Saturday, May 16, 2020

On Saturday, May 16, 2020 by Tamilnewstv in    
திருச்சி மே 16

திருச்சியில்  நிருபர் வெட்டிக்கொலை - கொலையாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு 
                 

திருச்சி தாரநல்லூர், பாரதிநகர் பகுதியைச் சேர்ந்த நடேசன் இவரது மகன் மணி (எ) மணிகண்டன் (38)
இவருக்கு 
பழனியம்மாள் என்ற மனைவியும் ஷிவானி, சிவசாமி  மற்றும் சிவஹரி என்ற மூன்று பிள்ளைகளை கொண்டு இவர் "போலீஸ் பார்வை" என்ற மாத இதழில் நிருபராக பணியாற்றி வந்தார்.  அதே பகுதியில் பால்ராஜ் என்பவர் சேவியர் அரிசி ஆலையில் நடத்தி வருகிறார். அங்கு முறைகேடாக  ரேஷன் கடை அரிசியை வாங்கி அதை விற்று வருவதாக அறிந்த அவர் இது குறித்து செய்தியை எடுத்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த அரிசி மில் உரிமையாளர் பால்ராஜிக்கும் மணிக்கு தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று மாலை சுமார் 5.30மணி அளவில் மணி விட்டிற்க்கு வந்த காம் தூக்கும்  தொழிலாளர்களான அலங்காநதபுரத்தை  சேர்ந்த ஜான், அஜித்குமார் மற்றும் பாலு ஆகியோர்  வீட்டிலிருந்த மணியை வாசலுக்கு இழுத்து வந்து அவரின் மனைவி பிள்ளைகள் கண் எதிரே சாமரியாக   வெட்டினர்.இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவரை உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே உயிர் இழந்தார்.
இது குறித்து தகவல் திருச்சி காந்தி மார்க்கெட் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்  வழக்கு பதிவு செய்து தலைமறைவான ஜான், அஜித்குமார், பாலு ஆகியோரை தேடி வருகின்றனர்
On Saturday, May 16, 2020 by Tamilnewstv in    
மணப்பாறையில்
மனவேதனையால் மாற்றுத் திறனாளி ரெயில்வே ஊழியர் தூக்கிட்டு தற்கொலை.


விருதுநகர் மாவட்டம், கே.புதூர் அருகே உள்ள தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் காசிநாதன் வயது 36. இவர் திருச்சி மாவட்டம், மணப்பாறையில் ரெயில்வே ஊழியராக (கிளர்க்) வேலை பார்த்து வருவதோடு ரெயில்வே குடியிருப்பில் தனியாக வசித்து வருகிறார். மாற்றுத் திறனாளியான காசிநாதனுக்கு அவ்வபோது மதுரைக்கும் பணிக்கு அனுப்பதாக கூறப்படுகின்றது.


இந்நிலையில் தற்போது பொது போக்குவரத்து முடக்கத்தால் மதுரைக்கு செல்ல முடியாமல் தவித்த காசிநாதன் இன்று இரவு தான் வசித்த வீட்டில் தூக்கில் தொங்கி அந்த ஒயர் அறுந்த நிலையில் கீழே விழுந்து பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதையடுத்து சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அந்த வீட்டில் ஒரு பேப்பரில் இறப்பிற்கான காரணம் எழுதப்பட்டிருந்தது. அதில் பொது போக்குவரத்தே இல்லாத சூழலில் மதுரைக்கு செல்லச் சொல்கிறார்கள், 120 கிலோ மீட்டர் மதுரைக்கு எப்படி செல்ல முடியும் என்ற வேதனையை கடிதத்தில் எழுதி இருந்தார்.
மாற்றுத்திறனாளியான காசிநாதன் ரெயில்வே ஊழியராக உள்ள நிலையிலும் கூட போக்குவரத்து இல்லாத சூழலில் அடுத்த இடத்திற்கு பணிக்கு செல்ல அறிவுறுத்தியதால் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
On Saturday, May 16, 2020 by Tamilnewstv in    
*வையம்பட்டி வட்டாரம் மண் மாதிரிகள் சேகரிக்கும் பணி நடைபெறுகிறது*.

வையம்பட்டி வட்டாரத்தில் தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம் சார்பில் மண் மாதிரி சேகரிக்கும் பணி நடைபெற்று வருகின்றது.விவசாய நிலங்களில் இருந்து மண் மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொண்டு அதன் அடிப்படையிலேயே உரம் மற்றும் இடுப்பொருள்கள் பரிந்துரைக்கப்படுகிறது .

மேலும் அந்த மண்மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு மண்வள அட்டைகள் சம்மந்தப்பட்ட விவசாயிகளுக்கு சாகுபடி பருவத்திற்க்கு முன்னதாக வழங்கப்படும் . அதற்காக நம் வையம்பட்டி வட்டாரத்தில் முகவனூர் தெற்கு , பழையக்கோட்டை , குமாரவாடி , அனியாபூர் , நடுப்பட்டி ஆகிய கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு உதவி வேளாண்மை அலுவலர் மூலம் மாதிரிகள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகின்றது .
                   உரச்செலவைக் குறைக்கவும் மகசூலை அதிகரிக்கவும் மற்றும் களர் , உவர் நிலங்களை கண்டறிந்து அதனை நிவர்த்தி செய்து மகசூல் அதிகரிக்கவும் , மண் தன்மைக்கேற்ப பயிர் செய்து விளைச்சலை பெருக்கவும் மண்வள அட்டையில் குறிப்பிட்டுள்ள உர அளவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் . எனவே விவசாயிகள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் மண்வளத்தை பரிசோதித்து அதன் அடிப்படையில் உரமிட்டு பயன்பெறும்படி வையம்பட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பொறுப்பு திருமதி பூ.வசந்தா அவர்கள் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளார் .

12.05.2020 அன்று வையம்பட்டி வட்டாரத்திற்கு திருச்சி மாவட்ட துணை வேளாண்மை இயக்குநர் (மத்திய திட்டம்) திரு.இளங்கோவன் அவர்கள் ஆய்வு பணிக்கு வருகை தந்த போது தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் - பயறு மற்றும் சிறுதானிய பயிர்கள், விநியோகம் திட்டத்தில் லெட்சம்பட்டி கிராமத்தில் அமைத்துள்ள  உளுந்து விதைப்பண்ணை, வம்பன்8,மற்றும் தெற்கு அம்மாபட்டியில் கம்பு, தனசக்தி விதைப்பண்ணையை ஆய்வு பணி செய்தார்கள்,ஆய்வு பணியின் போது தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம், மாவட்ட ஆலோசகர் திரு.சந்தான கிருஷ்ணன், வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) திருமதி. பூ.வசந்தா, வேளாண்மை அலுவலர் மேனகா,உதவி விதை அலுவலர் நா.செந்தில்குமார், உதவி வேளாண்மை அலுவலர்கள் எஸ்.சிவக்குமார், இராமசுப்பிரமணியன்,அட்மா அலுவலர் கலைச்செல்வன், பிரியங்கா ஆகியோர் உடன் இருந்தனர்.
On Saturday, May 16, 2020 by Tamilnewstv in    
மணப்பாறையில்
தூய்மைப் பணியாளர்களை ஊக்குவித்து பொருட்கள் வழங்கிய எம்.பி.ஜோதிமணி.
தூய்மைப் பணியாளர்களுடன் அமர்ந்து சிறிது நேரம் பேசினார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பேருந்து நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் சமூக  நிற்க வைக்கப்பட்டு பின்னர் பொருட்களை கரூர் எம்.பி.ஜோதிமணி வழங்கினார். முன்னதாக தூய்மைப் பணியாளர்களின் பணி குறித்து பெருமையடைந்த ஜோதிமணி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து ஊக்குவித்தார்.


மேலும் பெண் தூய்மைப் பணியாளர்களுடன் அமர்ந்து அவர்களின் பணிகால அனுபவங்கள் குறித்தும் கேட்டறிந்து பேசினார்.
On Saturday, May 16, 2020 by Tamilnewstv in    
திருச்சி மே 16

 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார்



கொரோனா தொற்று பாதிப்பை அடுத்து தமிழகத்தில் பல்வேறு கட்சியினரும் தனியார் அமைப்பினரும் உணவு மற்றும் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகின்றனர். தமிழக அரசு சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகத்தில் காலை, மதியம் மற்றும் இரவு என மூன்று வேளைகளிலும் இலவச உணவு வழங்கி வருகின்றனர். 



இதன் ஒரு பகுதியாக திருச்சியில்  வாழ்வாதாரத்தை இழந்து இருக்கும்  ஸ்ரீரங்கம் பகுதியை சார்ந்த பொதுமக்களுக்கு அப்பகுதியில் உள்ள அம்மா மண்டப சாலையில், மற்றும் 
ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை அருகில் உள்ள அம்மா உணவகங்களில் மூன்று வேளைகளும் இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த உணவுகளில் இன்று தொகுதி சட்டமன்ற உறுப்பினரும்,  
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான வளர்மதி ஆய்வு மேற்கொண்டார்.

அம்மா உணவகத்தில்  உள்ள சமையல் கூடம் மற்றும் பொதுமக்கள் அருந்தும் குடிநீர் ஆகியவை ஆய்வு செய்து அங்கு பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுகளையும் அவர் சாப்பிட்டார். மேலும் பொதுமக்களிடம் அம்மா உணவகத்தில் வழங்கப்படும் உணவின் தரத்தை குறித்தும் கேட்டறிந்தார். மேலும் இவற்றில் பணிபுரியும் தொழிலாளர்களிடம் சிறந்த முறையில் உரிய நேரத்தில்  தரமான உணவுகளை வழங்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.
 அமைச்சர் ஆய்வு செய்த போது‌ ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் டைமண்டு திருப்பதி பணயபுரம் கர்ணன் அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.


On Saturday, May 16, 2020 by Tamilnewstv in    
மணப்பாறை அருகே
குளத்தில் நீரிழ் மூழ்கி 9 வயது இரட்டை சகோதரிகள் உயிரிழப்பு.
கிராமமே சோகத்தில் மூழ்கியது.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வேம்பனூர் அருகே உள்ள சங்கம்பட்டியைச் சேர்ந்தவர் வீரமலை. இவரது மனைவி கண்ணம்மாள். இந்த தம்பதியினருக்கு 4 மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர். கடைசியாக உள்ள ராமுபிரியா, லெட்சுமி பிரியா என்ற 9 வயது நிரம்பிய இரண்டு மகள்களும் இரட்டைப் பிறவிகள். வெள்ளபிச்சம்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் 4 ம் வகுப்பு படித்து வந்த இரட்டை சகோதரிகள்  இன்று அதே பகுதியில் உள்ள கும்மடிக்குளத்தில் துணி துவைத்து விட்டு குளிக்கச் சென்ற நிலையில் இரண்டு சிறுமிகளும் நீரில் மூழ்கினர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் இரண்டு சிறுமிகளையும் மீட்டு மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிறுமிகள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த வளநாடு போலீசார் சிறுமிகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரட்டை சகோதரிகள் உயிரிழந்த சம்பவம் அந்த கிராம மக்கள் கடும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
On Saturday, May 16, 2020 by Tamilnewstv in    
திருச்சி மே 15

திருச்சியில் 
அரிசி மளிகை மற்றும் காய்கறிகள் பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்குவதற்கு முன்பு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களை வரிசையில் அமரச் செய்து சமூக இடைவெளியை பின்பற்ற வலியுறுத்தி அவர்களுக்கு ஆலோசனை வழங்கிய  பின்னர் பொருட்களை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பொதுமக்களுக்கு வழங்கினார். 

கொரோனா  தாக்குதல் காரணமாக 
தமிழகத்திலும் 
ஊரடங்கு மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏழை - எளிய பொதுமக்கள்  உணவுக்கு  கஷ்டப்பட்ட வருகின்றனர். 

தமிழக அரசு சார்பிலும், பல்வேறு அரசியல் கட்சியினரும், தன்னார்வலர்களும்  நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். இந்த வகையில் திருச்சியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கிழக்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 45 நாட்களுக்கு மேலாக வார்டு வாரியாக 
நிவாரண பொருட்களை தொடர்ந்து வழங்கி வருகிறார்.
இன்று மலைக்கேட்டை  பகுதிக்குட்பட்ட 13வார்டு பொதுமக்களுக்கு அப்பகுதியில் 
உள்ள லூர்துசாமி பிள்ளை பூங்காவில் 
அரிசி, மளிகை மற்றும் காய்கறிகள் அடங்கிய 
தொகுப்பை 250 குடும்பத்தினருக்கு  வழங்கினார்.  இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள்  சமூக இடைவெளியை கருத்தில் கொண்டு நாற்காலி போட்டு அமர வைக்கப்பட்டனர்.
மேலும் முக கவசம் அணிந்து பொருட்களைப் வாங்கி சென்றனர்.
முன்னதாக அங்கு வந்த அமைச்சர் பொதுமக்களிடம் தனி மனித இடைவெளி மற்றும் முக கவசம் குறித்து கூறினார்.


Friday, May 15, 2020

On Friday, May 15, 2020 by Tamilnewstv in    
முசிறி அருகே  குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி

              

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கிராமம் அமைந்துள்ளது . இந்த கிராமத்தில் சுமார் 3000 குடும்பத்தினர் பல்வேறு ஊர்களில் குறி சொல்லி ஜோதிடம் சொல்லும் பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

                
 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் குறி சொல்லி வாழ்க்கையை நடத்தும் காட்டு நாயக்கர் இன மக்கள் வெளியில் எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் இவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதித்தது .உணவுக்கு வழியில்லாமல் குழந்தைகளுடன் இம்மக்கள் வாடினர்.
இது குறித்து அறிந்த தமிழக  முன்னாள் முதன்மை செயலாளர் ராம் மோகன் ராவ் அவர்களால் நடத்தப்படும் ஆர் எம் ஆர் பாசறை மூலமாக குடுகுடுப்பை அடித்து குறி சொல்லும் இந்த மக்களுக்கு 5 கிலோ அரிசி நிவாரண பொருளாக வழங்கினார் .நிவாரண பொருட்களை பாசறை நிர்வாகிகள் அரங்கூர் கிராமத்திற்கு வந்து நேரில் பாதிக்கப்பட்ட மக்களிடம் வழங்கினர். வாழ்வாதாரத்திற்கு சிரமப்பட்டு வந்த தங்களுக்கு நிவாரணப் பொருள் வழங்கியதற்கு குறிசொல்லும் மக்கள் நன்றி தெரிவித்து வாழ்த்தினர் .
On Friday, May 15, 2020 by Tamilnewstv in ,    
ரூ.20 லட்சம் கோடி உதவியில் 85 கோடி விவசாயிகளுக்கு எந்த உதவியும் (பலனும்) கிடையாது விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு அறிவிப்பு
                

     இந்திய மக்கள்தொகையில் சுமார் 130 கோடியில் விவசாயிகள் 85 கோடி பேர் உள்ளனர். இவர்கள் கொரோனா ஊராடங்கள் பாதிக்கப்பட்டது கொஞ்சம், நஞ்சமில்ல, வேலை இல்லை, கூலி, சம்பளம் கிடைக்க இல்லை என்பது நிதர்சன உண்மை. அவர்களுக்கு மத்திய மாநில அரசுகள் உதவிட வேண்டும் என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது தான்.
     ஆனால், கடன் வாங்கி சாகுபடி செய்த வாழைவிவசாயிகள் வாழைதார்களை வெளியே கொண்டுசென்று விற்பனை செய்ய முடியவில்லை. ஏக்கருக்கு 1 லட்சம் முதல் 1.5 இலட்சம் வரை கடன் வாங்கி செலவு செய்து உள்ளார்கள். அத்துடன் சூறாவளி காற்றினால் வாழை மரம் எல்லாம் முறிந்து விழுந்துவிட்டது.
     வெற்றிலை பயிர் விவசாயம் செய்த விவசாயிகள் ஏக்கருக்கு ரூ. 2 லட்சம் முதல் 3 லட்சம் வரை செலவு செய்து வெற்றிலை பறித்து விற்பனை செய்ய முடியாமல் பெரும் நஷ்டத்தில் உள்ளார்கள். இதனால் வெற்றிலை எல்லாம் வயலிலேயே காய்ந்துவிட்டது.
      பூக்கள் வாங்க ஆட்கள் இல்லாததாலும், விற்பனை கடைகள் இல்லாததாலும், பூக்களை செடியில் பறிக்க ஆட்கள் இல்லாததாலும் பூக்கள் செடியிலேயே காய்ந்து உதிர்ந்து கொட்டிவிட்டது.
      தர்பூசணி, முலாம், திராட்சை பழங்களை கொண்டு சென்று விற்க முடியாததால் வயலிலேயே அழுகி அழிந்துவிட்டது.
      எலுமிச்சை பழம் விற்க வெளியே கொண்டு செல்ல முடியாமல் மரத்திலேயே பழுத்து கொட்டி அழுவிவிட்டது.
      நெல் சாகுபடி செய்த விவசாயிகளின் நிலையோ மிக மிக பரிதாபம், வெளி சந்தையில் நெல்லை விற்க முடியாததால், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு சென்று நெல்லை விற்றத்தில் 40 கிலோ நெல் மூட்டை ஒன்றிக்கு ரூ.60 முதல் 80 வரை கமிஷன் எடுத்ததால் தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள் நெல்லுக்கு கொடுத்த கமிஷன்(லஞ்சம்) தொகை சுமார் ரூ.281 கோடி, விவசாயிகள் வாழ்வதா..? சாவதா..?  DPC - நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் கொட்டி வைத்த இலட்ச கணக்கான நெல் மூட்டைகள் மழை நீரில் நனைத்து அழிந்துவிட்டது.
     முதலீடு செய்த பணம்  எல்லாம் கைக்கு கிடைக்காமல் அழிந்துவிட்டது.
     இதனால் மத்திய அரசு ரூ.20 இலட்சம் கோடிகள் உதவித்தொகையில் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.20,000/- கொடுக்கும் என்று எதிர்பாத்தோம், விவசாயிகள் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்வார்கள் என்று எதிர்பார்த்து ஏமாந்துவிட்டோம்.
     கொரோனா பாதித்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் விவசாயிகள் 63 லட்சம் பேர் வங்கிகளுக்கு சென்று ரூ.86,600 கோடிகள் கடன் பெற்றார்கள் என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார்களே நியாயமா..?
     ஜூஸ் கரும்பு உற்பத்தி செய்த விவசாயிகள் ஜூஸ் கடைகள் இல்லாததால் விற்பனை செய்ய முடியாமல் கரும்பெல்லாம் வயலிலேயே காய்ந்துவிட்டது. விசேஷங்கள் இல்லாததால் வாழை இலைகள் கிழிந்தும், காய்ந்ததும் விட்டது. வெள்ளரிக்காய் பறித்து விற்க முடியாமல் அழிந்து வீணாகி விட்டது.
     தொழில்சாலைகள் இயங்காததால் மரவள்ளி(குச்சிவள்ளி) கிழங்குகள் வயளிலேயே அழிந்துவிட்டது.
     மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் அவர்களின் அறிவிப்பு விவசாயிகளுக்கு பயன் இல்லாததால், மாண்புமிகு. உச்ச நீதிமன்றத்திலும், மாண்புமிகு உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்துள்ளத்தில் நஷ்டஈடும், கொரோனா தொற்றில் அழிவதைவிட, அதிகமாக விவசாயிகள் கடனில் அழிந்துவிடுவார்கள்,போராட அனுமதி கொடுங்கள் என்று நீதி மன்றத்தில் நீதி கேட்க உள்ளோம் என்று இவ்வாறு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர்  அய்யாக்கண்ணு அறிவித்துள்ளார்.