெற்றி பெற்று சில திட்டங்கள் செய்துள்ளோம் அதுபோல் வெற்றி பெற்று மீண்டும் நல்ல ஆட்சி திட்டங்களை மக்களுக்கு தர உள்ளோம் என கூறி நன்றி தெரிவித்து உரையை முடித்துக் கொண்டார்
On Monday, June 10, 2019 by Tamilnewstv   

On Monday, June 10, 2019 by Tamilnewstv   

On Monday, June 10, 2019 by Tamilnewstv   

Sunday, June 02, 2019

On Sunday, June 02, 2019 by Tamilnewstv   
திருச்சி புற்றுநோயை வென்றவர்கள் அவர்களுக்கான மறுவாழ்வு தினம் இன்று கொண்டாடப்பட்டது
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை புற்று நோய் மறுவாழ்வு தினமாக கொண்டாடப்படுகிறது இதன் நோக்கம் புற்றுநோய் வந்த பின்பும் வாழ்க்கை இருக்கிறது என்று புற்று நோயை வெல்ல முடியும் என்பதையும் இவ்வுலகிற்கு பறைசாற்றுவதாகும் உலகம் முழுவதும் தோராயமாக 32 மில்லியன் புற்றுநோயாளிகள் நோயை வென்று மறுவாழ்வு பெற்று இவ்வுலகில் வெற்றிகரமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்

 இந்த சமுதாயம் அவர்களை நினைவுகூர்ந்து மீண்டும் நமது சமுதாயத்திற்கு ஒரு அங்கத்தினராக அவர்களை ஏற்றுக் கொள்ளும் விதமாக இன்றைய தினம் கொண்டாடப்படுகிறது 26 நவம்பர் 2004 லான்செட் என்ற மருத்துவ மனை மருத்துவ இதழில் வெளியிடப்பட்டு தகவலின்படி இந்தியாவில் புற்று நோய் குணமடையும் சதவீதம் மற்ற நாடுகளை ஒப்பிடும் பொழுது 50 சதவீதம் குறைவாகவே உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது இதன் முக்கிய காரணமாக புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் மற்றும் தொடர் சிகிச்சை மேற்கொள்ளாமல் இருந்தால் ஆகும்
இந்நிலையில் மாறவேண்டுமானால் புற்று நோய் பற்றிய விழிப்புணர்வு நமது சமுதாயத்தை மிகவும் அவசியமாகிறது புற்றுநோய் வந்தால் குணப்படுத்த முடியும் என்று புற்று நோய் வந்தவர்களும் உண்டு என்பதை சொல்லும் விதமாக அமைந்திருக்கும் இந்த நாளை தீபாவளி பொங்கல் போன்ற விழாவாகக் கொண்டாடப்படுகிறது
இந்நிகழ்ச்சியில் செந்தில்குமார் மருத்துவர் வரவேற்புரையாற்றினார் மருத்துவர் ஜெயபால்  மருத்துவர் அருண் சேஷாசலம்சிறப்புரை ஆற்றினார் அஷ்ரப் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் மருத்துவர் பாலாஜி நன்றி உரையாற்றினார்

Saturday, June 01, 2019

திருச்சி

திருச்சியில் உள்ள தனியார் பள்ளி பேருந்துகளின் பாதுகாப்பு குறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வுசெய்தனர்.


கோடைவிடுமுறை முடிந்து வருகிற திங்கள் கிழமை  பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி வாகனங்களின் தகுதி குறித்த ஆய்வு திருச்சியில் நடைபெற்றது.





இதில் பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு வசதிகள், வேகக் கட்டுப்பாட்டு கருவி, தீயணைப்பு கருவி மற்றும் அவசரகால வழி  போன்றவை பற்றி ஆய்வு செய்யப்பட்டது. ஆகஸ்போர்டு கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வு முகாமில் டாக்டர் அகர்வால்  கண் மருத்துவமனை சார்பில், பள்ளி வாகனங்களின் ஓட்டுனர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் முகாமில் மாவட்ட துணை ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பேசும்போது பேருந்து ஓட்டுநர்கள் பேருந்தை குறிப்பிட்ட வேகத்திலேயே இயக்கவேண்டும், பேருந்தில் இருக்கும் தீயணைப்பு கருவிகள் செயல்படுவது குறித்து அறிந்து கொள்ளவேண்டும்.  பேருந்தில் பழுது ஏதும் ஏற்பட்டால் உடனடியாக தங்களின் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அதை சரிசெய்ய வேண்டும். பேருந்தில் பயணிக்கும் குழந்தைகள் அனைவரையும் பாதுகாப்பாக அழைத்து செல்வது ஒவ்வொரு ஓட்டுநரின் கடமை என கூறினார்.

