Wednesday, May 11, 2016
அவிநாசியை அடுத்த கஞ்சப்பள்ளி அருகே பாம்பு கடித்ததில் 8 வயது சிறுமி உயிரிழந்தார்.
கஞ்சப்பள்ளியைச் சேர்ந்தவர் ராமசாமி (45). இவரது மகள் கிருத்திகா (8). இவர், அம்மாபாளையத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி அங்குள்ள அரசுப் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், பள்ளி விடுமுறை காரணமாக கஞ்சப்பள்ளியில் உள்ள தந்தை வீட்டுக்கு வந்துள்ளார்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை வீட்டுக்குள் புகுந்த பாம்பு அங்கு உறங்கிக் கொண்டிருந்த கிருத்திகாவை கடித்தது. இதையறிந்த ராமசாமி, கிருத்திகாவை அவிநாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு கிருத்திகா உயிரிழந்தார். இதுகுறித்து அன்னூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment