Thursday, May 21, 2020

On Thursday, May 21, 2020 by Tamilnewstv in    
 திருச்சி வருவாய் ஆய்வாளருக்கு மாவட்ட ஆட்சியர் அஞ்சலி

 திருச்சிராப்பள்ளி மாவட்டம் தொட்டியம் பிர்காவில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த  சேகர் என்பவர் 20.5.2020 அன்று வாகன விபத்தில் படுகாயமடைந்தார்.

 திருச்சி அரசு மருத்துவமனை கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் 21.5.2020  அதிகாலை இறந்துவிட்டர் .

 பிரேத பரிசோதனை முடிந்த பிறகு அவரது உடல் அவரின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறிய பிறகு ஈமச்சடங்கு நிதியாக 25 ஆயிரம் ரூபாய் வழங்கினார்.
On Thursday, May 21, 2020 by Tamilnewstv in    
திருச்சி 

திருச்சியில் ரம்ஜானை முன்னிட்டு முஸ்லிம் சமுதாய மக்களுக்கு தொடர்ச்சியாக நிவாரண பொருட்களை அமைச்சர் நிவாரண பொருட்கள் வழங்கினார்.

 கொரோனா வைரஸ் தாக்குதல் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதனால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக பலர் வருவாய் இழந்து உணவன்றி ஏழை - எளியவர்கள், ஆதரவற்றோர் தவித்து வருகின்றனர்.


 அவர்களுக்கு தன்னார்வ அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் மற்றும் பலர் அரிசி, காய்கறி ஆகியவற்றை உதவி செய்து வருகின்றனர். 


 இந்த வகையில் தொடர்ச்சியாக ஊரடங்கு உத்தரவு ஆரம்பித்ததிலிருந்து மக்கள் சேவையில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நிவாரணப் பொருட்களை தொடர்ச்சியாக வழங்கி வருகிறார்.

 அதன் ஒரு பகுதியாக இன்று சையது முத்தரசா பள்ளியில் நிவாரண பொருட்களை முஸ்லிம் சமுதாய மக்களுக்கு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் இன்று அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் அதிமுக பிரமுகர்கள் ஜவஹர்லால் நேரு, வெல்லமண்டி சண்முகம், பகுதி செயலாளர் அன்பழகன், சந்து கடை சந்துரு,   பலர் கலந்து கொண்டனர்.

Wednesday, May 20, 2020

On Wednesday, May 20, 2020 by Tamilnewstv in ,    
மணப்பாறை அருகே
அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை.
உயரதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
             

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள தெலுங்கபட்டியைச் சேர்ந்தவர் பிச்சாண்டவர். விவசாயி. இவருக்கும் திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மரவனூரைச் சேர்ந்த தாமரைச் செல்விக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கும் முன் திருமணம் நடைபெற்றது.


             
பின்னர் நிறைமாத கர்ப்பிணியான தாமரைச் செல்விக்கு கடந்த மார்ச் மாதம் 9 ம் தேதி நள்ளிரவு மணப்பாறை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. அதன் பின்னர் 10 ம் தேதி காலை பிறந்த குழந்தையின் தொடையில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இருப்பினும் குழந்தை மற்றும் தாய் ஆகிய இருவரின் உடல்நிலையும் சரியில்லாமல் இருந்ததால் மருத்துவமனையிலேயே 15 நாட்களாக தங்கி சிகிச்சை பெற்ற பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
ஆனாலும் குழந்தைக்கு அவ்வபோது காய்ச்சல் ஏற்பட்டுக் கொண்டே இருந்துள்ளது. இதுதொடர்பாக மரவனூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரண்டு முறை சிகிச்சைக்கு அழைத்துச் சென்ற போதும் கொரோனா காலகட்டமாக இருப்பதால் சிகிச்சை அளிக்க மறுத்து மீண்டும் வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டதாக கூறப்படுகின்றது. இதுமட்டுமின்றி 45 நாட்களுக்கு பின்னர் அந்த குழந்தைக்கே இரண்டாம் கட்ட தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் குழந்தை இன்று காலை முதல் காய்ச்சல் ஏற்பட்டு தொடர்ந்து கதறி அழவே வீட்டில் இருந்தவர்கள் மிகுந்த மனவேதனைக்கு ஆளாகி தொடையில் முதலில் தடுப்பூசி போட்ட இடத்தை பார்த்த போது அதில் லேசாக ஊசி ஒன்று தெரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்து லேசாக அமுக்கி பார்த்த போது பாதி ஒடிந்த நிலையில் இருந்த ஊசி முழுவதுமாக வெளியே வந்தது.
இதனால் மிகுந்த மனவேதனைக்கு ஆளான தாமரைச் செல்வி குடும்பத்தினர் மீண்டும் குழந்தையை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ அதிகாரியிடம் நடந்த சம்பவத்தை கூறி தொடையில் உடைந்த நிலையில் இருந்து எடுக்கப்பட்ட ஊசியை காண்பித்தனர்.
மேலும் முதலில் தடுப்பூசி போட்டு ஊசி உடைந்து தொடையிலேயே விட்டுச் சென்ற செவிலியர் மீது நடவடிக்கை எடுத்திடக் கோரி மருத்துவ அதிகாரியிடம் புகாரும் அளித்தனர்.
பிறந்த பச்சிளம் குழந்தைக்கு இரண்டாவது நாளே போடப்பட்ட ஊசி உடைந்த நிலையில் சுமார் 70 நாட்கள் தொடையிலேயே இருந்த சம்பவம் மணப்பாறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் சம்மந்தப்பட்ட செவிலியரை உடனடியாக பணி நீக்கம் செய்திட வேண்டும் என்ற கோரிக்கையும் மேலோங்கி உள்ளது.

பேட்டி :
1. தாமரைச்செல்வி, குழந்தையின் தாய்.
2. அமிர்தம், குழந்தையின் அம்மாச்சி.
On Wednesday, May 20, 2020 by Tamilnewstv in ,    
மணப்பாறையில் திமுக வின் சார்பில் மாற்றுத்திறனாளிக்கு நிவாரண உதவிகள்
                 

   கொரோனா ஊரடங்கால் வருமானமின்றி வாழ்வாதாரம் இழந்துள்ள தொழிலாளர்களுக்கு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு கமூக நல அமைப்பினர்கள் நிவாரண உதவிகள் வழங்கி வருகின்றனர். இதேபோல் திருச்சி மாவட்டம், மணப்பாறை ஒன்றிய திமுக வின் சார்பில் சீகம்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு திருச்சி தெற்கு மாவட்ட  திமுக செயலாளர் அன்பில்.மகேஸ்பொய்யாமொழி அரிசி, காய்கறிகள் தொகுப்பு உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். இதில் துப்புரவு பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு நிவாரண பொருட்களை பெற்றுச் சென்றனர்.
On Wednesday, May 20, 2020 by Tamilnewstv in    
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை
            

   கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள சூழ்நிலையில் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து வருகின்றனர். இந்நிலையில் டிஎன் ஆல் டிரைவர்ஸ் அசோசியேசன் சார்பில் திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதிகளைச் சேர்ந்த ஓட்டுனர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்களுக்கான அமல் படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் ஓட்டுனர்களின் வாழ்வாதாரம்  முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் ஓடடுனர்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் மற்றும் நிதியுதவி கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு கூறி வட்டாட்சியர் அலுவலகத்தி;ற்கு சென்று துணை வட்டாட்சியரிடம் மனு அளித்தனர். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்னாக போக்குவரத்;தில் பணியாற்றும் தங்களுடைய பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு அரசு உதவவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
On Wednesday, May 20, 2020 by Tamilnewstv in , ,    
திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் தங்கி பணிபுரிந்து வந்த பிகார் மாநிலத்தை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சுமார் 1425 பேரை சிறப்பு ரயில் மூலம் திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது.

திருச்சி மாவட்டத்தில் பணிபுரிந்த 1009 தொழிலாளர்கள், பெரம்பலூர் மாவட்டத்தில் பணியாற்றிய 416 தொழிலாளர்கள் என 1425 தொழிலாளர்கள் திருச்சிராப்பள்ளி ரயில்வே ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து பீகார் மாநிலத்தின் மோதிகாரி ரயில்வே நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

Tuesday, May 19, 2020

On Tuesday, May 19, 2020 by Tamilnewstv in    
மணப்பாறை அருகே
மழைநீர் வயல்களில் தேங்கியதால் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் அழுகும் நிலையில் உள்ளதால் விவசாயிகள் வேதனை.

திருச்சி மாவட்டம், மணப்பாறை, வையம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு கனமழை பெய்தது. ஒரு சில இடங்களில் பெய்த மழையால் வயல்களிலும் மழைநீர் புகுந்தது.
இதனால் வையம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்கதிர்கள் முற்றிலுமாக சாய்ந்து விட்டது.
இதனால் வயல்களில் தேங்கியுள்ள மழைநீரில் நெற்கதிர்கள் மூழ்கி இருப்பதால் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெல்மணிகள் மீண்டும் முளைக்கத் தொடங்கி இருக்கின்றது. இதனால் பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு கடும் வறட்சியிலும் விவசாயம் செய்து வைத்திருந்த விவசாயிகள் கடும் வேதனைக்கு ஆளாகி உள்ளனர். அதிகாரிகள் பார்வையிட்டு விவசாயிகள் நலன்காத்திட உரிய உதவி செய்திட வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

On Tuesday, May 19, 2020 by Tamilnewstv in    
*திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு 23 மாவட்டங்களை சேர்ந்த 558 நபர்கள் டெல்லியில் இருந்து 
சிறப்பு ரயில் மூலம் திருச்சிராப்பள்ளி ஜங்சன் ரயில்வே நிலையத்திற்கு 
வருகைபுரிந்தனர். என மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தகவல்.* 

டெல்லி தப்லீக் மாநாட்டிற்கு சென்றவர்கள் 292 நபர்கலும் இதர 266 நபர்களும் ஆக 
மொத்தம் 558 நபர்கள் டெல்லியில் இருந்து சிறப்பு ரயில் மூலம் திருச்சிராப்பள்ளி இரயில்வே 
ஜங்சன் வந்து சேர்ந்தனர். 


266 நபர்களில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தை சேர்ந்த 64 நபர்கள் 202 நபர்கள் இதர 
மாவட்டங்களை சேர்நதவர்கள் 
புதுக்கோட்டை சிவகங்கை ராமநாதபுரம் திண்டுக்கல் மதுரை தேனி கரூர் ஈரோடு
திருப்பூர் கோயம்புத்தூர் நீலகிரி சேலம் நாமக்கல் தஞ்சாவூர் திருவாரூர் நாகபட்டினம்
அரியலூர் பெரம்பலூர் விழுப்புரம் கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை கடலூர் ஆகிய 22
மாவட்டத்தை சேர்ந்த 202 நபர்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு 
போக்குவரத்துக்கழகம் 5 சிறப்பு பேருந்துகள் மூலம் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி 
வைக்கப்பட்டனர். அந்தந்த மாவட்டங்களில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தொடர்பான 
பரிசோதனை செய்யப்படுவார்கள். 
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 64 நபர்களையும் தமிழ்நாடு அரசு 
போக்குவரத்துக்கழகத்தின் 2 சிறப்பு பேருந்துகள் மூலம் கொரோனா வைரஸ் நோய் தொற்று 
பரிசோதனை செய்து தனிமை படுத்துவதற்காக சேதுராப்பட்டி அரசு பொறியியல் கல்லூரிக்கு 
அழைத்துச்செல்லப்பட்டனர். இவர்கள் 14 நாட்கள் தனிமை படுத்தி கண்காணிக்கப்பட்டு 
வருகின்றனர். 
மீதமுள்ள 292 நபர்கள் டெல்லி தப்லீக் மாநாட்டிற்கு சென்றவர்கள். இவர்களை 
திருச்சிராப்பள்ளி ரயில்வே ஜங்சனில் இருந்து தனியார் கல்லூரி பேருந்துகள் மூலம் காஜாமலை 
பகுதியில் உள்ள அரபிக்கல்லூரிக்கு அழைத்துச் சென்று அங்கு அவர்களுக்கு கொரோனா 
வைரஸ் நோய் தொற்று தொடர்பான மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இவர்களும் 14 
நாட்கள் தனிமை படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வடிவேல்பிரபு
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் ராஜ்மோகன்
திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன் முசிறி வருவாய் கோட்டாட்சியர்
(பொ) 
பழனிதேவி காவல் உதவி ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) மணிகண்டன் 
அலுவலக மேலாளர் பொது சத்தியமூர்த்தி திருச்சிராப்பள்ளி கிழக்கு வட்டாட்சியர்
மோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
On Tuesday, May 19, 2020 by Tamilnewstv in    
தமிழகத்தில் 24 மாவட்டங்களை சேர்ந்த 494 நபர்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் பணிபுரிந்த 


