Wednesday, April 01, 2020

On Wednesday, April 01, 2020 by Tamilnewstv in    
திருச்சி ஏப் 01

தமிழக அரசுஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் தங்களது வாழ்வு சான்றிதழை ஜீலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய மாதங்களில்
அளிக்கலாம் -  திருச்சி  மாநகராட்சி ஆணையர்

இது குறித்து திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவசுப்பரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்

திருச்சி மாநகராட்சி ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் தங்களது வாழ்வுச் சான்றிழ், வேறு இடங்களில் பணிபுரியவில்லை என்பதற்கான சான்று, மறு திருமணம் செய்யாததற்கான சான்று ஆகியவைகளை ஏப்ரல், மே மற்றும்  ஜீன் மாதங்களுக்குப் பதிலாக ஜீலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய மாதங்களில் ஏதேனும் ஒரு நேரத்தில் அளிக்கலாம் என
அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.


On Wednesday, April 01, 2020 by Tamilnewstv in    
கரோனா நோய் தடுப்புக்கு அனைத்து வயதினரும் அச்சமின்றி கபசூர குடிநீரை பருகலாம் என்று திருச்சி மாவட்ட சித்த அலுவலர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
  •  இது குறித்து திருச்சி மாவட்ட சித்த அலுவலர்

 டாக்டர் காமராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்தியாவை தொற்று நோயான கரோனா அச்சுறுத்தி வருகிறது. இதனால் நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. 



அனைத்து ஆயுஷ் மருத்துவமனைகளிலும் பல ஆண்டுகளாக நுரையீரல் நோய்க்கு எதிர்ப்பு சக்தியாக நிலவேம்பு குடிநீர் மற்றும் கபசூர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இது புதிய மருந்து கிடையாது. இதை பல ஆண்டுகளாக நாம் பயன்படுத்தி வருகிறோம். இது தடுப்பு மருந்தாகும். மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் தமிழக அரசு மருத்துவமனைகளில் கபசூர குடிநீர் இலவசமாக வழங்கப்படுகிறது. 

( போலி மருத்துவர் அறிவுரை இப்படி அறிவுரைகளை பின்பற்றக் கூடாது)

மக்கள் அதை வாங்கி பருகி நோய் வராமல் தடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் வெளியில் இந்த குடிநீர் பொடியை வாங்கும்போது அதில் நிறுவனப் பெயர், அனுமதி எண், மூலப்பொருள்கள் விபரம், விலை, காலாவதி தேதி உள்ளிட்டவற்றை பார்த்து வாங்க வேண்டும். இவை குறிப்பிடப்படவில்லை என்றால் அந்த மருந்துகளை வாங்க கூடாது என்றார்.
On Wednesday, April 01, 2020 by Tamilnewstv in    

Contribution of Rs.25 lakhs to Prime Minister’s Citizen Assistance and Relief in Emergency Situations Fund (PMCARES) Fund


We the All India Nationalised Banks Officers’ Federation (AINBOF) is a registered Trade Union with a membership of more than one lakh and is meant exclusively for the officers working in the Nationalised Banks.
The COVID 19 Pandemic is threatering the entire world and has raised serious questions on the  medical infrastructure world over and our preparedness to tackle its severity.


Under your able leadership, India, as a nation has been able to keep the pandemic under control, unlike the countries more developed than overs.
Considering the plight of the millions of poor, on account of the Lockdown, a slew of measures have been announced under the Prime Ministers Garib Kalyan Yojana with the onus of implementaion on the part of the banking personnel.
We, the Bank Officers, consider ourselves as the financial army, which safeguards and protects the economic interests of the nation and its citizens akin to our armed forces guarding the borders. We believe that collective action is the the most effective way to mitigate any issue and we assure our support in the country’s fight against the pandemic.

At the same time, we place a request to you take care of the interests of the Banker community  also into consideration as they are the frontline people to deal with lakhs of citizens in the days to come.
We have suggested to Reserve Bank of India vide our letter dated 28.03.2020 on various measures to be implemented for improving the efficiency in delivering essential banking services and vide our letter dated 29.03.2020 suggested measures to be implemented for ensuring the safety of the Bank Employees and Officers.
Both the above  communications have been posted to your twitter account also.  We are hopeful that the expectations of the bankers will also be taken care of suitably while they are delivering the services to the masses at this critical juncture.
We also take this opportunity to extend a contribution of Rupees Twenty Five Lakhs towards the PMCARES Fund to provide relief to the affected people and alleviating the troubles of our fellow brethren,
Yours sincerely
       
SUNIL KUMAR G V MANIMARAN
PRESIDENT GENERAL SECRETARY 

Tuesday, March 31, 2020

On Tuesday, March 31, 2020 by Tamilnewstv in    
திருச்சி மார்ச் 31


திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோய் தொடர்பாக
28நபர்கள் தனிபிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். என மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தகவல்

திருச்சி மாவட்ட சுகாதாரத்துறையினர் பரிசோதனை செய்ததில்
20நபர்களுக்கு சளி, இருமல், லேசான காய்ச்சல், இருந்ததால் உடனடியாக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். கொரோனா வைரஸ் நோய் தடுப்பு தனி பிரிவில் 28 நபர்கள் சிகிச்சைபெற்று வருகிறார்கள்.  இதில்
8நபர்கள் ஏற்கனவே சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில்
5நபர்களுக்கு இரத்த மாதிரி பரிசோதனையில்  கொரோனா வைரஸ் நோய் தாக்கம் இல்லை என வந்துள்ளது.     இன்று (31.03.2020)
20 நபர்கள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். 

இதில் 13 நபர்களுக்கு இரத்தம் மாதிரி பரிசோதனைக்கு எடுக்கப்பட்டுள்ளது.  சிகிச்சைப் பெற்று வரும் நபர்கள் தற்போது நல்ல நிலையில்  உள்ளனர்.
சாலைகளில்  அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக  இருசக்கர வாகனங்களில் 1நபர்  மட்டுமே மாஸ்க் அணிந்து பயணம் செய்ய வேண்டும்.
2நபர்கள் பயணம் செய்தால் அவர்கள் மீது குற்றவியல் வழக்கு தொடரப்படுவதுடன் வாகனம் பறிமுதல் செய்யப்படும்  என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் எச்சரித்துள்ளார்.
On Tuesday, March 31, 2020 by Tamilnewstv in    

திருச்சி

திருச்சி மாவட்டத்தில் நியாயவிலைக்கடைகள் மூலம் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும், முகாமில் வாழும் இலங்கை தமிழர் குடும்பங்களுக்கும்  விடுதலின்றி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1000 மற்றும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரை விலையின்றி  நிவாரண உதவித்தொகை  மற்றும் அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்படவுள்ளது. – மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தகவல்

 இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு வெளியிட்டுள்ள அறிக்கையில்
கொரோனா வைரஸ் நோய்த்தாக்கத்தை தடுக்கும் விதமாக, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளதன் காரணமாக பொதுமக்கள் பாதிப்படையாமல்  இருப்பதன் பொருட்டு கொரோனா வைரஸ் நிவாரணம் 2020பொது விநியோகத்திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மற்றும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரை விலையின்றி வழங்க தமிழக முதலமைச்சர்  ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் 23.03.2020அன்று நடைமுறையிலுள்ள 1224 நியாயவிலைக்கடைகளுக்கு உட்பட்ட  7,84,587 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும், முகாமில் வாழும் இலங்கை தமிழர் குடும்பங்களுக்கும் விடுதலின்றி பின்வரும் நடைமுறைகளை கடைப்பிடித்து கொரோனா வைரஸ் நிவாரண உதவித்தொகை வழங்கப்படும். திருச்சி மாவட்டத்தில் 23.03.2020 அன்று நடைமுறையிலுள்ள 1224 நியாயவிலைக்கடைகளுக்கு உட்பட்ட  784587 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும், (முகாமில் உள்ள இலங்கை தமிழர் குடும்பங்களுக்கும்) விடுதலின்றி பின்வரும் நடைமுறைகளை கடைப்பிடித்து கொரோனா வைரஸ் நிவாரண உதவித்தொகை  மற்றும் அத்தியாவசியப்
பொருள்கள் 02.04.2020 (வியாழக்கிழமை) முதல் வழங்கப்படும். அனைத்து நியாயவிலை கடை விற்பனையாளர்கள் மூலம் அவர்களது நியாய விலைக்கடைக்கு உட்பட்ட பகுதிகளில் தெரு வாரியாக 300குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு வீடாகச் சென்று டோக்கன் விநியோகம் செய்யப்படும். ஒவ்வொரு நாளும், ஒரு மணி நேரத்திற்கு 13கார்டுகள் வீதம் ஒரு நாளைக்கு 100குடும்ப அட்டைதாரர்களுக்கு
ரூ.1000நிவாரண தொகையும், அவர்களுக்குரிய மேற்குறிப்பிட்ட அத்தியாவசிய பொருட்களையும், அந்தந்த நியாயவிலைக்கடைகளில் சமூக விலகலை (1மீட்டர் இடைவெளி விட்டு) கடைபிடித்து விநியோகம் செய்யப்படும். மேலும் மார்ச் 2020 மாதத்திற்கு பொருட்கள் வாங்காத நபர்கள் ஏப்ரல் 2020-ல் தனியே நியாயவிலைக்கடைகளில் பெற்றுக்கொள்ளலாம்.
இப்பணி குறித்த புகார்கள் ஏதும் இருப்பின் அதனை சம்பந்தப்பட்ட உணவுப்பொருள் வழங்கல் தனி வட்டாட்சியர்கள், வட்ட வழங்கல் அலுவலர்களிடம் புகார் தெரிவிக்கலாம்.  மேலும், மாவட்ட அளவில் மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்களை                    (0431 -2411474, 9445045618)  தொடர்பு கொண்டு புகார் அளித்து நிவாரணம் தேடிக்கொள்ளலாம் எனவும் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தெரிவித்துள்ளார்கள்.
On Tuesday, March 31, 2020 by Tamilnewstv in    
Canara Bank Officers Association as a part of its social commitment to the society.


The social service wing CANPAL donated about 1500 face masks to the Police personnel of Tamilnadu, who are tirelessly protecting the citizens amid the Covid 19 outbreak.  The masks were handed over to IG of North Zone Shri NAGARAJAN IPS by Canara Bank Officers Association General Secretary Shri GV MANIMARAN.
On Tuesday, March 31, 2020 by Tamilnewstv in    
*AINBOF
Manimaran G V
General secretary*



The Governor
Reserve Bank of India
Central Office Building
18th Floor, Shahid Bhagat Singh Road
Mumbai- 400001


Respected Sir,

We are indeed thankful to our Honourable  Prime Minister for his recognition of the dedicated service being rendered by the Bankers all over the country despite risky situation prevalent in handling the day to day activities of the branches in the midst of corona threat.

We also understood our responsibility of successfully executing the ambitious programs announced under PRADHAN MANTRI GARIB KALYAN YOJANA viz.,
A. TO DISBURSE Rs.500 PER MONTH FOR THE NEXT THREE MONTHS TO 20 CRORES WOMEN BENEFICIARIES UNDER PMJDY.
B. TO GIVE Rs. 2000 TO 8 CRORES INDIAN FARMERS UNDER PM KISAN YOJANA.
C. TO GIVE AN EX GRATIA Rs. 1000 TO 3 CRORES POOR SENIOR CITIZENS, WIDOWS AND DISABLED.

