Saturday, June 06, 2020

On Saturday, June 06, 2020 by Tamilnewstv in    
திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் குவைத் நாட்டில் இருந்து ஏர் இந்தியா விமானம் 
மூலம் வருகைபுரிந்த 103 பயணிகளுக்கு பரிசோதனை நடைபெற்றதை மாவட்ட 
ஆட்சித்தலைவர் சிவராசு இன்று (06.06.2020) பார்வையிட்டு 
ஆய்வு செய்தார். 

திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திற்கு இன்று (06.06.2020) குவைத் நாட்டில் 
இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் 103 பயணிகள் திருச்சிராப்பள்ளி 
விமான நிலையத்திற்கு வருகைபுரிந்தனர்.

இதில் அரியலூர் 2 சென்னை 2 கோயம்புத்தூர் 1 கடலூர் 5 கள்ளக்குறிச்சி 2
கன்னியாகுமரி 3 கரூர் 1மதுரை 2 நாகப்பட்டிணம் 3 பெரம்பலூர் 5 புதுச்சேரி 2 
புதுக்கோட்டை 6 இராமநாதபுரம் 13 சேலம் 2 சிவகங்கை 4 தஞ்சாவூர் 13
திருவண்ணாமலை 3 தூத்துக்குடி 1 திருவாரூர் 9திருச்சிராப்பள்ளி 10 திருநெல்வேலி 
4 திருப்பட்டூர் 1 வேலூர் 2விழுப்புரம் 7 என 24 மாவட்டங்களை சார்ந்த ஆக
மொத்தம் 103 பயணிகள் வருகைபுரிந்தனர். கொரோனா வைரஸ் நோய்தடுப்பு 
முன்னெச்சரிக்கையாக மத்திய சுகாதார அமைச்சகம் வழிகாட்டுதலின்படி
சுகாதாரத்துறையினர் மூலம் விமான நிலையத்தில் பயணிகளுக்கு பரிசோதனை 
செய்யப்பட்டது. இதில் எவருக்கும் கொரோனா வைரஸ் நோய்தொற்று இல்லை என 
உறுதி செய்யப்பட்டது. அந்தந்த மாவட்டங்களுக்கு அரசு சிறப்பு பேருந்துகள் மூலம்
பயணிகளை அனுப்பி வைக்கப்பட்டனர். 
இந்நிகழ்ச்சியில் திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாச்சியர் 
விஸ்வநாதன் துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர் சுப்ரமணி பயிற்சி 
ஆட்சியர் செல்வி சரண்யா திருச்சிராப்பள்ளி கிழக்கு வட்டாட்சியர் மோகன் 
 மற்றும்பலர் உடனிருந்தனர்.
On Saturday, June 06, 2020 by Tamilnewstv in    
*ஜி - கார்னரில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.* 

 *தியாகி வ.உ.சி. ஒர்க்கர்ஸ் யூனியன் கோரிக்கை* 

    உலகையே அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரசின் கோரத் தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்காக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.  அதன் ஒரு பகுதியாக திருச்சியின் மையப் பகுதியில் இயங்கி வந்த காந்தி மார்க்கெட்டை மக்களின் நலன் கருதி தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் 1.4.2020 முதல் பூட்டி சீல் வைத்தது.  

     மக்களை காப்பாற்றுவதற்காக அரசு எடுத்த நடவடிக்கையை ஏற்றுக்கொண்டு திருச்சி காந்தி மார்க்கெட்டில் இருந்த அனைத்து காய்கறி வியாபாரிகளும் பொன்மலை ஜி - கார்னரில் வியாபார செய்து வருகின்றனர். இடையில் மழை பெய்த போதும் பொது படுத்தாது தங்கள் வியாபாரம் மூலம் பொதுமக்களுக்கும், நுகர்வோருக்கும் தரமான காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர். 

     இதனிடையே ஒரு சில அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் தங்களை முன்னிலைப்படுத்த பலமுறை முயன்றும் முடியாமல் போனதால் தற்போதுள்ள சூழ்நிலையை  தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு வியாபாரிகளின் ஒரு பிரிவினரை அரசுக்கு எதிராகவும், பொது மக்களுக்கு தரமான காய்கறிகள் கிடைப்பதை தடை செய்யும் விதமாகவும், எச்சரிக்கை விடுக்கின்ற வகையில் போராட்ட அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர்.  

     இந்த போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ள தலைவர் மார்க்கெட்டை பூட்டும் போது வராமல் இருந்து விட்டு இப்போது வந்து *7.6.2020-ல்  காந்தி மார்க்கெட் திறக்கவில்லை என்றால் 8.6.2020 முதல் காலவரையின்றி காய்கறி வியாபாரம் செய்ய மாட்டோம்* என்று அறிவித்துள்ளனர். 

     அந்த தலைவரின் இந்த அறிவிப்பானது  மொத்தம், கமிஷன் மண்டி வியாபாரிகளை விட சில்லரை வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதோடு நுகர்வோரும், பொது மக்களும் காய்கறி கிடைக்காமல் சிரமப்படுகின்ற சூழல் ஏற்படும் என்பதை அந்த தலைவர் புரிந்து கொள்ளவில்லை.  

     சில நபர்களின் சுயநலத்தால் சில்லரை வியாபாரிகள், வியாபாரம்  செய்ய முடியாத நெருக்கடி நிலைக்கு தள்ளப்படுகின்ற அபாயகரமான சூழலும் நிலவுகிறது. ஆனால் சில்லரை வியாபாரிகள் தங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வியாபாரம் செய்திட முயற்சிக்கும் போது, பாதுகப்பற்ற சூழல் ஏற்படவும், வாய்ப்புகள் அதிகம் உள்ளனர். பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டும் தங்களின் வாழ்வாதரத்தை எண்ணியும் வியாபாரம் செய்யும் சில்லரை வியாபாரிகளுக்கு மாநில அரசும்,மாவட்ட நிர்வாகமும் உரிய போலீஸ் பாதுகாப்பினை வழங்கிட வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.

     சில்லரை வியாபாரிகளுக்கு விற்பனைக்காக வருகின்ற  லாரிகளை தடுப்பதற்கான முயற்சிகளும் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதற்கு பெரும் பண முதலைகள் தலைமை தாங்குவதாகவும் ஒரு குற்றச்சாட்டும் நிலவி வருகிறது. 

 *வியாபாரிகளை நசுக்க துடிக்கும் சேகரன்* 

     நுகர்வோர் சேவை அமைப்பு என்கிற பேரில் இயக்கம் நடத்துகின்ற சேகரன் அவர்கள் நுகர்வோர் நலன் சார்ந்து செயல்படாமல் இல்ல வையாபாரிகளை நசுக்குவதிலேயே குறியாக இருந்து வருகிறார்.  வியாபாரிகள் வரிகளை முறையாக செலுத்தினால்தான் அரசுக்கு வருவாய். அதைக் கொண்டுதான் மக்கள் நல திட்டங்களையும் நுகர்வோர் நலன் சார்ந்த திட்டங்களையும் அரசு செயல்படுத்த முடியும். அரசின் வருவாயை கெடுக்கின்ற வகையில் செயல்பட்டு இல்லரை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை கெடுப்பதிலேயே குறியாக உள்ள சேகரன் அவர்கள் நுகர்வோர்களுக்கு தேவையான பொருள்கள் கிடைப்பதை தடை செய்ய முயற்சிப்பது ஏன்? என்று தெரியவில்லை.  

     வியாபாரிகளின் வாழ்வோடு விளையாடும் சேகரன் பசுமை தினமான இன்று (6.6.2020) எத்தனை மரக்கன்றுகள் நட்டார் என்பதை சொல்ல முடியுமா?  

      நாட்டில் மாசுக்களை ஏற்படுத்துகின்ற எத்தனையோ தொழிற்சாலைகள் இயங்கி கொண்டிருக்கின்றன. மதுப்பழக்கத்தால் நாட்டில் எவ்வளவோ குற்ற செயல்கள் நடக்கின்றன.  அந்த ஆலைகளையெல்லாம் இழுத்து மூட சேகரன் அவர்கள் போராட்டம் நடத்த வேண்டியது தானே?  அவர்களுக்கு எதிராக அந்த போராட்டத்த எந்த போராட்டத்தையும் நடத்த மாட்டார். ஏனெனில், அவர் எப்போதும் ஏழைகளுக்கெதிரான போராட்டத்தை மட்டுமே கையில் எடுப்பார் என்பதற்கு வேறு அன்று தேவையில்லை.  பண முதலைகள் பக்கம் மட்டுமே எப்போதும் நிற்பார். 

     ஒரு காலத்தில் வியாபாரியாக இருந்து பல முறைகேடுகளை செய்து அதில் தொடர்ந்து நீடிக்க முடியாமல் அந்த தொழிலை விட்டு ஓடி வந்தவர் தான் இந்த சேகரன்.  அதனால்தான் என்னவோ வியாபாரிகளை, அதிலும் குறிப்பாக சில்லரை வியாபாரிகளை நசுக்குவதையே தொழிலாக கொண்டுள்ளார்.

     இவரைப் போன்றவர்களிடமிருந்து சில்லரை வியாபாரிகளை அரசும், மாவட்ட நிர்வாகமும் காப்பாற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். 

 *ஆ.வையாபுரி* , 
 *நிறுவனர் / தலைவர்,* 
" *தியாகி" வ.உ.சி.* *ஒர்க்கர்ஸ் யூனியன்* ,
*Cell: 95002 - 99882.*

Friday, June 05, 2020

On Friday, June 05, 2020 by Tamilnewstv in    
*திருச்சியில் இன்று மட்டும் 12 பேருக்கு நோய் தொற்று உறுதி*
    

திருச்சியில் இன்று திருவானைக்கோவில் சொக்கநாதபுரம், மணப்பாறையில் உள்ள குமரன் மருத்துவமனை ஊழியர்கள் 3 பேர், கல்லுப்பட்டி , பீமநகா் யானைகட்டி மைதானம், கொட்டப்பட்டு, முத்தரசநல்லுாா் ஆகிய பகுதிகளை சோ்ந்த 12 போ் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனா். இதன் காரணமாக திருச்சியில் கொரோனா தாக்கத்திற்கு உள்ளானோாின் எண்ணிக்கை மொத்தம் 112 ஆக உயா்ந்து உள்ளது. கொரோனா தாக்கம் ஏற்பட்டுள்ள பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
On Friday, June 05, 2020 by Tamilnewstv in    
திருச்சி ஜூன் 05

திருச்சியில் மீண்டும் வாழ்வாதாரத்தை துவக்கியுள்ள ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள், காய்கறிகள் அடங்கிய நிவாரண தொகுப்யை சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வழங்கினார்.

 கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டு, எடுக்கப்படும் நடவடிக்கைகளால், ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க, பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. 


 ஆட்டோ ஓட்டுனர்கள் ஆட்டோக்களை இயக்க தமிழக அரசு அனுமதித்துள்ள நிலையில் மீண்டும் துவங்கியுள்ள அவர்களது வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் திருச்சி, காந்தி மார்க்கெட், பழைய பாஸ்போர்ட் அலுவலக வளாகத்தில், கிழக்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட, மலைக்கோட்டை, பாலக்கரை, மற்றும் மாநகர பகுதியில் ஆட்டோக்களை இயக்கும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அரிசி, துவரம் பருப்பு, கோதுமை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய மளிகை பொருட்கள்  தொகுப்பினை, தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வழங்கினார்.

ஆட்டோ ஓட்டுனர்களின் சமூக இடைவெளியை கருத்தில் கொண்டு, சமூக இடைவெளியுடன் அமைக்கப்பட்ட நாற்காலிகளில் அமர வைக்கப்பட்டு, பொருட்கள் வழங்கப்பட்டது.

முன்னதாக, ஓட்டுனர்களுக்கு கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி,  முகக்கவசம் வழங்கப்பட்டு, சமூக இடைவெளி, உடல் மற்றும் சுற்றுப்புறத்தூய்மை குறித்தும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அமைச்சர் வெல்லமண்டி நடராஐன் அறிவுரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அதிமுக பகுதி கழக நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
On Friday, June 05, 2020 by Tamilnewstv in    
தொடர்ச்சியாக மக்களை உயிர் பாதுகாக்கும் மீட்பு பணியில் தீயணைப்பு துறையினர்
துணை இயக்குனர் மீனாட்சி விஜயகுமார் பேட்டி

திருச்சி தீயணைப்புத்துறை துணை மண்டல இயக்குனர் மீனாட்சி விஜயகுமார் கூறுகையில் ஜீவராசிகளுக்கும் நாங்கள் மனிதநேயத்தோடு உணவு அளித்து வருகிறோம். கொரோனா தொற்று ஏற்பட்ட காலங்கள் முதல் தீயணைப்புத்துறையினர் எத்தனையோ மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளோம். அதில் சிலர் இறந்தும் உள்ளனர். மேலும் உயிரிழந்த நிலையில் உள்ள பிணங்களை மீட்கும் பொழுது கிணறுகளில் விஷவாயு கசிவு களில் மீட்பு பணியில் ஈடுபடும் போது எங்களுக்கும் பாதிப்புகள் ஏற்படும் என்று தெரிந்துதான் நாங்கள் எங்கள் உயிரையும் பெரிதாக கருதாமல் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். மேலும் எங்களிடையே மீட்பு பணிகளை செய்தியாக வெளியிடும் பத்திரிக்கையாளர் மற்றும் ஊடக நண்பர்களுக்கு நன்றி என்றும் தெரிவித்தார்.




