Friday, August 20, 2021

 கணவரை மீட்டு தரக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் புகார்


ஸ்ரீரங்கம் வடக்குவாசல் கொள்ளிடம் ரோடு பகுதியைச் சேர்ந்த நவீன் நிஷா,என்பவர் காவல் ஆணையர் அவர்களிடம் மனு அளிக்க வந்தனர்


அதில் தனக்கு திருமணமாகி ஐந்து வருடம்ஆகின்றது நானும் கணவரும் சில மாதங்களே ஒன்றாக வாழ்ந்து வந்தோம் எனது கணவரின் சித்தப்பா ராம்ராஜ், என்பவர் பேச்சைக் கேட்டு பல ஆண்டுகளாக என்னைப் பார்க்க வரவில்லை மேலும் எனது கணவரின் சித்தப்பா ராம்ராஜ்யிடம் எனது கணவரை பார்க்க வேண்டுமென்று கேட்டாலும் அவர்கள் எனது கணவரை காட்டவில்லை எனது கணவர் எங்கு இருக்கிறார் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்ற நிலையில் உள்ளது எனது வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிய ராம்ராஜ் ,என்பவர் மீது நடவடிக்கை எடுத்து எனது கணவரை கண்டுபிடித்து என்னுடன் சேர்த்து வைக்குமாறு மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்ததாகவும் அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததாகவும் நவீன் உஷா கூறினார்

Tuesday, August 17, 2021

 முன்னாள் மத்திய அமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் மனசாட்சியாக விளங்கிய முன்னாள் மத்திய அமைச்சர்


 முரசொலி மாறனின் 88 வது பிறந்த நாளையொட்டி  திருச்சி தெற்கு மாவட்ட திமுக  அலுவலகத்தில் திமுவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

 முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் 88வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது

  தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளரும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அமைச்சரும்மான அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க திருச்சி தெற்கு மாவட்ட கழக  திமுக  அலுவலகத்தில் முரசொலிமாறன் பிறந்தநாள் விழா நடைபெற்றது.   

தலைமை செயற்குழு உறுப்பினர் கே என் சேகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முரசொலிமாறன் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது 

நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜன்,  செந்தில்  மலைக்கோட்டை பகுதி கழக செயலாளர் மதிவாணன் உட்பட கட்சியின் மாவட்ட ஒன்றிய நகர பகுதி  பேரூர் கழக செயலாளர்கள் அணிகளின் அமைப்பாளர்கள்  நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்

Monday, August 16, 2021

On Monday, August 16, 2021 by Tamilnewstv in    

 


மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, மான்பிடிமங்கலம் சக்திவேல் அவர்களின் மனைவி நித்யா(25) மற்றும் அவர்களது  8 மாத கைக்குழந்தை பவ்யஸ்ரீ, ஆகியோர் வீட்டு சுவர் இடிந்து  விழுந்ததில் சம்பவ இடத்திலேயே  பலியானார்கள் என்பதை அறிந்து மனம் வேதனையுற்ற மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன்

மீளாத்துயரில் இருக்கும் சக்திவேல் மற்றும் அவர்களது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் மேலும், தமிழக அரசின் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒருவருக்கு ரூ.4 லட்சம் வீதம் இரண்டு பேருக்கும் ரூ. 8 லட்சம் நிவாரண நிதியையும் நேரில் வழங்கினார்



 திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில்


ஆணையர் திரு.ப.மு.நெ.முஜிபுர் ரகுமான் அவர்கள்  தேசிய கொடி ஏற்றி வைத்து


பணியாளர்களுக்கு ரொக்கத் தொகை ரூ2000ம் மற்றும்  பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று (15.08.2021)   சுதந்திர தின விழா இவ்விழாவில்  ஆணையர்  திரு.ப.மு.நெ.முஜிபுர் ரகுமான் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

 

  மாநகராட்சியில்  நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஆணையர் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதியில் கொரானா (covid - 19) நோய் தடுப்பு பணியில் அர்பணிப்புடன் சிறப்பாக பணிபுரிந்த 16 பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.  

 

  ஆதனை தொடர்ந்து திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில்  மாசற்ற முறையில் 25 ஆண்டுகள்  பணி புரிந்து நிறைவு செய்த 12 பணியாளர்களுக்கு ரொக்கத் தொகை ரூ2000ம் மற்றும்  பாராட்டு சான்றிதழ்கள் ஆணையர்  அவர்கள் வழங்கினார்.  


        பின்னர் அரசு தலைமை மருத்துவமணை அருகில் உள்ள அண்ணல் காந்தியடிகள் அஸ்தி மண்டபத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய  பிறகு  காந்தி சந்தைஅருகில்  போர் வீரர்கள் நினைவு  தூணிற்கு மலர் வளையம் வைத்து  மரியாதை செலுத்தி பின்பு காந்தி சந்தை வளாகத்தில் உள்ள அண்ணல் காந்தியடிகள் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தார்கள்.

