Wednesday, May 06, 2020

On Wednesday, May 06, 2020 by Tamilnewstv in    
திருச்சி அமைச்சர் வளர்மதி மகன் திருமணம் ஆடம்பரம் இல்லாமல், சமூக இடைவெளியுடன் நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் வளர்மதி. இவர் தற்போது பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சராகவும் அதிமுக அமைப்புச் செயலாளராகவும் பதவி வகிக்கிறார்.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், இதற்கு முன்பே அமைச்சர் வளர்மதி மகனின் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. தடை உத்தரவு முடிந்ததும் இந்த திருமணம் கடந்த 4, 5 தேதிகளில் நடைபெறுவதாக இருந்தது. தற்போது ஊரடங்கு உத்தரவு மே 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு, சிறப்பாக நடைபெறவிருந்த, நிலையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டதன் காரணமாக அமைச்சர் வளர்மதி மகன் திருமணம் ஆடம்பரமின்றி சமூக இடைவெளியுடன் திருச்சி குணசீலம் பெருமாள் கோயிலில் நடைபெற்றது.இந்த திருமண நிகழ்ச்சிக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குடும்ப உறவுகள் மட்டும் வந்திருந்தனர். இதனைத் தொடர்ந்து அமைச்சர் வளர்மதி - சீதாராமன் ஆகியோரது இளையமகன் ஹரிராம் - திருச்சி மருதாண்டா குறிச்சியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் - சந்திரா ஆகியோரது மகள் சூரியபிரபா ஆகியோரது திருமணம் பூட்டப்பட்டிருந்த கோயில் வாசல் முன்பு, இனிதே நடந்து முடிந்தது.இந்த நிகழ்ச்சியில் ஆவின் தலைவர் கார்த்திகேயன், திருச்சி மாவட்ட அதிமுக மகளிரணி செயலாளர் தமிழரசி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் சிலர் மட்டும் சமூக இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்து கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

0 comments: