Friday, December 13, 2019

On Friday, December 13, 2019 by Tamilnewstv   


*இன்டேன் LPG நுகர்வோரின் கவனத்திற்கு*

 *இன்டேன் LPG சிலிண்டரானது டெலிவரிக்கு முந்தைய பரிசோதனைகளான தரம் மற்றும் எடை பரிசோதனை உறுதி செய்யப்பட்ட பின்பே விநியோகஸ்தர்களால் விநியோகம் செய்யப்படுகிறது.*

*விநியோகஸ்தர்களால் வழங்கப்படும் இரசீதில் சில்லறை விற்பனை விலை தெளிவாக அச்சிடப்பட்டிருக்கும் . வாடிக்கையாளர்கள் சிலிண்டரை பெற்றுக் கொண்டபின் இரசீதில் அத்தாட்சி அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . மேலும் சில்லறை விற்பனை விலை என்பது வாடிக்கையாளரின் சமையலறை வரை சிலிண்டரை டெலிவரி செய்வதற்கான தொகை ஆகும் . வாடிக்கையாளர்கள் இரசீதில் உள்ள விலைக்குமேல் டெலிவரி செய்பவரிடம் மேற்கொண்டு தொகை எதுவும் கொடுக்கவேண்டாம் என கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள் . மேலும் இந்தியன் ஆயில் டிப்ஸ் வழங்குவதை என்றுமே ஆதரிப்பதில்லை . எனவே இரசீதில் உள்ள சில்லரை விலைக்கு மேல் கோரப்பட்டால் , வாடிக்கையாளர்கள் கீழ்கண்ட வாடிக்கையாளர் சேவை மையத்தினை காலை 9 . 30 முதல் மாலை 5 . 15 வரை கீழ்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் .*

*சென்னை : 044 - 24339238 / 24339246 / 9444085646*
*மதுரை - : 0452 - 2533956*
*திருச்சி : 0431 - 2740066*
*கோயம்புத்தூர் : 0422 - 2247396*

*விபத்து மற்றும் கசிவு போன்ற அவசர உதவிக்கு 1906 என்ற எண் மற்றும் இத புகார்களுக்கு 18002333555 என்ற டோல் ஃபிரீ எண்ணை தொடர்பு கொள்ளலாம்.*

*பொது நலன் கருதி வெளியிடுவோர் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்*

Monday, November 25, 2019

On Monday, November 25, 2019 by Tamilnewstv in ,    
#திருச்சி_அண்ணாநகர் #கஞ்சா_செடிகள்_அழிப்பு



தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்ட தலைவர் ராயல் சித்திக் அவர்களின் பெரும் முயற்சியால் திருச்சி அண்ணாநகர் அக்பர் தெருவில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சமூக விரோதிகள் நடமாட்த்தால் வளர்ந்த கஞ்சா செடிகளை ,


காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் அழிப்பு ....
உடன் ரஹ்மத் பள்ளிவாசல் தலைவர் வாஹித் , ரஹ்மத் பள்ளிவாசல் இமாம் அபுபக்கர் சித்திக் ஹஜ்ரத் , ரஹ்மத் பள்ளிவாசல் பொருப்பாளர் ரியாஸ் அஹ்மத் , கிரேசன்ட் மற்றும் நைட்டிங்கேல் பள்ளிகூடம் ஆசிரியர்கள் , தமஜக மாவட்ட பொருளாளர் ரியாஸ் , மாவட்ட துணை செயலாளர் தாஹா , மாவட்ட தொழில் சங்க  ஜாபர் அலி , இணையதள பொருப்பாளர் காஜா மைதீன் ,தென்னுர் பகுதி துணை செயலாளர் ஷேக் , 19வது வார்டு பாஷா ,(  பழைய 49வது வார்டு ) 29வது வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் திரளாக இறுதி வரை களத்தில் நின்றனர் ....



மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை உடனடியாக சுத்தம் செய்து , காம்பவுண்ட் சுவர் கட்டபட வேண்டும் மற்றும் சமூக விரோதிகள் நடமாட்டத்தை இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை தலைவர் #Royal #Siddiq அவர்கள் அதிகாரிகளிடம் வைத்தார் ,
உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தார்கள் ....
On Monday, November 25, 2019 by Tamilnewstv   
எதிர்வரும் டிசம்பர் 1 ம் தேதியன்று சிங்கப்பூர் உட்லண்ட்ஸ் உள் விளையாட்டரங்கில் நடைபெறவிருக்கும் சிலம்பப்போட்டியில் கலந்துகொள்ள தமிழகத்திலிருந்து சிங்கப்பூர் சென்றுள்ள திருச்சியைச் சேர்ந்த உலக சிலம்ப சாதனைச் சிறுமி சிலம்பம்



சுகிதா மோகன் அவர்கள் சிங்கப்பூர் சென்றுள்ளார். அவரை சிங்கப்பூர் விமான நிலையத்தில் வரவேற்று வாழ்த்து தெரிவித்த சிங்கப்பூர் ஐந்திணை மைந்தர்கள் குழு, சுகித்தாவின் சாதனையை பாராட்டும்விதமாக நேற்று ஞாயிறு (24/11/2019) மாலை 6 மணிக்கு சிங்கப்பூர் முஸ்தபா வணிகவளாகம் எதிர்புறம் அமைந்திருக்கும் ஆனந்தபவன் உணவகத்தின் மேல்தளத்திலுள்ள அரங்கில் பாராட்டுவிழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

அந்நிகழ்வில், சிங்கைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் ஜேவிகேம் நிறுவனம் & மித்ரா குழுமத்தின் நிர்வாக இயக்குனருமான தமிழார்வலர் திருமதி. விஜிஜெகதீஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மேலும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக சிங்கைத் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவரும் மூத்த ஆலோசகருமான தமிழ்ச்சுடர் திரு. அ. வை. கிருஷ்ணசாமி அவர்கள், தமிழ் இலக்கியக் களம் அமைப்பின் தலைவர், சொல்லின் செல்வர் முனைவர் திரு. இரத்தின வேங்கடேசன் அவர்கள் மற்றும் இலக்கியச் சொற்ப்பொழிவாளர், பட்டிமன்ற நடுவர் முனைவர் திரு. மன்னை க. இராஜகோபாலன் அவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் முதன்மை ஒருங்கிணைப்பாளரான திரு.துரை.மருதீசுவரன் அவர்கள் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் தமிழார்வலர்கள் அனைவரையும் வரவேற்று வரவேற்புரையாற்றினார். அதனையடுத்து பேசிய சிறப்பு விருந்தினர்கள் அனைவரும், சிங்கப்பூரில் நடைபெறும் முதல் சிலம்ப நிகழ்வில் கலந்துகொள்ள சிறப்பு விருந்தினர்களாக தங்களை அழைத்தது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும், இதுபோன்ற நிகழ்வின் மூலம் இனி சிங்கப்பூர் இளைஞர்களும் நமது மரபுக்கலையை கற்றுக்கொள்ள ஆர்வம்காட்டுவார்களெனவும் தெரிவித்தனர். மேலும் சிலம்பத்தின் வரலாறுபற்றியும், அதன் அவசியம்பற்றியும், குறிப்பாக இன்றைய காலக்கட்டத்தில் நமது பெண்பிள்ளைகளுக்கு இதுபோன்ற நமது மரபுக்கலைகள் எப்படியெல்லாம் தற்காப்புத் திறனை வளர்த்துக்கொள்ள உதவுகிறதென பேசியதோடுமட்டுமில்லாமல், இனி சிங்கப்பூரில் இதுபோன்ற சிலம்ப நிகழ்வுகளை அடிக்கடி நடத்தவேண்டு மெனவும் கேட்டுக்கொண்டனர்.

மேலும் நிகழ்ச்சியின் நாயகி, சாதனைச் சிறுமி சிலம்பம் சுகித்தா மோகன் அவர்களை சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் வாழ்த்திப்பேசியதோடுமட்டுமில்லாமல் அந்நிகழ்ச்சின் ஏற்பாட்டுக்குழுவான ஐந்திணை மைந்தர்கள் குழு நண்பர்களின் சார்பாக சிறுமிக்கு நினைவுப்பரிசையும் அணிவித்து பாராட்டினார்.

மேலும் சிறுமி சுகித்தாவின் சிலம்ப ஆசிரியரும் சுருளி ஆண்டவர் சிலம்பக்கூடத்தின் பயிற்சியாளருமான திரு அரவிந்த் மற்றும் மலேசிய சிலம்பக்கோர்வையின் நிறுவனரும், பயிற்சியாளருமான கலைமாமணி திரு.அன்பழகன் குப்புசாமி ஆகியோருக்கு ஐந்திணை மைந்தர்கள் குழு சார்பாக நினைவு கேடயம் கொடுத்து கௌரவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியின் நெறியாளராக ஐந்திணை மைந்தர்கள் குழுவின் உறுப்பினர், சிங்கப்பூர் தமிழ்மொழி பண்பாட்டுக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் புக்கிட் தமிழ்ப் பேச்சாளர் மன்றத்தின் தலைவர், உலக சிலம்ப இளைஞர் சம்மேளனத்தின் தலைவர் மற்றும் எய்ம் டூ ஹை துணைத்தலைவருமான தமிழ்மகன் (எ) கண்ணன் அவர்கள் நிகழ்ச்சியை வழிநடத்தினார்.

மாலை 6 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சியானது இறுதியில் ஐந்திணை மைந்தர்கள் குழுவின் மற்றொரு உறுப்பினரான திரு. வெற்றிவேல் அவர்கள் நன்றியுரை வாசிக்க இரவு 9மணிக்கு இரவு விருந்தோடு நிறைவுற்றது. இந்நிகழ்வில் ஏராளமான சிங்கைவாழ் தமிழர்கள் கலந்துகொண்டனர்.

Sunday, October 13, 2019

பேருந்து பயணச்சீட்டு கண்காட்சி

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பாக பேருந்து பயணச்சீட்டு கண்காட்சி திருச்சியில் நடைபெற்றது.
 மதுரை அஞ்சல்தலை நாணயவியல் சேகரிப்பாளர் சங்க காதர் ஹிசைன் பயணச் சீட்டினை காட்சிப்படுத்தினார். பயணச்சீட்டு சேகரிப்பில் விகடகவி எண்கள், அலங்கார எண்கள் கொண்ட மாநகர, புறநகர, அரசு விரைவு பேருந்து பயணச்சீட்டுகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன . திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க தலைவர் விஜயகுமார், செயலர் குணசேகரன், மூத்த சேகரிப்பாளர் அசோக் காந்தி, சுவாமிநாதன், இளங்கோவன், யோகேஷ் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.
On Sunday, October 13, 2019 by Tamilnewstv in    
திருச்சி

 *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா*

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனார் அறக்கட்டளை என்னும் அறக்கட்டளை துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் தாமரைக்கனி தேவர் தலைமை வகித்தார் பசும்பொன் செல்வம் வரவேற்புரையாற்றினார் சிவக்குமார் சரவணகுமார் அசோக்குமார் பசும்பொன் காமராஜ் பாலசுப்பிரமணியம் ஸ்டாலின் அருண் பிரபு வரலட்சுமி பிரகதாம்பாள் கட்ட சாமி தேவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர் சிறப்பு அழைப்பாளராக மகாராஜன் மாநிலத் தலைவர் நேதாஜி சுபாஷ் சேனை மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் நாகதேவர் தலைவர் போரூர் வட்டார தேவர் பேரவை ஆகியோர் கலந்து கொண்டனர்

ஆனந்தன் ஏற்புரை ஆற்றினார் மாவட்ட நிர்வாகிகள் கண்ணன் மனோகரன் தேவர் பாரதி மாயத்தேவர் தீபக் தேவர் சங்கரலிங்கம் தேவர் கார்த்தீஸ்வரன் தேவர் முத்துவேல் தேவர் மலேசியா சிவலிங்கம் தேவர் அண்ட் நாச்சியார் நாச்சியார் மகேந்திரன் தேவர் ராஜேஷ் தேவர் சதீஷ் தேவர் பாரதி தேவர் செந்தில்குமார் தேவர் தேவர் தேவர் தேவர் மற்றும் ஆலங்குடி மணிகண்டன் புதுக்கோட்டை மாவட்ட இணைச்செயலாளர் ஒன்றிய செயலாளர்கள் சரவணன் தேவர் சுபாஷ் அருண்குமார்  ராஜேஷ் தேவர் செல்வம்  தேவர்கோபாலகிருஷ்ணன் தேவர் மணிகண்டன் தேவர் தேவர் தேவர் தேவர் வெள்ளைச்சாமி தேவர் தேவர் சதீஷ்குமார் முத்துப்பாண்டி தேவர் வெள்ளைச்சாமி தேவர் மகேஸ்வரன் தேவர் தேவர் ஆகியோர் கலந்து கொண்டனர்
திருச்சி கேர் அகடமி சார்பில் சிகரம் தொடவா  நிகழ்ச்சி நடைபெற்றது


திருச்சி  Care academy சார்பில் சிகரம் தொட வா என்னும் நிகழ்ச்சி வடக்கு ஆண்டாள் தெருவிலுள்ள  Care academy கூட்டரங்கில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக டிஎன்பிசி யுபிஎஸ்சி எஸ்எஸ்சி ஆர்ஆர்பி போட்டித்தேர்வுகளில் வெற்றி பெறுவது எப்படி என வழி காட்டவும் சிறப்பு விருந்தினராக நந்தகுமார் ஐஆர்எஸ் ஜாயின்ட் கமிஷனர் இன்கம் டேக்ஸ் டிபார்ட்மென்ட் கலந்து கொண்டார் இந்நிகழ்ச்சி வெற்றி வழிகாட்டும் வாழ்வுக்கு நெறிகாட்டும்  என்பதற்கேற்ப இயக்குனர் பேராசிரியர் முத்தமிழ்ச் செல்வன் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது கிருஷ்ணவேணி முத்தமிழ்செல்வன் வரவேற்புரையாற்றினார் கோவிந்தசாமி தலைவர் மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் வாழ்த்துரை வழங்கினார் சிறப்பு அழைப்பாளராக சாதித்த சாமானியன் என்ற பெயரைக் கொண்ட நந்தகுமார் ஐயா அவர்கள் உரையாற்றினார் முனியப்பன் ஆசிரியப் பயிற்றுநர் கல்வித்துறை நன்றி உரையாற்றினார்