இதில் பள்ளிபேருந்து ஓட்டுநர்களுக்கு பேருந்தில் தீவிபத்து ஏற்பட்டால் அதை எவ்வாறு அணைப்பது என்பது குறித்து தீயணைப்பு துறையினரால்  செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

Thursday, May 30, 2019

On Thursday, May 30, 2019 by Tamilnewstv   
திருச்சி 

 உதயநிதிக்கு இளைஞர் அணியில் பதவி கொடுக்க வேண்டும்  - திருச்சி திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

 திருச்சி தெற்கு, வடக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் இன்று கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது. அவைத்தலைவர் அம்பிகாபதி தலைமை வைத்தார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், தெற்கு மாவட்ட செயலாளருமான கே.என் நேரு பேசுகையில், வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடத்த ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன் அடிப்படையில் தமிழகத்தில் ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் முதலாவதாக திருச்சி தென்னூர் உழவர் சந்தையில் ஜூன் 15ஆம் தேதி நன்றி அறிவிப்பு கூட்டம் நடக்கிறது. இதில் திருச்சி தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெறச் செய்ததற்காக ஒருங்கிணைந்த நன்றி அறிவிப்பு கூட்டம் ஆக இது நடத்தப்படுகிறது. அன்றைய தினம் மாலை கலைஞர் அறிவாலயத்தில் கருணாநிதியின் சிலையை திமுக தலைவர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். அடுத்த கட்டமாக வரும் ஜூன் 3ம் தேதி திமுக தலை கருணாநிதி 97வது பிறந்த நாளை முன்னிட்டு அந்தந்த பகுதிகளில் கொடியேற்றி இனிப்பு வழங்க வேண்டும். தமிழகத்திலும், மத்தியிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்று நம்பிக்கையுடன் மக்கள் அதிக அளவில் திமுக கூட்டணிக்கு வாக்களித்து உள்ளனர். தேர்தல் முடிவுக்கு பின்னர் தான் கடன்களை செலுத்த விவசாயிகள் முன்வந்துள்ளனர். இன்னும் ஒரு ஆண்டு இதே நிலைதான் நீடிக்கும். அதனால் நமது சிறப்பான பணியை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். தொடர்ந்து பணியாற்றினால் 1971 ஆம் ஆண்டு திமுக 210 தொகுதிகளில் வெற்றி பெற்றது போல் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறலாம். திமுக தலைவர் ஸ்டாலின் மீது பிரதமர் மோடி அதிக அளவில் கோபத்தில் உள்ளார். அதனால் தான் அவரது பதவி ஏற்பு விழாவுக்கு கூட ஸ்டாலினை அழைக்கவில்லை. இதுபோன்ற எதிர்ப்புகளை மீறி தான் நாம் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும். டெல்டாவில் திமுகவை தவிர வேறு எந்த கட்சியும் வெற்றி பெறமுடியாத நிலையை உருவாக்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டம் காரணமாக டெல்டாவில்  பலத்த எதிர்ப்பு நிலவுகிறது. சிறுபான்மை இன மக்களை சமமாக நடத்துவோம் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார் அதற்கு ஏற்ப நாம் செயல்பட வேண்டும். ஏனெனில் உதயநிதி ஸ்டாலினை நியமிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட செயலாளர்களும் வலியுறுத்தியுள்ளோம் இந்த செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது உள்ளது என்றார். கூட்டத்தில், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்தமைக்கு நன்றி தெரிவிப்பது, கடுமையான தேர்தல் பணியாற்றிய திமுக தலைவருக்கு நன்றி தெரிவித்தும், உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி பதவி நியமிக்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் திருச்சி மாநகர செயலாளர் அன்பழகன், எம்எல்ஏ சவுந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.