       

          மாநகராட்சி வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் நகரப் பொறியாளர் திருமதி. எஸ் . அமுதவள்ளி,   , நகர் நல அலுவலர் திருமதி. மரு. எம்.யாழினி , செயற்பொறியாளர்கள் திரு.பி.சிவபாதம், திரு.ஜி.குமரேசன், உதவிஆணையர்கள் திரு.ச.நா.சண்முகம், திரு.எம்.தயாநிதி, திரு.எஸ்.திருஞானம், திரு.சு.ப.கமலக்கண்ணன்,                         திரு.எஸ், செல்வபாலாஜி  மற்றும்  உதவிசெயற்பொறியாளர்கள், அலுவலர்கள்,  பணியாளர்கள் கலந்துகொண்டார்கள்.

 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவாரசு  தேசிய கொடியை ஏற்றி சிறப்பாக பணியாற்றிய 323 பயனாளிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.


     இந்திய திருநாடனாது விடுதலை பெற்று இன்று 75-வது சுதந்திர தினத்தை நாடு முழுவதும் கொடியேற்றி கொரோனா கட்டுப்பாடுகளுடன் வெகு விமரிசையாக கொண்டாப்பட்டு வருகிறது.


அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள சுப்ரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் காலை 09:05 மணிக்கு தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

பின்னர்‌ அணிவகுப்பின் படை தளபதியுடன் வாகனத்தில் பயணித்து. அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.பின்னர்‌ மூவர்ணக் கலர் கொண்ட‌ பலூன்களை வானில் பறக்கவிட்டார்.

இதனைத் தொடர்ந்து பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 323 அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய மண்டல காவல் துறை தலைவர் பாலகிருஷ்ணன்,மாநகர காவல் ஆணையர் அருண், மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான்,திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருச்சி கோ அபிஷேகபுரம் கோட்டத்தில் 75ஆவது சுதந்திர தின விழா உதவி ஆணையர் செல்வ பாலாஜி தலைமையில் கொடியேற்று விழா நடைபெற்றது


 திருச்சி 75 சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி கோ அபிஷேகத்திற்கு உட்பட்ட கோட்டத்தில் உதவி ஆணையர் செல்வ பாலாஜி  தலைமையில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கப்பட்டது

இந்நிகழ்ச்சியின் போது உதவி செயற் பொறியாளர் பாலசுப்பிரமணியம்  இளநிலை பொறியாளர்கள் இப்ராஹிம் புஷ்பராணி ராஜ்பெரியசாமி  நிர்வாக அலுவலர்கள் ரஷீதா பேகம் புவனேஸ்வரி மற்றும் ஊழியர்கள் உதவியாளர்கள் மாநகராட்சிகோட்டை பணியாளர்கள்  ஆகியோர் கலந்து கொண்டனர்

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட மல்லியம்பத்து பஞ்சாயத்து தலைவர் விக்னேஸ்வரன் தலைமையில் 75 ஆவது சுதந்திர தின விழா கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது


ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட மல்லியம்பத்து பஞ்சாயத்து அலுவலகத்தில் பஞ்சாயத்து தலைவர் விக்னேஸ்வரன் தலைமையில் 75 ஆவது சுதந்திர தின விழா குடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது


இந்நிகழ்ச்சியின் போது ஊர் பொதுமக்கள் பஞ்சாயத்து அலுவலக அலுவலர்கள் பள்ளி குழந்தைகள் ஆகியோர் கலந்து கொண்டனர்



Sunday, August 15, 2021


 திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட முத்தரசநல்லூர் பஞ்சாயத்தில் 75வது சுதந்திர தின விழா முத்தரசநல்லூர் பஞ்சாயத்து தலைவர் ஆதிசிவன் தலைமையில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது

முத்தரசநல்லூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் பஞ்சாயத்து தலைவர் ஆதிசிவன் தலைமையில் 75 ஆவது சுதந்திர தின விழா கொடியேற்றி இனிப்புகள் வழங்கி தூய்மை பணியாளர்களுக்கு கௌரவித்து ஓய்வு பெற்ற நபருக்கு மரியாதை அன்பளிப்பு கொடுக்கப்பட்டது


இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பகுதியை சார்ந்த மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் பேனா பென்சில் பொருட்கள் இனிப்புகள் வழங்கப்பட்டு சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது .


மேலும் இந்நிகழ்ச்சியில் முத்தரசநல்லூர் வார்டு உட்பட்ட நம்பர் கணேசன் மற்றும் சதீஷ் பஞ்சாயத்து அலுவலர்கள் தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.




Tuesday, August 10, 2021

 கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

திருச்சிராப்பள்ளி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேரு அவர்கள் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் 

மா. சுப்பிரமணியன் அவர்கள் ஆகியோரிடம் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

 அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் ஏற்பாட்டின் படி 

ரூபாய் 3 கோடி மதிப்பில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள  9 பேரவை பகுதிகளுக்கும்,  தொகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு ஒவ்வொரு  தொகுதிக்கும் தலா ஒரு லட்சம் முகக் கவசங்கள் மற்றும் 83 வென்டிலேட்டர் கருவிகளையும் இன்று வழங்கினார் அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு சு. சிவராசு அவர்களும் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்  தியாகராஜன்  

இனிகோஇருதயராஜ்  அப்துல்சமத் மற்றும் மருத்துவமனை முதல்வர் டாக்டர் வனிதா மற்றும் மருத்துவத் துறையைச் சேர்ந்த அதிகாரிகளும் பங்கு கொண்டனர்