தொழிலாளர்களை புனே ரயில் நிலையத்திலிருந்து சிறப்பு இரயில் மூலம் பயணிகளை ஏற்றிக்கொண்டு 
திருச்சிராப்பள்ளி இரயில்வே ஜங்சன் வந்து சேர்ந்தது. ரயிலில்வந்தவர்களை அந்தந்த 
மாவட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் 12 சிறப்பு பேருந்துகள் மூலம் சமூக 
இடைவெளி கடைபிடித்து மாவட்ட ஆட்சித்தலைவர் 
சிவராசு இன்று (19.5.2020) 
பயணிகளை அனுப்பி வைத்தார். 

 இது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது

மத்திய‌மாநில அரசுகள் புலம் பெயர்ந்து வேலை செய்யும்தொழிலாளர்களை அந்தந்த 
மாநிலத்தில் உள்ள சொந்த ஊருக்கு சிறப்பு இரயில் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்று 
அறிவிக்கப்பட டிருந்தது. தமிழகத்தை சேர்ந்த 494 நபர்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் பணி புரிந்த 
நபர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்ப வேண்டும் என்று பதிவு செய்துள்ளனர். 
அதனன்படி அரியலூர் 8 கோயமுத்தூர் 16 திண்டுக்கல் 39 ஈரோடு 44 காரைக்கால் 1கரூர் 25 
மதுரை 17 நாகப்பட்டினம் 25 நாமக்கல் 9நிலகிரி 7பெரம்பலூர் 15 புதுக்கோட்டை 80சிவகங்கை 
30தஞ்சாவ10ர் 29தேனி 26 திருச்சிராப்பள்ளி 25 திருப்பூர்10 17 திருவாரூர் 62 சேலம் 08 தர்மபுரி 05
கிருஷ்ணகிரி 2 விழுப்புரம் 1 திருவண்ணாமலை 1திருப்பத்தூர் 2 ஆகிய 24 மாவட்டங்களை 
சேர்ந்த 494 நபர்கள் சிறப்பு இரயில் மூலம் திருச்சிராப்பள்ளி இரயில்வே ஜங்சன் வருகை புரிந்தனர். 
இவர்களை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அந்தந்த மாவட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து 
கழகத்தின் 12 சிறப்பு பேருந்துகள் மூலம் சமூக இடைவெளியை கடைபிடித்து அனுப்பிவைக்கப்பட்டனர். 
இவர்கள் அந்தந்த மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய்தொற்று உள்ளதா என பரிசோதனை 
செய்யப்படுவர்கள். 
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச்சேர்ந்த 25 நபர்களும் சேதுராப்பட்டி அரசு தொழில்நுட்பக்
கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்ட கண்காணிப்பு முகாமில் 14 நாட்கள் தனிமைப ;படுத்தப்பட்டுள்ளனர். 
இவர்களுக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று தொடர்பான பரிசோதனை இன்று மேற்கொள்ளப்படும். 
மேலும் நமது மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஒவ்வொரு நபருக்கும் உணவு வழங்கப்பட்டது என 
மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தெரிவித ;துள்ளார். 
இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக 
உதவியாளர் (பொது) வடிவேல்பிரபு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் 
சத்தியமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.