Wednesday, May 11, 2016
திருப்பூரில் பின்னலாடை உற்பத்தியாளர் வீட்டில் 50 பவுன் நகை, ரூ.2.5 லட்சம் திருட்டு போனது குறித்து வீட்டின் காவலாளியை போலீஸார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
திருப்பூர் வடக்கு போலீஸ் எல்லைக்கு உள்பட்ட திரு.வி.க. நகரை சேர்ந்தவர் நர்மதாமால் (40). இவர் திருப்பூர் கல்லூரி சாலையில் பின்னலாடை உற்பத்தி நிறுவனம் நடத்தி வருகிறார். நர்மதாமால் தனது குடும்பத்துடன் சில நாள்களுக்கு முன் சுற்றுலா சென்றார். வீட்டின் பாதுகாப்புக்காக பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் பப்பு என்பவரை காவலுக்கு வைத்து சென்றுள்ளார்.
இந்நிலையில், சுற்றுலாவை முடித்து விட்டு நர்மதாமால் செவ்வாய்க்கிழமை காலை வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்த நிலையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 50 பவுன் நகை மற்றும் ரூ.2.5 லட்சம் பணம் திருட்டு போனது தெரியவந்தது. பாதுகாப்புக்கு இருந்த பப்புவும் மாயமாகியிருந்தார்.
இதுகுறித்து நர்மதாமால் திருப்பூர் வடக்கு போலீஸில் புகார் அளித்தார். இப்புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் நடத்திய விசாரணையில் வீட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பப்பு மகாராஷ்டிரத்தின் புணேவைச் சேர்ந்தவர் என்பதும் அவரும், அவரது நண்பரும் சேர்ந்து இந்தத் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, அவர்களைத் தேடும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மற்றும் பல்லடம் வட்ட பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு நிகழ்ச்சி...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...

0 comments:
Post a Comment