Friday, March 13, 2020

On Friday, March 13, 2020 by Tamilnewstv in    
மாண்புமிகு உயர் நீதிமன்ற தீர்ப்பை அதிகாரிகள் எதிர்தரப்பினர் கட்சி பிரமுகர்கள் மதிக்கவில்லை ஊர் மக்கள் கதறல்
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கீழ அன்பில் கிராமத்தில் ஆச்சிராமவள்ளி அம்மன் கோவில் உள்ளது.

இந்த கோவில் கீழ அன்பில், கோட்டைமேடு, ஜெங்கமநாதபுரம், மங்கம்மாள்புரம், குறிச்சி, படுகை, பராமங்கலம் ஆகிய 7 கிராமங்களுக்கு சொந்தமானதாகும். இந்தக் கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தக்  கோவிலில் மாசி மாதம் தோறும் திருவிழா நடைபெறும்.

அப்போது அம்மன் வீதி உலா வந்து கிடா வெட்டு நடைபெறும். இந்த வகையில் கடைசியாக கடந்த 1993 ஆம் ஆண்டு மாசி திருவிழா நடைபெற்றது. அப்போது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் வசிக்கும் பகுதிக்குள் அம்மன் வீதி உலா செல்ல எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது ஏற்பட்ட பிரச்சினை காரணமாக திருவிழா நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு சமீபத்தில் தீர்ப்பு வெளியானது. பழைய முறைப்படியே திருவிழா நடைபெற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. தீர்ப்பைத் தொடர்ந்து 27 ஆண்டுகள் கழித்து தற்போது திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக  வருவாய் துறை அதிகாரிகள் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதில்  அந்த குறிப்பிட்ட சமூகத்தினர் வசிக்கும் பகுதிக்குள்  அம்மன் கொண்டு செல்லாமல் ஒரு பொது இடத்தில் வைத்து அனைவரும் வழிபடுவது என்று முடிவு செய்யப்பட்டது. இதனடிப்படையில் திருவிழா தொடங்கி நடைபெற்றது. ஆனால் பொது இடத்தில் வைத்து வழிபாடு நடத்த அந்த சமூக மக்கள் மறுப்பு தெரிவித்தனர். தங்களது பகுதிகளிலும் அம்மன் வீதிஉலா நடைபெற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இதனால் அந்தப் பகுதியில் காவல்துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு இடையே அம்மன் வீதிஉலா உலா நடைபெற்றது. ஆனால் அந்த குறிப்பிட்ட சமூகத்தினர் வசிக்கும் பகுதிக்குள் அம்மன் வீதிஉலா நடைபெறவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் கவலை அடைந்தனர். இதை கண்டித்து லால்குடி மெயின் ரோட்டில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. எனினும் இதற்கு தீர்வு கிடைக்கவில்லை. வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் மக்களை சமாதானப்படுத்தினர்.

Thursday, March 12, 2020

On Thursday, March 12, 2020 by Tamilnewstv in    
திருச்சியில் இஸ்லாமியர்கள் சாலை மறியல் இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற மாட்டோம் என்று அறிவித்ததை தொடர்ந்து

இஸ்லாமியர்கள் திருச்சி பால்பண்ணை அருகே சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் அப்பகுதி வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு முடங்கிக் கிடக்கின்றன


பழைய பால்பண்ணை முழுவதும் முடங்கிக் கிடக்கின்றன போராட்டம் தொடரும் என்று அறிவிப்பு செய்கின்றனர் அங்கு பதற்றம் ஏற்பட்டு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர் இரவு 11 அளவில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் விடியற்காலை 3 மணி வரை நீடித்தது திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் சுமூக பேச்சுவார்த்தையால் அனைவரும் கலைந்து சென்றனர்
On Thursday, March 12, 2020 by Tamilnewstv in    
திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி பொதுமக்களை ஏமாற்றி பல கோடி சம்பாதித்து வரும் நிறுவனம் தான் எல்பின்

 ( இப்படி ஒரு பெயர் தற்போது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது)

பல்வேறு வகையில் கவர்ச்சி திட்டங்களை அறிவித்து பொதுமக்களை ஏமாற்றி பல ஆயிரம் கோடி சம்பாதித்து வருபவர்கள் எல்பின் மற்றும் அறம் மக்கள் நல சங்க இயக்குனர்கள் அழகர்சாமி ( எ ) ராஜா, எஸ்ஆர்கே ( எ ) ரமேஷ்குமார்.
எல்பின் நிறுவனத்தின் பெயரில் தமிழகத்தில் எங்கும் கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை மகாபலிபுரம் ஐந்து நட்சத்திர ஓட்டலில் காவல்துறையினரை மீறி கூட்டம் நடத்த உள்ளனர். ஐந்து நட்சத்திர ஓட்டலில் காவல்துறை நுழைய அனுமதி இல்லை என்பதால் மகாபலிபுரத்தில் தேர்ந்தெடுத்து அங்கு கூட்டம் நடத்த உள்ளனர்.
இதனிடையே மதுரையில் காவல்துறையினர் அடுத்தகட்ட நடவடிக்கையாக எல் பின் சகோதரர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சம்மன் அனுப்பி உள்ளனர். தஞ்சை போலீசாரை சமாளித்து அங்கு கைதானவர்களை வெளியில் எடுத்தது போல் மதுரை போலீசாரையும் ( 💵💵💵 )சமாளித்து மீண்டும் மக்களுக்கு நாம் நன்மை செய்வோம் என அவர்கள் உறுப்பினர்களிடையே தகவல் பரப்பி வருவதாக ஓர் தகவல்.
அதேபோல் இன்று ஓர் பத்திரிக்கை சங்கத்தை அழைத்து தங்கள் எல்பின் நிறுவனத்துக்கு ஆதரவாக நீங்கள் செயல்பட்டால் உங்களுக்கு அனைத்தையும் செய்கிறேன் நாங்கள் தயாராக உள்ளோம் என எஸ்ஆர்கே (எ) ரமேஷ்குமார் தெரிவித்துள்ளதாகவும் கூறுகிறார்கள்.
எது எப்படியோ தவறு செய்தவர்கள் கண்டிப்பாக தண்டனை அடைந்தே தீருவார்கள் என்பது ஆண்டவன் முடிவு. மதுரை போலீசாரை பணத்தால் சமாளிப்பார்களா    வேறு வழியில் அமைதிப் படுத்துவார்களா ? என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
On Thursday, March 12, 2020 by Tamilnewstv in    
திருச்சி 

திருச்சி கிஆபெ விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் வனிதா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 

திருச்சி அரசு மருத்துவமனையில் கடந்த 2018ம் ஆண்டு இருதய உள்துளை சிகிச்சைக்காக கேத்லேப் தொடங்கப்பட்டது. இங்கு தமிழக முதலமைச்சர் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஆஞ்சியோ மற்றும் ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கே பலவிதமான இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாதத்திற்கு  ஆயிரம் வெளி நோயாளிகளும் 3,000 உள் நோயாளிகளும் இதன் மூலம் பயனடைந்து வருகின்றனர். நெஞ்சு வலியுடன் வரும் நோயாளிகளுக்கு இங்கு உரிய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தேவைப்பட்டால் அவர்களுக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

திருச்சி மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த நோயாளிகள் இதன்மூலம் பயனடைந்துள்ளனர். கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி  வரையிலான ஓராண்டில் ஆயிரம் ஆஞ்சியோகிராம் மற்றும் ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைகள் திருச்சி அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு தனியார் மருத்துவமனைகளில் ஒன்றரை லட்சம் முதல் இரண்டு லட்சம் ரூபாய் வரை செலவாகும். திருச்சி அரசு மருத்துவமனையில் முற்றிலும் காப்பீட்டு திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
 இருவருக்கு நிரந்தர பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டுள்ளது.  பெண்களுக்கு கர்ப்பப்பை நாளங்களில்  ரத்தப்போக்கு அதிகமாக இருக்கும். இதனால் அவர்கள் உயிர் இழக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.   தற்போது கேத்லேப் மூலம் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளாமலும், கர்ப்பப்பையை அகற்றாமலேயே சிகிச்சை அளிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பிரசவத்திற்கு பின்னர் ஏற்படும் ரத்தப் போக்கினால் ஏற்படும் உயிரிழப்புக்கள் தடுக்கப்படுகிறது.  பிறப்பிலேயே இருதயத்தில் ஓட்டையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு  கேத்லேபில் உள்ள ஒரு கருவி மூலம் துவாரத்தை அடைக்கும் சிகிச்சை முறை விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 12 படுக்கைகள் கொண்ட பிரத்தியேக சிகிச்சை வார்டு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது புதிதாக மேலும் 12 படுக்கைகள் கொண்ட சிகிச்சை வார்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. அடுத்த சில நாட்களில் இது பயன்பாட்டுக்கு வரும்.
திருச்சி விமான நிலையத்திலிருந்து 9 பயணிகள் காய்ச்சலுடன் இங்கு பரிசோதனைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு லேசான காய்ச்சல் மட்டுமே இருந்தது. அவர்கள் உடனடியாக அதற்கான சிகிச்சை பெற்று வீட்டிற்குச் சென்று விட்டன என்றார்.
 உடன் இருதய அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் பாலசுப்ரமணியன், டாக்டர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் இருந்தனர்.


