Thursday, February 13, 2020

On Thursday, February 13, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர்
தொல் .திருமாவளவன் பேட்டி

டில்லி தேர்தலில்  பிஜேபி  பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்
தேசிய குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். என்பிஆர் என் ஆர் சி
 உள்ளிட்ட சட்டங்களை திரும்ப பெற வேண்டும், நடைமுறைபடுத்த மாட்டோம் என அறிவிக்க வேண்டும்.  தமிழக முதல்வரும் தமிழகத்தில் சட்டங்களை நடைமுறைப்படுத்த மாட்டோம் என அறிவிக்க வேண்டும்.  ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரை  என்பிஆர் நடைமுறைக்கு வர உள்ளது  அதனை நடைமுறைபடுத்த மாட்டோம் என தமிழக முதல்வர் அறிவிக்க வேண்டும். 

டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது நாளிது அறிவிப்போடு இருந்துவிடக்கூடாது
சட்டம் இயற்றப்படும் என முதல் அறிவித்துள்ளார் என உடனடியாக சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
கடலூர் மாவட்டத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார் பாதிக்கப்படக்கூடாது. சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத அளவு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

Tuesday, February 11, 2020

On Tuesday, February 11, 2020 by Tamilnewstv in ,    

எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் .


எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது. இங்கு உள்ளவர்கள் ஏற்கனவே பல கோடி ரூபாய் முறைகேடு செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து தற்போது நான் காரைக்குடியில் அந்தோணி செல்வம் என்பவர் அனுமதி இல்லாமல் கூட்டம் நடத்த உள்ளார் என்பது குறித்து காரைக்குடி எஸ்பியிடம் புகார் அளிக்க வந்துள்ளேன். இரண்டு நாட்களுக்கு முன்பு தஞ்சை எஸ்பி இடம் அளித்த புகாரின் பேரில் தஞ்சை எல்பின்  பொறுப்பாளர் கைது செய்யப்பட்டார். தற்போது புதுக்கோட்டையில் மற்றும் தஞ்சாவூரிலும்  ELFIN நிறுவனம் கூட்டம் நடத்த தடை செய்யப்பட்டுள்ளது. தஞ்சையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது. திருச்சியிலும் கூட்டம் நடத்தாமல் இருக்க முயற்சி செய்து வருகின்றேன். திருச்சியில் தொடர்ந்து ELFIN கூட்டம் நடைபெற்று தான் வருகிறது



🏵🏵 *GOLDEN     OPPORTUNITY* 🏵🏵
           
               🙏 🙏 🙏
மிகச்சிறந்த வருமானம் தரும் வாய்ப்பு உங்களுக்காக..👉👉👉
           
🏵ELFIN OPPORTUNITY PROGRAM🏵

நாள்       : *08.02.2020*
கிழமை  : *சனிக்கிழமை*
நேரம்     : மாலை *5.00*
                  மணி *SHARP*
இடம்      : *நந்தனம் ஹால்,*
              ஹோட்டல் ரம்யாஸ்,
                        திருச்சி.
* சிறப்பு விருந்தினர்          திரு.  அண்ணாதுரை
அவர்கள்

 🎤🎤🎤ஸ்பீக்கர்  🎤🎤🎤               

திருமதி. *ஜெ. நிர்மலா* அவர்கள்

          🎊🎊🎊🎊🎊🎊
நிகழ்ச்சிக்கு உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களை  அழைக்கவும்.
இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் வாழ்வை வளமானதாக்கிக் கொள்ள அன்போடு அழைக்கின்றோம்.
     🎊🎊🎊🎊🎊🎊
 
           🌹 🌹🌹🌹🌹🌹ஒருங்கிணைப்பாளர்கள்:
 👉 திருமதி. K. உமாகோபி -      9629434932
👉 திரு. N.சண்முகமூர்த்தி -    9944132200
👉 திருமதி. A.நஸ்ரின் - 9659557657
👉 திருமதி. V.கவிதா- 8015273833
👉 திருமதி. R.உத்ரா - 9698151364
👉 திருமதி. கீதா - 81449  35961
 👉 திரு.  V. கண்ணகி  - 7639969116
            🙏🙏🙏🙏🙏🙏



இந்நிலையில் நேற்று திருச்சியை சேர்ந்த  மக்கள் மறுமலர்ச்சி கழகம் அமைப்பின் தலைவர் வழக்கறிஞர் பொன். முருகேசன் என்பவர் டிஜிபிக்கு இணையதளம் வாயிலாக மனு ஒன்றை அனுப்பியுள்ளார் அதில் நானும் தஞ்சாவூரை சேர்ந்த முஸ்லிம் நபர் ஒருவரையும் திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த திருவேங்கடம் யாதவ் ( எல்பின் நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர் குற்றப் பொருளாதாரப் பிரிவு காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்) என்பவரும் ஜாதியின் அடிப்படையில் செயல்படுவதாக ஜாதி வெறியை தூண்டும் வகையில் மனு அனுப்பியுள்ளார்.


பொதுநலன் கருதி போராடுபவர்கள் மீது ஜாதி சாயம் பூசுவது ஏன். 18 மாதங்களுக்கு முன்பு வருமான வரி ரெய்டு முடிந்த பின்பு எல்பின் நிறுவனம் முடக்கப்பட்டு விட்டது. இது அந்தக் வழக்கறிஞர் பொன். முருகேசன் அவர்களுக்கு தெரியாதா. எல்பின் நிறுவனத்திற்கு  ஒருதலைபட்சமாக பேசுவதும் பொதுமக்கள் பாதிப்படைவது  கருதாமல் பொன். முருகேசன் அவர்கள் ஒருதலைபட்சமாக பேசுவது போல் உள்ளது. நான் தலைமறைவாகி விட்டதாக கூறுகிறார்கள். தற்போது கூட  சிவகங்கை எஸ்பி அலுவலகம் முன்பு அலுவலகத்தில் மனு கொடுத்து விட்டு வந்து தான் பேசுகிறேன்.
பொது மக்களுக்காக போராடும் என்னுடைய செய்தியை ஏன் பத்திரிக்கை நண்பர்கள் பொதுமக்கள் நலனுக்காக எல்பின் நிறுவனம் பற்றிய உண்மையை ஏன் எழுதக் கூடாது ? எல்பின் ராஜா (எ) அழகிரிசாமியும், SRK ரமேஷ் குமார்(எ) ரமேஷும் எந்தப் பத்திரிகையிலும் நமது செய்தி வராது அனைத்துப் பத்திரிகைகளும் நாம் விளம்பரம் தருகிறோம் என தெனாவட்டாக பேசி வருவதாக சில நண்பர்கள் கூறுகிறார்கள். காசுக்காக அனைவரும் விலை போகமாட்டார்கள் நீதி என்றும் வெல்லும். நான் அளித்த மனுவின் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது என்றால் எந்த முகாந்திரமும் இல்லாமல் நடவடிக்கை எடுக்க முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் ரமேஷ் குமார் அவர்களின் பத்திரிகையில் காவல்துறையை களங்கப்படுத்தும் வகையில் எழுதி வருகிறார்கள்.

தற்போது வழக்கறிஞர் பொன்.முருகேசன் என்பவர் என்னை பார்த்ததே இல்லை திருவேங்கடம் யாதவ் என்பவரையும் பார்த்ததில்லையாம். இந்நிலையில் எங்களின் மீது அவர் டிஜிபிக்கு புகார் அளித்தது ஏன் ?

 
இந் நிறுவனத்தில் பொன். முருகேசன் அவர்கள் என்னவாக உள்ளார் என தெரியவில்லை.

மேலும்  ELFIN  நிறுவனம் முறைப்படி அனுமதி இல்லாமல் நடத்தும் கூட்டங்களை ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் .ஜெய்ஹிந்த்
On Tuesday, February 11, 2020 by Tamilnewstv in ,    
மாணவ,மாணவிகளின் கற்றல் திறனை மேம்படுத்தவும்,அறிவியல் தொழில் நுட்பத்தை கற்றுக் கொள்வதற்க்கும் கல்விக் கண்காட்சி.

கண்காட்சியில் அனைத்து பாடங்களிலிலும் தங்களது திறமையை வெளிப்படுத்தி அசத்திய  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ,மாணவிகள்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே எசனைகோரை ஊராட்சியில் உள்ளது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. 110 மாணவ,மாணவிகள், 7 ஆசிரியர்களுடன் இயங்கும் இப்பள்ளியின் மாணவ,மாணவிகளின் கற்றல் திறனை மேம்படுத்தவும்,அறிவியல் தொழில்நுட்பத்தை கற்றறியவும்,எளிமையில் புரிந்து கொள்வதற்காகவும் கல்விக் கண்காட்சி இப் பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது.

லால்குடி வட்டார கல்வி அலுவலர் மார்டீன் கண்காட்சியை துவக்கி வைத்தார். இதில் அனைத்து பாடப்பிரிவுகளிலிருந்தும் காட்சிகள் பார்வைக்கு வைக் கப்பட்டிருந்தது.

இதில் தேசப்பற்று ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக அகல் விளக்குகளால் அமைத்த  இந்திய வரைபடம்,சமூகம் அன்றும், இன்றும் நாம் பயன்படுத்திய பொருட்கள், கண்டங் களை கண்டறிவது என ஏழு கண்டங்களில்  என்னென்ன தாவரங்கள், விலங்குகள் உள்ளது என மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு காட் சியில் வைக்கப்பட்டது. இந்திய தலைவர்களின் புகைப்படம்,கற்கால கருவிகள்,கணித பூங்கா,கணித வடிவ கார்பெட், இந்திய,வெளிநாட்டு நாணயங்கள்,பணத்தாள்கள்,நீர்மேலாண்மை,மூலிகை தாவரங்கள், ஐவகை நிலங்கள், எளிய முறையில் ஆங்கில இலக்கணம் கற்றுக் கொள்ள சாட்டுகள் உள்ளிட்டவைகள்  கல்வி கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது.

இதில் கல்விக் கண்காட்சியில் பங்குபெற்ற மாணவ,மாணவிகளுக்கு சான்றிதழ்கள், பரிசுகளை ஸ்ரீரங்கம் அரிமா சங்கத்தினர் வழங்கினர். கண்காட்சியை மாணவ,மாணவிகள்,பெற்றோர்கள்,பொதுமக்கள் பார்வையிட்டுச் சென்றனர்.

பேட்டி : திருமாளவளவன் ( தலைமையாசிரியர் )

Monday, February 10, 2020

On Monday, February 10, 2020 by Tamilnewstv in ,    

 பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள்


மோசடி நிறுவனத்தை தடைசெய்யக்கோரி புதுக்கோட்டை தஞ்சாவூர் திருச்சி  சுற்றியுள்ள பகுதிகளில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இவர்கள் மோசடி தொடரக்கூடாது என்று காவல்துறை அதிகாரிகளை சந்தித்து பொதுநலன் கருதி  சத்தியமூர்த்தி என்பவர் மனு அளித்து வருகிறார்
 புதுக்கோட்டை மாவட்டத்தில் ELFIN நிறுவனத்தின் சந்திப்பு நடத்தக்கூடாது கூடாது என்று மாவட்ட நிர்வாகம் காவல்துறை உயரதிகாரிகள் முடிவு செய்த நிலையில் திடீரென புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகவும் நேர்மையான காவல் கண்காணிப்பாளர் அவர்களை ELFIN நிறுவனத்தின் உரிமையாளர்கள் சந்தித்தது ஏன் என்ற கேள்வி ஏற்படுத்தி உள்ளது
On Monday, February 10, 2020 by Tamilnewstv in ,    
உரிய சொத்து பங்கீடு வழங்க காவல்நிலையம் மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்டவர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலை முயற்சி.

திருச்சி துவாக்குடி தெற்குமலையைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் சேலம் உருக்காலையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி சேலம் ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் மணிகண்டனின் தந்தை காமராஜ் தனது தாய் ராணியுடன் செய்துக்கொண்ட முதல் திருமணத்தை மறைத்து, லலிதா என்ற பெண்ணை 2ம் தாரமாக திருமணம் செய்து கொண்டு, தற்போது லலிதாவிற்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், மூத்த தாரத்தின் மகனான மணிகண்டனுக்கும், அவரது தாயாருக்கும் வழங்கவேண்டிய உரிய பங்கு வழங்காததாலும், இதற்கு முட்டுக்கட்டையாக இரண்டாம் மனைவி லலிதா மற்றும் உறவினர்கள் செயல்பட்டு வருவதாகவும், எனவே தங்களுக்கான உரிய பங்கு தொகையை பெற்றுத் தரக்கோரி திருவெறும்பூர் காவல் நிலையத்திலும், மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஏற்கனவே புகார் வழங்கப்பட்டுள்ளது. அப்போது கண்துடைப்புக்காக விசாரணையை மட்டும் நடத்திவிட்டு அதற்கான எந்த ஒரு முயற்சியும் செய்யாத நிலையில், முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில்,

 இன்றைய தினம் மணிகண்டன் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீ குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அதனை தடுத்து நிறுத்தி மணிகண்டனை காப்பாற்றினர். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த தீக்குளிப்பு முயற்சி சம்பவத்தால் ஆட்சியர் வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது.

பொது மக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையில் பொது இடத்தில் தீக்குளிப்பு முயற்சி செய்த மணிகண்டனை மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி கைது செய்த போலீசார் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
On Monday, February 10, 2020 by Tamilnewstv in ,    
புதுகை சத்யமூர்த்தி அடுத்த தகவல்.
சில நாட்களுக்கு முன்பு தஞ்சையில் எல்பின் நிறுவனத்தின் சார்பில் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது.

இத்தகவல் அறிந்த மாவட்ட நிர்வாகமும், காவல்துறையினரும் துரிதமாக செயல்பட்டு எல்பின் நிறுவனம் முறையாக நடத்தும் நிறுவனமா என்பதை அறிந்து முறையாக வழக்குப்பதிவு செய்து ஒருவரை கைது செய்தனர். ஆனால் ரமேஷ் குமார் அவர்கள் ஆசிரியராக உள்ள  பத்திரிகையில் நேர்மையாக செயல்பட்ட காவல்துறையினரை தங்களைக் காப்பாற்றிக் கொள்ள பத்திரிகையில் காவல்துறையினரை தவறாக பதிவு செய்துள்ளனர் .

முறைப்படி தாங்கள் மத்திய மாநில அரசுக்கு வரி செலுத்துகிறோம் கம்பெனி பதிவு செய்து உள்ளோம் என செய்தி வெளியிட்டு உள்ளனர். அவர்கள் பல கம்பெனியை தொடங்கி பொதுமக்களை  ஏமாற்றி உள்ளனர். முதலில் அவர்கள் எந்த கம்பெனி நடத்துகின்றார்கள்.  JP ஓரியண்ட் என்ற கம்பெனியும்   வரகா மணி என்ற கம்பெனியும், RMWC கம்பெனி எல்பின்  என்ற நிறுவனமும், தற்போது

குளோபல் டிரடிங், குளோபல் ரியாலிட்டி என்ற  பெயரில் கம்பெனி  தற்போது நடத்தி வருவதாக கூறுகிறார்கள். முதலில் தங்கள் கம்பெனி பெயரை உறுதியாக கூறட்டும். இவர்கள் பல வங்கிகளிலும் கணக்கு வைத்துள்ளனர் தங்கள் ஊழியர்களுக்கு இதில் ஆன்லைன் மூலம் பணம் பரிவர்த்தனை செய்கிறார்கள். சரி இந்த பணப்பரிவர்த்தனை செய்ய உங்களுக்கு பணம் எங்கிருந்து வருகிறது. எதில் முதலீடு செய்து எதிலிருந்து எடுத்து கொடுக்கிறீர்கள் என்பதை தெளிவாக சொல்லுங்கள். காவல்துறையை அவதூறு செய்தி வெளியிடும் அவர்கள் நடத்தி வரும் பத்திரிக்கை .  கடந்த சில நாட்களுக்கு முன்பு போலியாக பத்திரிக்கையாளர் யார் அவர்கள் மீது  தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் மாண்புமிகு நீதிபதி தமிழக அரசுக்கு அறிக்கை அளித்துள்ளார்.
பொருளாதார குற்றப்பிரிவில்  வழக்கில் உள்ள குற்றவாளி ரமேஷ் குமார் இவர் எப்படி  பத்திரிகையின் ஆசிரியரானார். ஒரு குற்றவாளி எப்படி பத்திரிகை நடத்த முடியும். தங்களையும், தங்களது நிறுவனத்தையும் பாதுகாத்துக்கொள்ள பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நடத்தி வரும் இவர் மீது ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நேர்மையாகச் செயல்படும் காவல்துறையை குற்றம்சாட்டும் இவர்கள் மீதும் பத்திரிகை மீது நீதித்துறை நன்கு ஆராய்ந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது மூலம் பொதுமக்கள் விழிப்புணர்வு அடைவார்கள் என்பது எனது கருத்து. நன்றி ஜெய் ஹிந்த்

Sunday, February 09, 2020

On Sunday, February 09, 2020 by Tamilnewstv in ,    
தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் ஓட்டுநர்கள் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் அனைத்து வாகன ஓட்டுநர் சங்கத்தினர் 

திருச்சியில் கோரிக்கை விடுத்துள்ளனர்.                             தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுநர் சங்கத்தின் மாநில ஆலோசனை கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. சங்கத்தின் மாநில தலைவர் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்திற்கு பின்பு மாநில தலைவர் பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறும்போது...... தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடியில் உள்ள ஊழியர்கள் வாகன ஓட்டுநர்களை மரியாதை குறைவாக நடத்துகின்றனர். மேலும் தகாத வார்த்தையால் பேசுகின்றனர். இதனை மாற்றிக்கொள்ளவேண்டும். ஓட்டுநர்கள் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். சங்க பொதுச் செயலாளர் மணிகண்டன், பொருளாளர் உள்ளிட்ட மாநிலம் முழுவதிலும் இருந்து வந்திருந்த ஏராளமான நிர்வாகிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
On Sunday, February 09, 2020 by Tamilnewstv in ,    

5, 8ம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்த தமிழக அரசிற்கு  தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி திருச்சியில் நன்றி தெரிவித்து உள்ளது.                                                          தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில்....... ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ததற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது, ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் போது ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டம் குறித்து செய்தியாளர்களிடம் இரா.தாஸ் பேசும்போது.... ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு நடைமுறையை முதன்மை கல்வி அலுவலர்கள் பின்பற்றி வருகின்றனர். அவ்வாறு இல்லாமல் மாநிலம் முழுவதும் ஒரே நடைமுறை பின்பற்றப்பட வேண்டும். இல்லையெனில் பிப்ரவரி இறுதி வாரத்தில் இதனை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என்று அவர் கூறினார். கூட்டத்தில் மாநில  தலைவர் நடராஜன், மாநில பொருளாளர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
On Sunday, February 09, 2020 by Tamilnewstv in ,    
*திருச்சி எல்பின் நிறுவனத்தின் மீது திருச்சி ஸ்ரீரங்கம் திருவெங்கடம் யாதவ் பரபரப்பு புகார்* .

அவர் நமது நிருபரிடம் தெரிவித்தபோது


நான் 2017 ஆம் ஆண்டு எனது நண்பன் மணியின் மூலம் எல்பின் நிறுவனம் அறிமுகப்படுத்தப்பட்டது. முதலில் வெறும் ரூபாய் 5000 மட்டும் கட்டினேன். அதற்கு இரண்டாவது நாளில் 3000 மதிப்புள்ள மளிகை பொருட்கள் கொடுத்தனர். அடுத்த நாள் முதல் பேங்க் கமிஷன் 10 ரூபாய் போக தினமும் 40 ரூபாய் அக்கவுண்டில் ஏறியது. இதனால் மணி என்பவர் மீண்டும் 55 ஆயிரம் கட்டி ஷேர் ஹோல்டர் ஆகுங்கள் என கூறியதன் பேரில் ரூபாய் 55 ஆயிரம் கட்டினேன். அதற்குரிய கமிஷன் பணம் அக்கவுண்டில் சரியாக ஏறியது. அதனால் எல்பின் நிறுவனம் நல்ல நிறுவனம் நம்பிக்கை அந்நிறுவனம் என்று என் மனதில் எண்ணம் தோன்றியது . இது அவர்கள் செய்யும் தந்திரம் என தெரியாமல் போனது.
சிறிது நாளில் ELFIN தலைவர் ராஜா என்னும் அழகிரிசாமி ரியல் எஸ்டேட் தொழில் செய்வதாகவும் அதில் பங்குதாரராக ரூபாய் 5 லட்சம் கட்ட வேண்டும் எனக் கூறினார். நான் ராஜா என்னும் அழகிரிசாமியிடம் உங்கள் டீம் லீடர்கள் கீழ் பணிபுரிய மாட்டேன்  நான் நேரடியாக உங்களிடம் தான் பணம் கட்டுவேன் என கூறினேன் .இத நம்பி நானும் ரூ.4.5000/- பணத்தைக் கட்டினேன் திருச்சி சங்கம் ஹோட்டலில் வைத்து ராஜாவிடம் நேரடியாக கொடுத்தேன். இதை மேடையில் அறிவிப்பேன் என கூறினார், ஆனால் பல நிகழ்ச்சிகளையும் அவர். மேடையில் கூறவில்லை.
இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் ரூபாய் 5000 ரூபாய் 55 ஆயிரம் இந்த 4.50 லட்சம் இதற்கும் இவர்கள் ரசீது அல்லது ஆவணங்கள் எதுவும் வழங்கவில்லை. நானும் முதல் 5000 மற்றும் 55 ஆயிரம் பணம் திரும்ப முறையாக கிடைத்தால் இதை பெரிதாக எண்ணவில்லை. ஆனால் சிறிது நாட்களில் ராஜாவின் பேச்சு மாறியது. என்னை தாக்குவதற்கு, நமது கம்பெனியை அழிப்பதற்கு சிலர் முயற்சி செய்கிறார்கள் என சம்மந்தம் சம்மந்தம் இல்லாமல் பேசினார். இரண்டு வருடங்களுக்கு முன்பு  திருச்சி மன்னார்புரம் பழைய வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதிதாக அலுவலகம் திறந்த பின்பு காவல்துறையை சேர்ந்த முன்னாள் சப்-இன்ஸ்பெக்டர்கள் எஸ்.எஸ்.ஐ கள் என பலரும் அந்த நிறுவனத்தில் பணிபுரிய தொடங்கினார்கள். கம்பெனியின் ட்ரெண்டு மாறத்தொடங்கியது. 2017 ஆம் ஆண்டு நான் முதலீடு செய்தது இன்றைய தேதி வரை ஒரு ரூபாய் கூட திரும்ப கிடைக்க. நானும் தற்போது ஆறு மாதமாக தொடர்ந்து போராடி வருகிறேன். நடுவில் போனிலும் நேரிலும் சென்று கேட்டபோது பில் இருக்கா ஆவணங்கள் இருக்கா ஏதாவது கொண்டு வாருங்கள் உடனடியாக பணம் தருகிறோம் என இல்லாத ஒன்றை கேட்டு விரட்டி விட்டார்கள். தற்போது திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் ரிஜிஸ்டர் போஸ்ட் மூலம் நான் அனுப்பினேன் ஆனால் 5. 2. 20 வரை எனது மனுவை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் கடந்த ஆறாம் தேதி நான் நேரில் சென்று மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் எனது ஆதார் கார்டுகள் போன்றவற்றை காட்டி முறையாக நிறுவனத்தின் மீதும் அதன்  நிர்வாக இயக்குனர் ராஜா (எ) அழகிரிசாமி,  ரமேஷ், மற்றும் புதிதாக உள்ள சில இயக்குனர்கள் மீது புகார் மனு அளித்துள்ளேன். பாவம் அப்பாவி மக்கள் பணத்தை வைத்துக்கொண்டு இவர்கள் தற்போது அறம் மக்கள் நல சங்கம் ஒன்றை உருவாக்கி உதவிகள் செய்து நல்லவர்கள் போல்  போலி மாயையை உருவாக்கி பொதுமக்கள் பணத்தை ஆட்டையைப் போடுகிறார்கள்.  டிவி, மக்கள் பத்திரிக்கை, விரைவில் தொடங்கப் போவதாக கூறி வருகின்றனர்.
இவர்களின் பணத்தால் அரசியல் கட்சியினர், அரசு அதிகாரிகள் மாநில அளவில் உள்ளவர்களை எல்லாம் தங்கள் கையில்  வைத்திருப்பதாக இந்தத் தகவல்கள் தெரிய வருகிறது. யாரை எவ்வளவு பெரிய ஆட்களை (பணத்தால்) கையில் வைத்திருந்தாலும் இன்று நீங்கள் ஜெயிப்பது போன்று தோன்றும். ஆனால் உண்மை என்றும் தோற்காது என்று திருவேங்கடம் யாதவ் கூறியுள்ளார்.