In this regard we wish to furnish the prevalent situation and few suggestions to overcome  in disbursing the money at the needy hour without exposing the beneficiaries to the possible infection of the deadly corona virus.

1. Though the disbursements are to be carried out through all categories of branches, about 80% of the beneficiaries are to be serviced through Rural and semi urban branches only.
2. Disbursements are to be effected through the branches, ATMs and Business correspondents( BC)
3. It is estimated that about minimum of 1000 beneficiaries of various categories are to be serviced through every rural and semi urban branches.
4. These rural and semi urban branches are normally be manned by 3 to 4 employees and supervisors and the number is sizeably diminished during this epidemic period.
5. Majority of these branches are not provided by the services of the security guard too.
6. Every branch is servicing minimum of five villages and thus the beneficiaries are spread over these villages who are to be serviced by a single branch with minimal staff.
7. Majority of the branches are managed by the supervisory staff belong to other states and are having the disadvantage of non familiarity with the local language.
8. Every rural and semi urban branch is possessing maximum of three BCs could be used as agents to disburse the money.
9. All the villages might not have been provided with ATM facility.
10. Not more than 40% of the beneficiaries might have availed the Debit card facility to be used in ATMs.
11. More than 50% of the Debit card holders also may need assistance to use the debit card in the ATM and a few might have forgotten the PIN to be used in the ATM.
12. It is practically not possible by the bankers to communicate to all the beneficiaries effectively to come in staggered timings to avail the facility.
13. It is practically difficult to regulate the beneficiaries if they are coming in group and send them back empty handed, once they reached the branch.
14. Sir, your goodself would certainly appreciate the above mentioned genuine and practical difficulties in ensuring the safety of the beneficiaries from the possible infection while disbursing the money to the beneficiaries.

In this regard, we wish to suggest the following for your examination and consideration.

1. A committee may be formed in every village consists of a people representative, preferably the Sarpanch ( Village president), a representative from the Government either from the Agricultural Dept. or from the Revenue Dept. and a personnel from the police department.
2. This committee shall be entrusted with the responsibility of handing over the money ward wise to the beneficiaries in the village by personally visiting their households against the acknowledgment.
3. The committee may collect the money along with the list of beneficiaries from the respective branch in advance pertaining to the particular village on the joint responsibility.
4. The entire process shall be assisted by a representative from the branch.

Sir, the above system will certainly ensure the smooth distribution of money to the beneficiaries without crowding – a risk to be avoided at this juncture.
Thanking you sir.

Manimaran G V
General secretary
AINBOF

Copy to:

1. MD& CEO of Nationalised Banks
2. Department of Financial Services
3. General Secretaries of Affiliates of AINBOF
On Tuesday, March 31, 2020 by Tamilnewstv in    
*பொதுச் செயலாளர் மணிமாறன் அவர்களின் அறிக்கை*

இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் அவர்களுக்கும் நாட்டுடைமை வங்கிகளின் மேலாண்மை இயக்குனர் மற்றும்
 பொதுத்துறை வங்கிகளின்  மேலாண்மை இயக்குனர் மற்றும் முதன்மை செயல் அலுவலர்
நிதிச் சேவைகள் துறை,  நிதி அமைச்சகம், புதுதில்லி ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது



*பல பொருளாதார நடவடிக்கைகள், வங்கிகளின் வருவாயினையும், ஊழியர் பலன்களையும் பாதிக்கும் என்ற வாதம் வைக்கப்படலாம் என்ற சூழ்நிலையிலும், வங்கிப் பணியாளர்கள் மற்றும் அவர்தம் தொழிற்சங்கங்கள், கடினமான நிலையில், நாட்டுப்பணியில் முழு மூச்சுடன் ஈடுபட்டுள்ளனர்.*

ஏமாற்றமளிக்கும் இன்னலான சூழலிலும், வங்கிப்பணிகளை ஊக்குவிக்க, கீழ்க்கண்டவற்றைக் கனிவுடன் பரிசீலித்து செயலாக்கப்படுத்த ஆவன செய்யுமாறு பணிவுடன் வேண்டுகிறோம்:

*1. வங்கித் தொழிற்சங்கப் பிரதிநிதிகளை, கிராம, தாலுகா, மாவட்டம், மாநில அளவிலான கமிட்டிகளில் நியமனம் செய்ய வேண்டுகிறோம்.*  இது அந்தந்த மட்டங்களில் பிரச்னைகளை உடனடியாகத் தீர்க்கவும், வங்கிப் பணியாளர்களின் தன்னம்பிக்கையையும் வளர்த்து, மக்களுக்கும் நாட்டிற்கும் சிறப்பான சேவைகளை வழங்கத் தகுந்த சூழலை உருவாக்கும்.

2. CBS எனப்படும் ஒருங்கிணைந்த கணினி சேவையால், *5 கிமீ  வட்டாரத்தில், ஒரு வங்கிக்கு ஒரு கிளை திறந்திருக்கும் என்ற அடிப்படையில், பெருநகர, நகர், புறநகர் பகுதிகளில், அனைத்து வங்கிகளிலும் செயல்படுத்த வேண்டுகிறோம்.*

*3. கிராமப்புற கிளைகளில், ஒரு நாள் விட்டு ஒரு நாள் இயக்க வேண்டுகிறோம்.*

4. மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் பணிக்குச் செல்ல, *சில மாநில அரசுகள் தனிப்பட்ட பேருந்துகளை இயக்குகின்றன.  இந்தச் சேவைகளை வங்கியாளர்களும் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டுகிறோம்.*

5. *வங்கிப்பணியாளர்களை பெருநகரங்களிலும், கிராமங்களுக்கும் சென்று வர உதவியாக, வங்கிகளே தக்க கூட்டுப் பயண வாகன ஏற்பாடுகளைச் செய்து தர தக்க அனுமதியும் பாதுகாப்பும் தர வேண்டுகிறோம்.*

*6. கர்ப்பிணிப்பெண்கள், 2 வயதிற்குக் குறைவான  வயதுடைய குழந்தைகளுடைய பெண்கள், 55 வயதிற்கு மேற்பட்ட பணியாளர்கள், இதய நோயாளிகள், ஆஸ்துமா, நீரிழிவு நோயாளிகள், மாற்றுத் திறனாளிகள், நாள்பட்ட நோயாளிகள், ஆகியோருக்கு, விசேஷ விடுப்பு அளிக்கப்பட்டு, பணிக்கு வருவதிலிருந்து விலக்களிக்கப்பட வேண்டுகிறோம்.*

7. அனைத்து வங்கிக்கிளைகளும் *அதிகபட்ச சுகாதார நடவடிக்கைகளையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.  மேலும் அடுத்த மாத முதல்வார நெரிசலை சமாளிக்கத் தேவையான பாதுகாப்பு (தேவையெனில் தனியார் நிறுவனங்கள் மூலம்) ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுகிறோம்.*

8. எதிர்பாராத செலவுகளை சமாளிக்க, அனைத்து வங்கிகளும் தங்களது *பணியாளர்களுக்கு, ஒரு மாத ஊதியத்தினை வட்டியில்லா முன்பணமாக வழங்க வேண்டுகிறோம்.*

*9. பணியாற்றிய 6 நாட்களுக்கு ஒரு நாள் வீதம், அனைத்து வங்கிப் பணியாளர்களுக்கும் கவுரவ ஊதியம்  வழங்கப்பட வேண்டும்.*

10. மற்ற இன்றியமையாப்பணியாளர்களுக்கு அளிப்பது போன்று, *வங்கிப் பணியாளர்களுக்கும், ரூபாய் 50 லட்சம், உடல்நலக் காப்பீட்டுத் திட்டம் வழங்கப்படவேண்டுகிறோம்.  இதற்கான பிரீமியம் தொகையினை, அந்தந்த வங்கிகளே செலுத்த வேண்டுகிறோம்.*

11.  கூடுதலாக ஏற்பட்டுள்ள செலவுகளைச் சமாளிக்க, *வங்கிப்பணியாளர்கள் பெற்றுள்ள கடன் தவணைகள் மூன்று மாதங்களுக்குப் பிடிக்கப்படாமல் தள்ளி வைக்கப்பட வேண்டும்.*

12. ஊழல் போன்ற குற்றச்சாட்டுக்கள் இல்லாமல், தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள வங்கியாளர்கள், மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும்.

13. தன்னார்வமாக முன்வரும் ஓய்வு பெற்ற பணியாளர்களை, அருகிலுள்ள கிளைகளில், தக்க கவுரவ ஊதியத்துடன், பணியாற்ற அனுமதிக்க வேண்டும்.

14. இடைவிடாமல் 24 மணி நேரமும் பணியாற்றும் நிலையில் உள்ள முக்கிய துறைகளில் பணியாற்றுவோருக்கு, தக்க பாதுகாப்புடன், *4 மணி நேர ஷிப்ட்களில் பணியாற்ற வகைசெய்ய வேண்டுகிறோம்.*

*15. ஒவ்வொரு வங்கியும் பணியாளர் குறை தீர் மய்யம் ஒன்றை அமைத்து பணியாளர் பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காண வழிவகை செய்ய வேண்டுகிறோம்.*

*மேற்கண்ட உடனடி நடவடிக்கைகள்,
 வங்கியாளர்கள்,  பணமதிப்பிழப்பீடு, ஜன்தன் யோஜனா, முத்ரா திட்டம், மற்ற வறுமை ஒழிப்பு திட்டங்கள், ஆகியவற்றில் கடுமையாக பணியாற்றியது போல, முழு வேகத்தில் பணியில் ஈடுபட வழி வகுக்கும் என்பது திண்ணம்.*


*G V  மணிமாறன்*
*பொதுச்செயலாளர்*
*AINBOF* என தெரிவித்துள்ளார்
On Tuesday, March 31, 2020 by Tamilnewstv in    
திருச்சி மார்ச் 31

வீட்டு வாடகை கேட்டு நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவு காரணமாக கூலித் தொழிலாளர்கள், வடமாநில தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். இதனால் அவர்களது இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு மிகவும் சிரமப்படுகின்றனர். அதேபோல் கல்லூரி மாணவர்கள் பலர் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி பயின்று வருகின்றனர்.ஊரடங்கு உத்தரவு காரணமாக பேருந்து, ரயில் போக்குவரத்து இல்லாததால் இவர்களும் ஊர் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கூலித்தொழிலாளர்கள், வடமாநில தொழிலாளர்கள், கல்லூரி மாணவர்கள் ஆகியோர் பணமின்றி கஷ்டப்படும் சூழலில், வீட்டு வாடகை கொடுக்க முடியாத நிலை உருவாகி உள்ளது.தற்போது, வீட்டு உரிமையாளர்கள் மார்ச் மாதத்திற்கான வாடகையைக் கேட்டு நெருக்கடி கொடுக்கலாம் என்ற புகார் பரவலாக எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து திருச்சி சரக காவல்துறை, டிஐஜி பாலகிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "திருச்சி, புதுகை, கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் வாடகை வீடுகளில் தங்கியுள்ள மாணவர்கள், தமிழ்நாடு, வெளிமாநில தொழிலாளர்கள் என யாரிடமும் வீட்டினை காலி செய்யுமாறு உரிமையாளர்கள் வலியுறுத்தக் கூடாது. ஒரு மாத காலத்துக்கு வாடகையும் கேட்கக்கூடாது" என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், இதனை மீறி வீட்டு வாடகை கேட்டு நெருக்கடி கொடுத்தால் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்படலாம் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.