மேலும்தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை இயக்குனர் சைலேந்திர பாபு அவர்கள் வழிகாட்டுதல்படி பள்ளி மாணவ மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ஓவியப்போட்டி மத்திய மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றது.  



  இப்போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு தமிழகத்தில் முதல் முறையாக காணொளி காட்சி மூலம் தீயணைப்பு துறை இயக்குனர் சைலேந்திரபாபு பரிசுகளையும் பாராட்டுதல்களையும் வழங்கி ஊக்கப்படுத்தினார். இந்த ஓவிய போட்டிகளில் பல நாட்களாய் வீட்டில் முடங்கிக் கிடந்த மாணவ மாணவியர்களின் திறமைகளை வெளிக்கொணரும் விதமாக அமைந்தது திருச்சி மாவட்ட தீயணைப்பு துறை அலுவலகத்தில் நடைபெற்ற இவ்விழாவில் மத்திய மண்டல துணை இயக்குனர் மீனாட்சி விஜயகுமார் மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார் இந்நிகழ்ச்சியில் மாவட்ட அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Monday, June 01, 2020

On Monday, June 01, 2020 by Tamilnewstv in    

திருச்சி நவல்பட்டு பூலாங்குடி காலனியில் பரிதாப சம்பவம்


மகன் இறந்ததால் அதிர்ச்சி எரி வாயு உருளையை வெடிக்க வைத்து 2 மகள்களுடன் தாய் தற்கொலை


  திருச்சியில், மகன் இறந்த அதிர்ச்சியை தாங்காமல், எரிவாயு உருளையை திறந்து வெடிக்கவைத்து 2 மகள்களுடன் தாய் தற்கொலை செய்து கொண்டார். 

  திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்த நவல்பட்டு பூலாங்குடி காலனியை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 59). ஓய்வு பெற்ற தனியார் பள்ளி ஆசிரியை. இவரது கணவர் முருகேசன் ஏற்கெனவே இறந்து விட்டார். இவர்களது மகள்கள் விஜயலட்சுமி (28), விஜயவாணி (26), மகன் விஜயகுமார் (25). இதில் டிப்ளமோ படித்து முடித்த விஜயகுமார் கடந்த 9 மாதத்துக்கு முன் விபத்தில் சிக்கி வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

 இந்தநிலையில், நேற்று இரவு 7 மணியளவில் விஜயகுமாரின் உடல்நிலை மோசமானதால் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்


 மருத்துவ குழுவினர் வந்து பரிசோதித்ததில் விஜயகுமார் இறந்து விட்டதாக தெரிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த செய்தியை அருகில் உள்ளவர்களிடம் சொல்லாமல் மனதுக்குள்ளேயே வைத்து வேதனையில் இருந்த விஜயலட்சுமி குடும்பத்தினருடன் தற்கொலை செய்ய முடிவு செய்தார். இதற்காக இரவு  மணிக்கு வீட்டில் உள்ள அறையில் விஜயகுமாரின் உடலை எடுத்து சென்றனர். அங்கு சமையல்  எரிவாயு உருளையை திறந்து விட்டு மூவரும் சிலிண்டர் அருகே நின்று கொண்டு தீயை பற்ற வைத்தனர்.

 தீ பற்றியவுடன் எரிவாயு உருளை வெடித்து சிதறியது. இதில் 3 பேரும் உடல் கருகி இறந்தனர். எரிவாயு உருளை வெடிக்கும் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து நவல்பட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கி இருந்த 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
On Monday, June 01, 2020 by Tamilnewstv in    
திருச்சி போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக இருப்பதாகக் கூறி, திருச்சி அண்ணா சிலை ரவுண்டானா நெடுஞ்சாலைத் துறையினரால் ஞாயிற்றுக்கிழமை இடிக்கப்பட்டது.

திருச்சி மேலச் சிந்தாமணி பகுதியில் நிறுவப்பட்ட பேரறிஞா் அண்ணாவின் உருவச் சிலையை கடந்த 1968- ஆம் ஆண்டில், அப்போதைய தமிழக அமைச்சா்கள் மு. கருணாநிதி, இரா. நெடுஞ்செழியன் ஆகியோா் திறந்து வைத்தனா். தொடா்ந்து இப்பகுதியில் ரவுண்டானா அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது.

வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற காரணங்களால், அண்ணா சிலை ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது

இதனால் ரவுண்டானாவின் அளவைக் குறைக்க வேண்டும் என பல்வேறு சமூக ஆா்வலா்களும் வலியுறுத்தி வந்தனா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் அண்ணா சிலை ரவுண்டாவை இடிக்கும் பணியை நெடுஞ்சாலைத் துறையினா் மேற்கொண்டனா். உள்ளேயிருந்த செடிகளும் அகற்றப்பட்டு வருகின்றன.

இப்பணிகள் அனைத்தும் முடிந்த பின்னா், ரூ.40 லட்சம் செலவில் மிக குறுகிய அளவிலான ரவுண்டானா இதே பகுதியில் அமைக்கப்படும் எனவும் நெடுஞ்சாலைத் துறையினா் தெரிவித்தனா்.

திருச்சி அண்ணா சிலை ரவுண்டானாவை இடித்து அகற்றியது போன்று, போக்குவரத்து நெரிசல்களுக்கும், விபத்துகளுக்கும் காரணமாக இருக்கும் நீதிமன்றம் அருகிலுள்ள எம்.ஜி.ஆா்.சிலை ரவுண்டானா, மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள அரிஸ்டோ ரவுண்டானா போன்றவற்றையும் இடித்து அகற்றி, அங்கு குறுகிய அளவில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தி உள்ளனா்
On Monday, June 01, 2020 by Tamilnewstv in    
*தமிழக முதல்வர் அறிவிப்பின்படி திருச்சி *மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் பொது பேருந்து போக்குவரத்து நாளை (ஜீன் 1- ம் தேதி ) துவங்குகியது*

*மக்கள் பயன்பாட்டிற்காக  இந்த பேருந்துகள்* *திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர்*


  • *அரியலூர்*பெரம்பலூர்* *புதுக்கோட்டை* *ஆகிய 7 மாவட்டங்களை  *உள்ளடக்கியும்,


நாலாவது மண்டலத்துக்கு அருகில் உள்ள மாவட்டங்களின் எல்லை வரையிலும் காலை 5 மணி முதல் இரவு 9 மணிவரை இயக்கப்படும்*

*திருச்சி மாவட்ட *பகுதிகளில்  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக (கும்பகோணம் ) லிட் திருச்சி மண்டலம் மூலம் 50 சதவீத பேருந்துகளும்*

*60 சதவீத பயணிகளுடன்  180 நகர் பேருந்துகளும்  150 புறநகர் பேருந்துகள் என மொத்தம்  330 பேருந்துகள் இயக்கப்படும்*

*பேருந்தில் பயணிக்கும் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணியவேண்டும்*

*பேருந்தில் பின்படிக்கட்டில் ஏறும்போதும் ,முன்படிக்கட்டில் இறங்கும் போதும் நிச்சயமாக பயணிகள் சமூக இடைவெளியை பயன்படுத்திட* *வேண்டும்* போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இன்று முதல் பேருந்து இயக்கப்பட்டது
On Monday, June 01, 2020 by Tamilnewstv in    
*பட்டியல் இன மக்களை அவதூறு பேசி வரும் திமுக எம்பி களை கைது செய்ய வலியுறுத்தி திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈபி ரோடு அம்பேத்கர் சிலை அருகே 50 க்கும் மேற்பட்ட அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் தற்போது மாநகர மாவட்ட செயலாளர் குமார் ஆதரவு தெரிவித்தார்* 

திமுகவை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தும் என தலைமை கழகம் அறிவித்ததையடுத்து கிழக்கு சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில்  திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது 


இதில் பட்டியல் இன மக்களை குறித்து அவதூறாக பேசியவர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்து பதாகைகள் ஏந்தி 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் மலைக்கோட்டை பகுதி செயலாளர் அன்பழகன் சகாதேவன் பாண்டியன் அதிமுக பகுதி மற்றும்  வட்ட கழக நிர்வாகிகள் கட்சி தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.