Saturday, October 05, 2019

On Saturday, October 05, 2019 by Tamilnewstv in ,    
திருச்சி
05.10.2019

திருச்சியில்பிஜேபி  மாநில பொதுச் செயலாளர்
திருமதி.வானதி சீனிவாசன் அவர்கள் கார்த்தி சிதம்பரத்திற்கு பதிலடி   



மகாத்மா காந்தி அவர்களின் 150 பிறந்த தின விழா முன்னிட்டு சமூக விழிப்புணர்வு பாத யாத்திரை அக்டோபர் 2 முதல் 30 வரை தமிழகமெங்கும் நடைபெறுகிறது,
அதன் தொடர்ச்சியாக இன்று திருச்சியில்
தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு  
காந்தி சங்கல்ப யாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர்
திருமதி. வானதி சீனிவாசன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு திருச்சி
அரசு மருத்துவமனை அருகில் உள்ள மகாத்மா காந்தி அவர்களின் அஸ்தி மண்டபத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பின்னர் சங்கல்ப யாத்திரை நிகழ்ச்சி துவக்கி வைத்தார்
நிகழ்ச்சியானது திருச்சி புத்தூர் நால்ரோடு வழியாக, உறையூர் ராமர் மடம் வரை நடைபயண யாத்திரை நடைபெற்றது.
பாதயாத்திரையில்
தூய்மை பேணுவோம்,
கதர் ஆடை அணிவோம்,
மரங்களை நடுவோம், 
பிளாஸ்டிக் ஒழிப்போம்,
நீர் ஆதாரம் காப்போம்,
மதுவை ஒழிப்போம்,பெண்கள் நலம் காப்போம்,சமூக ஒற்றுமை வளர்த்திடுவோம் இயற்கை வேளாண்மையை,
சுதேசி பொருட்களை ஆதரிப்போம், மேம்படுத்துவோம்,போன்ற நோக்கங்களை வலியுறுத்தி சமூக விழிப்புணர்வு பாதயாத்திரை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் திருமதி.வானதி சீனிவாசன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
திருச்சி மாவட்ட பிஜேபி கட்சியின் தலைவர் தங்கராஜன் மற்றும் இளைஞர் அணி செயலாளர் கௌதம்,மாவட்ட செயலாளர் காலி மற்றும் கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த திருமதி வானதி சீனிவாசன் அவர்கள் கூறுகையில்.



காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பொய் வழக்கு அல்ல நாட்டில் நெருக்கடி நிலை கொண்டு வந்தவர்கள். ஜனநாயகத்துக்கு எதிரான கட்சி ஒன்று இந்த நாட்டில் இருக்க முடியுமென்றால் அது காங்கிரஸ் கட்சிதான். 
தயவுசெய்து கார்த்தி சிதம்பரம் அவர்கள் காங்கிரஸ் கட்சியினுடைய வரலாற்றை படிக்க வேண்டும். அன்று மகாத்மா, பட்டேல் அவர்கள் இருந்த காங்கிரஸ் வேறு இன்று ஊழல் வழக்குகளில் உள்ளே சென்று இருப்பவர்கள் காங்கிரஸ் வேறு,
அத்துடன் விசாரணை எப்போது முடிவடையும்
கோர்ட்ல வந்து தாக்கல் பண்றதெல்லாம் அந்த அமைப்புக்கு தெரியும் ஒவ்வொரு வழக்கையும் விசாரணை செய்து கொண்டும் கண்காணித்துக் கொண்டும் இருக்கிறார்கள் அதனால் அவருடைய விருப்பத்திற்கு சிபிஐ என்றும் நடக்காது என்று கூறினார்.

Wednesday, October 02, 2019

On Wednesday, October 02, 2019 by Tamilnewstv in ,    
திருச்சி கர்மவீரர் காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு பல்வேறு கட்சியினர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர் இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் ஜவகர் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பொறுப்பாளர்கள் நந்தா செந்தில்  மற்றும் குணா தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது
On Wednesday, October 02, 2019 by Tamilnewstv   



மக்கள் நல்வாழ்வு அறக்கட்டளை சார்பாக 2 /10/2019 இன்று கல்வி கண் திரந்த காமராஜர் ஐயா அவர்களின் நினைவு நாளையொட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

இதில் தலைவர்:-MGசையது இப்ராஹிம்

செயலாளர் :- K.கிஷோர் குமார்

பொருலாளர் :-G.ராஜா

 B. ஷாகுல் , கண்ணன் ,ரியாஸ் , செந்தில்குமார் , பாலமுருகன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்