Friday, October 17, 2014

On Friday, October 17, 2014 by Unknown in    
அ .இ .அ. தி. மு. க  பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து  தமிழகமெங்கும்  இன்றே தீபாவளி.உடுமலை பாசன சபைத்தலைவர் S .ராஜ்குமார் தலைமையில்  ,அரசு வழக்கறிஞர் ராமகிருஷ்ணன், வழக்கறிஞர் கண்ணன் ,மற்றும் கழக முன்னோடிகள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம் .

On Friday, October 17, 2014 by farook press in ,    
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அண்ணா தி.மு.க.சார்பில் பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஜாமீனில் விடுதலையானதை ஒட்டி ஒன்றிய கழகச் செயலாளர் மெட்ராத்தி நா.அண்ணாத்துரை, அமராவதி பாசன சபைத் தலைவர் எஸ்.ராஜ்குமார், அரசு வழக்கறிஞர் ராமகிருஷ்ணன், ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் டி.டி.வடிவேலு, கண்ணமநாயக்கனூர் ஊராட்சி மன்றத் தலைவர் கே.சக்திவேல், ஒன்றிய இளைஞர் அணிச் செயலாளர் ராஜசேகர்வழக்கறிஞர் கண்ணன், முக்கோணம் பாபுகவுன்சிலர் குணா ஆகியோர் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.



On Friday, October 17, 2014 by farook press in ,    
திருப்பூர் மாநகர் மாவட்ட  அண்ணா தி.மு.க.சார்பில் பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுதலையானதை ஒட்டி மகளிர் அணி மாநில துணை செயலாளரும், மேயருமான அ.விசாலாட்சி, மாவட்ட இளைஞர் அணி செயலாளரும், துணை மேருமான  சு.குணசேகரன், வடக்கு தொகுதி செயலாளர் ஜான், மாவட்ட பேரவை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அண்ணா தி.மு.க.வினர் மத்திய பேருந்து நிலையம் அருகில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
On Friday, October 17, 2014 by farook press in ,    
உடுமலை அண்ணா தி.மு.க.சார்பில் பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுதலையானதை ஒட்டி கழகப் பொதுக்குழு உறுப்பினரும், நகரமன்றத் துணைத் தலைவருமான கண்ணாயிரம் தலைமையில் , நகரமன்றத் தலைவர் கே.ஜி.எஸ்.ஷோபனா முன்னிலையில் அண்ணா தி.மு.க.வினர் மத்திய பேருந்து நிலையம் அருகில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்
On Friday, October 17, 2014 by farook press in ,    
திருப்பூர் மாநகராட்சியில் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் (சிஐடியு) கோரியுள்ளது.
இது தொடர்பாக உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் திருப்பூர் மாநகராட்சி ஆணையர் எம்.அசோகனுக்கு அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளர்களுக்கு ஈட்டி விடுப்பு ஒப்படைப்பு ஊதியம், அகவிலைப்படி உயர்வு ஊதியம் பல மாதங்களாக வழங்கப்படவில்லை. மேலும் கடந்த காலங்களில் தையல் கூலி ஆண் தொழிலாளர்களுக்கு தலா ரூ.400 வீதமும், பெண் தொழிலாளர்களுக்கு தலா ரூ.80 வீதமும் வழங்கப்பட்டு வந்தது. தற்போது அதைக் குறைத்து ஆண்களுக்கு ரூ.200, பெண்களுக்கு ரூ.40 என வழங்கியுள்ளனர்.
ஈட்டிய விடுப்பு ஊதியம், அகவிலைப்படி ஊதியம் இரண்டையும் கணக்கிட்டு வழங்குவதற்காக ஒவ்வொரு துப்புரவுத் தொழிலாளியிடமும் ரூ.500 முதல் ரூ.1000 வரை பெறப்பட்டுள்ளது மிகவும் முறையற்ற செயலாகும். இந்நிலையில் கடந்த ஏப்ரல் முதல் இந்த நிலுவைத் தொகை வழங்கப்படாமல் காலதாமதம் செய்யப்படுகிறது. 
எனவே துப்புரவு தொழிலாளர்களுக்கு நியாயமாக வழங்க வேண்டிய இந்த தொகையை உடனடியாக வழங்க வேண்டும், இத்துடன் அகவிலைப்படி உயர்வுகளை முறையாக கணக்கிட்டு நிலுவைத் தொகையுடன் சேர்த்து வழங்க வேண்டும், துப்புரவுத் தொழிலாளர்களுக்கு தையல் கூலியை இன்றைய நிலைமைக்கு ஏற்ப உயர்த்தி வழங்கிட வேண்டும் என்று மாநகராட்சி ஆணையரிடம் சிஐடியு வலியுறுத்தியுள்ளது.
----------------
On Friday, October 17, 2014 by farook press in ,    


திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில், மக்கள் முதல்வர் ஜெயலலிதா வழக்கில் இருந்து மீண்டு வர வேண்டிபிச்சம்பாளையம் விநாயகர் கோட்டை மாரியம்மன், கன்னீமார், முருகன்-விநாயகர், கருப்பராயன் மற்றும் நவக்கிரக கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி கணபதி ஹோமம் பூஜை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மேயர் அ.விசாலாட்சி, துணை மேயர் சு.குணசேகரன், வடக்கு தொகுதி செயலாளர் ஜெ.ஆர்.ஜான்,மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் வி.ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
On Friday, October 17, 2014 by farook press in ,    
திருப்பூரில் அண்ணா தி.மு.க.43வது ஆண்டு விழாவில் மேயர் விசாலாட்சி, துணை மேயர் குணசேகரன் ஆகியோர் கொடியேற்றி வைத்து எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்தனர்.
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் அக்கட்சியின் 43 வது ஆண்டு துவக்கவிழா குள்ளிச்செட்டியார் வீதியில் உள்ள  தலைமை அலுவலகத்தில் மகளிர் அணி மாநில துணை செயலாளரும், மேயருமான அ.விசாலாட்சி தலைமையில், மாவட்ட இளைஞர் அணி செயலாளரும், துணை மேயருமான சு.குணசேகரன், வடக்கு தொகுதி செயலாளர் ஜெ.ஆர்.ஜான் ஆகியோர் முன்னிலையில் கொடியேற்றி வைத்து, 
பார்க் ரோட்டில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு நடந்து சென்று நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.பின்னர் பிச்சம்பாளையம் விநாயகர் ஸ்ரீ கோட்டை மாரியம்மம்ன் கோவிலில் அண்ணா தி.மு.க.பொதுச்செயலாளர் விடுதலையாக வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.
இந்த அனைத்து நிகழ்ச்சியிலும் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஜெயலலிதாபேரவை செயலாளர்வி.ராதாகிருஷ்ணன், எம்.கண்ணப்பன் எம்.சி.மார்க்கெட் நா.சக்திவேல், அரசு வழக்கறிஞர் கே.என்.சுப்பிரமணியம், ஏ.ஸ்டீபன்ராஜ்,ஏ.எஸ்,சதீஷ், 4வது மண்டல தலைவர் கிருத்திகா சோமசுந்தரம், பொதுக்குழு உறுப்பினர்கள் கருணாகரன், கோமதிசம்பத், வளர்மதி சாகுல்ஹமீது, தாமோதரன், பூளுவபட்டி பாலு, வேலம்பாளையம் அய்யாசாமி,அட்லஸ் லோகநாதன், உஷா ரவிக்குமார், எஸ்பி.என்.பழனிச்சாமி, கலைமகள் கோபால்சாமி, ஹரிஹரசுதன், சி.எஸ்.கண்ணபிரான், ரகுநாதன், பி.கே.எஸ்.சடையப்பன், ரத்தினகுமார், பி.ராஜ்குமார், பெரிச்சிபாளையம் ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட பிரதிநிதி ரஞ்சித்ரத்தினம்,அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் கேபிள் பாலு, வினோத்குமார்,முபாரக், குணசேகர்,  விஸ்வநாதன், கவுன்சிலர்கள் முருகசாமி, செல்வம், கணேஷ், வசந்தாமணி, பிரியா சக்திவேல், பாலசுப்பிரமணியம், சின்னசாமி, ஈஸ்வரன், கனகராஜ், அமுதா வேலுமணி, சபரீஷ்வரன், செந்தில்குமார், பேபி தர்மலிங்கம், முன்னால் கவுன்சிலர்கள் சு.கேசவன்,ருக்குமணி, ராஜகோபால், பேபி பழனிசாமி மற்றும் பாசறை நிர்வாகிகள் யுவராஜ் சரவணன், வி.எம்.கோகுல், பி.லோகநாதன், பரமராஜன், சுரேந்தர், பொன்.அன்பரசன், நீதிராஜன், ஆண்டவர் பழனிசாமி, பங்க் என்.ரமேஷ், என்.சரவணன், கிளை கழக செயலாளர்கள் விவேகானந்தன்,ராஜேந்திரன், மூர்த்தி, தலைமை கழக பேச்சாளர்கள் முகவை கண்ணன்,வேங்கை விஜயகுமார், எம்.ஜி.குணசேகரன், மதுரபாரதி உள்ளிட்டவர்களும், பாஸ் என்கிற பாஸ்கரன், வே.சரவணன், பஸ் ஸ்டாண்ட் சந்திரன், வாசுதேவன், சீனிவாசன்,
மகளிர் அணி நிர்வாகிகள் சுந்தராம்பாள் கேசவன், மும்தாஜ், இந்திராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
On Friday, October 17, 2014 by farook press in ,    


திருப்பூர் அடுத்துள்ள பல்லடம் நகர தெருக்களில் சுற்றி திரிந்த தெரு நாய்களை பிடித்து அவற்றுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்திடும் பணி துவங்கியது. முதல்நாளில் 340 நாய்கள் பிடிபட்டன. இப்பணியை பல்லடம் நகராட்சி ஆணையாளர் நாராயணன்,சுகாதார ஆய்வாளர் சரவணன் ஆகியோர் பார்வையிட்டனர்.
On Friday, October 17, 2014 by farook press in ,    
பல்லடம், அக். 17-
ராசிபுரத்தில் கடத்தப்பட்ட லாரி உரிமையாளர் பல்லடம் அருகே படுகாயத்துடன் மீட்டு மருத்துவமனையில் பொதுமக்கள் சேர்த்தனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்துள்ள உடுமலைரோடு, கேத்தனூரில் இரவு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் படுகாயத்துடன் விழுந்து கிடப்பதாக 108 அம்புலன்சுக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். அதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற 108 ஆம்புலன்ஸ் வேன் மருத்துவ குழுவினர் அந்த நபரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து நடந்த போலீஸ் விசாரணையில் மீட்கப்பட்ட நபர் சேலம் மாவட்டம் ராசிபுரம் பகுதியை சேர்ந்த லாரி உரிமையாளர் பன்னீர்செல்வம் என்பது தெரியவந்தது.
மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் லாரி உரிமையாளர் பன்னீர் செல்வம் போலீசாரிடம் கூறியதாவது:-
நான் ராசிபுரம் பகுதியில் 7 லாரிகள் வைத்து காய்கறி மார்க்கெட்டுகளுக்கு வாடகைக்கு ஓட்டி வருகிறேன். எனது உறவினர் மலர்க்கொடி என்பவருக்கும், எங்கள் குடும்பத்துக்கும் நீண்ட நாட்களாக சொத்து தகராறு இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம் எனது மனைவி மலர்க்கொடி தாக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்பு இரவு போலீஸ் வேடத்தில் மருத்துமனைக்குள் வந்த ஒருவர்  எஸ்.ஐ அழைக்கிறார் என்று கூறி என்னை ஆம்னி வேனில் அழைத்து சென்றார்.அந்த ஆம்னி வேனில் மலர்க்கொடியின் அடியாட்களான கந்தசாமி, வரதராஜ், பழனிச்சாமி மற்றும் அடையாளம் தெரியாத 2 பேர் இருந்தனர்.  
சேலம், ஆத்தூர் ரோட்டில் ஆம்னியை ஓட்டியபடி அவர்கள் என்னை வேனுக்குள் வைத்து தாக்கினார்கள். வலி தாங்காமல் நான் மயங்கி விட்டேன். விழிப்பு வந்த போது மீண்டும் பலமாக அடித்து மயக்க மருந்து ஸ்பிரே தெளித்தனர். பிறகு ஏதோ ஒரு இடத்தில் என்னை காரில் இருந்து தூக்கி வீசி விட்டு சென்று விட்டனர் இவ்வாறு  லாரி உரிமையாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.  இது குறித்து வழக்கு பதிவு செய்து காமநாய்க்கன்பாளையம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்..