Wednesday, March 11, 2020

On Wednesday, March 11, 2020 by Tamilnewstv in    
திருச்சி சோமரசம்பேட்டை அதவத்தூரில் மத மோதலுக்கு திட்டமிட்ட சக்திவேல்ஜீ  உள்ளிட்ட மூன்று பேர் கைது.



திருச்சி மணிகண்டம் ஒன்றிய இந்து முன்னனி பொறுப்பாளர் சக்திவேலின் வீட்டில் நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனம், நேற்றிரவு மர்ம நபர்களால் தீ வைக்கப்பட்டு ஜன்னல்கள் சேதப்படுத்தப்பட்ட விசயத்தில் திடீர் திருப்பம்.*

*இந்து முன்னனியில் முக்கிய பதவியை பெற தனது வாகனத்திற்கு தானே தீ வைத்து நாடகமாடியது அம்பலம்.*
*சக்திவேல் உள்ளிட்ட மூவரை கைது செய்தது திருச்சி காவல்துறை.*

Tuesday, March 10, 2020

On Tuesday, March 10, 2020 by Tamilnewstv in    


திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து தமிழகம் பாண்டிச்சேரியில் பொதுமக்களை ஏமாற்றி கோடி கோடியாக சம்பாதித்து வரும் நிறுவனம் தான் எல்பின் . எல்பின் நிறுவனத்தின் கணக்குகள் முடக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும்


தற்போது  sparrowglobal ஏஜன்ஸி என்று நடத்தி வருகிறார்கள் ஆனால் அழைக்கும் போது எல்பின் குடும்பத்தினர் என்று அழைக்கிறார்கள்



இந்த நிறுவனத்தினர்  தற்போது நூதன முறையில் பொதுமக்களை  ஏமாற்றி 3000 கோடி சம்பாதிக்க புதிய திட்டத்தைத் தீட்டியுள்ளனர்

இதன் விபரம்:

தமிழகம் முழுவதும் மொத்தம் 234 தொகுதி, ஓர் தொகுதிக்கு 5 கடைகள்  கடைகள் என சுமார் 1,1 70 கடைகள் தொடங்க உள்ளனர். இது வசந்த் அண்ட் கோ, ஜியோ ஷோரூம் போல் அறம் ஷோரூம் தொடங்க உள்ளனர். ஒரு கடைக்கு 15 பார்ட்னர்கள் ஆக 17,550 நபர்கள் இதில் ஏஜென்சி பாட்னர்களாக  உள்ளனர். ஒரு நபருக்கு தல இரண்டு லட்சம் முதல் 5 லட்சம் வரை டெபாசிட் செய்ய வேண்டும் என கூறி உள்ளனர். 2 லட்சம் என்றால் கூட 3000 கோடிக்கு மேல் வருகிறது. சராசரியாக 4 லட்சம் ஒரு நபர் கட்டினால் 6000 கோடி மேல் வரும். இந்தப் பணம் முறைப்படி தமிழக மற்றும் இந்திய அரசால் அனுமதி பெற்று வசூல் செய்யப்படுகிறது. அல்லது எல்பின் அதிபர்கள் ராஜா ( எ ) அழகர்சாமி எஸ் ஆர் கே (  எ ) ரமேஷ் குமார் ஆகிய இருவரும் தனிப்பட்ட முறையில் வசூல் செய்ய உள்ளனரா என தெரியவில்லை. இந்த 6 ஆயிரம் கோடிக்கு முறைப்படி வரி மற்றும் GST கட்டுவார்களா? அல்லது இந்தப் பணம் 6 ஆயிரம் கோடியும் வசூல் செய்துவிட்டு தலைமறைவு ஆவார்களா என்பது கடவுளுக்கே வெளிச்சம்.

( எல்பின் முக்கிய பினாமி  இலுப்பூர் ராஜப்பா தலைமையில் சென்னையில் பணங்களை எப்படி பதுக்குவது என்று ரகசிய கூட்டம் காவல்துறை மற்றும் மத்திய வருமானத் துறை அதிகாரிகளுக்கு தெரியாமல் காவல்துறை தலைவர்  டிஜிபி அவர்களுக்கு  சவால் விடும் வகையில் அனுமதி வாங்காமல் தனியார் மண்டபத்தில் ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்

பின் குறிப்பு :
இதுபோன்று எல்பின் நிறுவனத்தில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து தொடர்ந்து தினமும் செய்தி வெளியிட்டு வருவதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு என் மீது ( சபரிநாதன்) கொலை முயற்சி தாக்குதல் நடைபெற்றது. தற்போது எல்பின் சகோதரர்களிடம் சபரிநாதன் ஆகிய நான் பல லட்சங்கள் இவர்களை நான் ஏமாற்றியதாக புதிய ஒரு கதையை கட்டி வருகின்றனர்

தமிழகத்தை தொடர்ச்சியாக காவல்துறை  நீதித்துறை  மற்றும் பொது மக்களை ஏமாற்றிய இவர்கள் புதிய யுக்தியை துவங்கியுள்ளனர்

இதுபோல் தொடர்ந்து பொதுமக்கள் விழிப்படைய வேண்டும் என்ற நோக்கில் செய்தி வெளியிட்டவர்கள் மீது கொலை முயற்சியும், பொய் வழக்கும் பதியும் எல்பின் அதிபர்கள் அழகர்சாமி என்கிற ராஜா  மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ் அறம் தொலைக்காட்சி இயக்குனர் ( இவர்கள் காவல்துறைக்கே எச்சரிக்கை விடுத்தார்கள்) மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது என சமூக ஆர்வலர்கள் வட்டாரங்கள் கூறுகின்றன.

Monday, March 09, 2020

On Monday, March 09, 2020 by Tamilnewstv in    
குடியுரிமை சட்டத் திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட சட்டங்களை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. திருச்சி ராமகிருஷ்ணா பாலம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் உதுமான் அலி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் அஷ்ரப், இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி எஸ்டிபிஐ கட்சி ஹஸன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் ஹபீப் ரஹ்மான் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு மத்திய, தமிழக அரசுகளுக்கு எதிராகவும்  கோஷங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து மாவட்ட தலைவர் உதுமான் அலி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறுகையில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைச் சட்ட திருத்தம் உள்ளிட்ட கருப்புச் சட்டங்களை தமிழகத்தில் நிறைவேற்ற மாட்டோம் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு நிறைவேற்றினால் தமிழக அரசுக்கு எதிரான போராட்டத்தை நாங்கள் கைவிடுவோம் என்றார்.
On Monday, March 09, 2020 by Tamilnewstv in    
திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து தமிழகம் முழுவதும் கிளைகள் அமைத்து பொதுமக்களை ஏமாற்றி பல 100 கோடி சொத்து சேர்த்து வலம் வரும் போலி நிறுவனம் தான் எல்பின்.

இதன் நிறுவனர் அழகர்சாமி என்னும் ராஜா மற்றும் அவரது தம்பி எஸ் ஆர் கே என்னும் ரமேஷ் குமார்

இருவரும் காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்து சுதந்திரமாக தற்போது துபாய் சென்று உள்ளனர். நாளை துபாய் சென்ற 800 லீடர்களும்  தாய் நாடு திரும்புவதாக  தகவல். அதாவது சென்னை திருச்சி மற்றும் கொச்சின் விமான நிலையங்களில் துபாய் விமானம் முலம்  வருகை. இதில்  எத்தனை பேர் கொரோனா வைரஸ்யுடன் வருகிறார்கள் என்பது தெரியவில்லை.

தஞ்சையில் இவர்கள் அனுமதி இன்றி கூட்டம் நடத்தியதாக தஞ்சை மாவட்ட லீடர்கள் பிரசன்னா வெங்கடேஷ் மற்றும் கிங்ஸ்லி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

 பின் எல்பின் நிறுவனர் அழகர்சாமி யால் பலகோடி ரூபாய் செலவு செய்து ஜாமினில் வெளி வந்தனர். இந்த வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளி சத்யபிரியா  தலைமறைவாக இருந்தார். கடந்த வாரம் ஜாமீனில் வந்த பிரசன்ன வெங்கடேஷ், கிங்ஸ்லி மற்றும் தலைமறைவாக இருந்த சத்யபிரியா ஆகியோர்


காவல்துறை கண்களில் மண்ணைத் தூவி துபாய் சென்று உள்ளனர்.


இந்நிலையில் துபாய் சென்ற அனைவரும் நாளை சொந்த ஊர் திரும்ப உள்ளனர்.

 காவல்துறையிடம் அனுமதி வாங்காமல் வெளிநாடு சென்ற பிரசன்ன வெங்கடேஷ் மற்றும் கிங்ஸ்லி

 கைது செய்யப்படுவார்களா ? அதேபோல் தலைமறைவாக இருந்த சத்திய பிரியா ( நேற்றுவரை துபாயில்  ஜாமீன் கிடைக்கும் வரை  இருப்பதாக தகவல் கிடைத்தது) 

தற்போது  எல்பின் நிறுவன சகோதரர்கள் அழகர்சாமி என்கிற ராஜா எஸ் ஆர் கே ரமேஷ் குமார் என்கிற ரமேஷ் தமிழகம்  வரச்சொல்லி  இருப்பதால் தமிழ்நாட்டில்  அல்லது வேறு மாநிலத்தில் விமான நிலையம் வந்து இறங்கி தான் ஆக வேண்டும் இவர்களை  சட்டத்திற்கு புறம்பாக  நடக்க வலியுறுத்திய எல்பின் சகோதரர்களும் பிரசன்ன வெங்கடேஷ்  கிங்ஸ்லி  சத்திய பிரியா  அவர்களுடன் கைது செய்யப்படுவார்களா என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.
இந்த எதிர்பார்ப்புகளை  தஞ்சை மாவட்ட காவல்துறையினர் கண்டிப்பாக செயல்படுத்துவார்கள் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நம்பிக்கை.

Sunday, March 08, 2020

On Sunday, March 08, 2020 by Tamilnewstv in    
சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்செரிதல் விழா தொடங்கியது.


பக்தர்களின் நலனுக்காக சமயபுரம் மாரியம்மனின்  பச்சை பட்டினி விரதம் தொடங்கியது. பக்தர்கள் பூமாரி பொழியும் சமயபுரம் மாரியம்மன் பூச்சொரிதல் விழா இன்று கோலாகல ஆரம்பம்  ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்.

பக்தர்களின் நலனுக்காக சமயபுரம் மாரியம்மனின்  பச்சை பட்டினி விரதம் தொடங்கியது. பக்தர்கள்  பூமலை பொழியும் சமயபுரம் மாரியம்மன் பூச்சொரிதல் விழா இன்று கோலாகல ஆரம்பம்  ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில் வந்து அம்மனிடம் வேண்டுபவை உடனே நிறைவேறும் என்பது ஐதீகம். இந்த கோயிலில்  நடைபெறும் விழாக்களில் மிகவும் பிரசித்திபெற்றது பூச்சொரிதல் விழா ஆகும். ஆண்டுதோறும் மாசிமாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை துவங்கி பங்குனிமாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை 28நாட்கள்  பூச்சொரிதல் விழா நடப்பது வழக்கம்.
தன்னை நாடிவரும் பக்தர்களின் நலனுக்காகவும், மாய அசுரனை வதம் செய்த பாவம் நீங்கவும், ஈஸ்வரனை நோக்கி அம்பாள் 28நாள் விரதமிருப்பதாக ஐதீகம், இவ்விரதகாலத்தில் அம்மனுக்கு தளிகை, நைவேத்தியம் இன்றி இளநீர், நீர்மோர், பானகம், துள்ளுமாவு மட்டுமே படைக்கப்படும். தங்களின் நலனுக்காக விரதமிருக்கும் அம்மனை வாழ்த்தி பூக்களை தூவி பக்தர்கள் வழிபடுவதே பூச்சொரிதல் விழாவாக கொண்டாடப்படுகிறது
அதன்படி இன்று காலை விக்னேஷ்வரா பூஜை மற்றும் காப்புக்கட்டுதலுடன் பூச்சொரிதல் விழாகோலாகலமாக துவங்கியது.

    கோவில் நிர்வாகத்தின் சார்பில் சமயபுரம் கோவில் இணைஆணையர் அசோக்குமார்  தலைமையில் கோயில் பணியாளர்கள், கிராமமக்கள் உள்ளிட்டோர் யானை மீதும், அவரவர் தலையில் பூந்தட்டுகளை சுமந்து தேரோடும் வீதியில் ஊர்வலமாக சென்று  ஆலயத்தை வந்தடைந்து அங்கு அம்மனுக்கு சாற்றப்பட்டு அர்ச்சனை செய்யப்பட்டது. 

    அதனைத்தொடர்ந்து இன்றுமுதல் திருச்சி மட்டுமன்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பல்வேறு வாகனங்களிலிருந்து அம்மனுக்கு பக்தர்கள் கொண்டுவரும் பூக்களைக்கொண்டு புஷ்பாபிஷேகம் நடைபெறும்.

     பூச்சொரிதல் விழாவையொட்டி பலத்தபோலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

        ச. கண்ணனூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பூச்சொரிதல் விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு 50 திற்கும் மேற்பட்ட இடங்களில் தற்காலிக குடிநீர்,நடமாடும் கழிப்பறை வசதிகள் செய்துள்ளனர்.