Friday, October 17, 2014

On Friday, October 17, 2014 by farook press in ,    
பல்லடம், அக். 17-
ராசிபுரத்தில் கடத்தப்பட்ட லாரி உரிமையாளர் பல்லடம் அருகே படுகாயத்துடன் மீட்டு மருத்துவமனையில் பொதுமக்கள் சேர்த்தனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்துள்ள உடுமலைரோடு, கேத்தனூரில் இரவு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் படுகாயத்துடன் விழுந்து கிடப்பதாக 108 அம்புலன்சுக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். அதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற 108 ஆம்புலன்ஸ் வேன் மருத்துவ குழுவினர் அந்த நபரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து நடந்த போலீஸ் விசாரணையில் மீட்கப்பட்ட நபர் சேலம் மாவட்டம் ராசிபுரம் பகுதியை சேர்ந்த லாரி உரிமையாளர் பன்னீர்செல்வம் என்பது தெரியவந்தது.
மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் லாரி உரிமையாளர் பன்னீர் செல்வம் போலீசாரிடம் கூறியதாவது:-
நான் ராசிபுரம் பகுதியில் 7 லாரிகள் வைத்து காய்கறி மார்க்கெட்டுகளுக்கு வாடகைக்கு ஓட்டி வருகிறேன். எனது உறவினர் மலர்க்கொடி என்பவருக்கும், எங்கள் குடும்பத்துக்கும் நீண்ட நாட்களாக சொத்து தகராறு இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம் எனது மனைவி மலர்க்கொடி தாக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்பு இரவு போலீஸ் வேடத்தில் மருத்துமனைக்குள் வந்த ஒருவர்  எஸ்.ஐ அழைக்கிறார் என்று கூறி என்னை ஆம்னி வேனில் அழைத்து சென்றார்.அந்த ஆம்னி வேனில் மலர்க்கொடியின் அடியாட்களான கந்தசாமி, வரதராஜ், பழனிச்சாமி மற்றும் அடையாளம் தெரியாத 2 பேர் இருந்தனர்.  
சேலம், ஆத்தூர் ரோட்டில் ஆம்னியை ஓட்டியபடி அவர்கள் என்னை வேனுக்குள் வைத்து தாக்கினார்கள். வலி தாங்காமல் நான் மயங்கி விட்டேன். விழிப்பு வந்த போது மீண்டும் பலமாக அடித்து மயக்க மருந்து ஸ்பிரே தெளித்தனர். பிறகு ஏதோ ஒரு இடத்தில் என்னை காரில் இருந்து தூக்கி வீசி விட்டு சென்று விட்டனர் இவ்வாறு  லாரி உரிமையாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.  இது குறித்து வழக்கு பதிவு செய்து காமநாய்க்கன்பாளையம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்..

0 comments: