Thursday, October 16, 2014
அதிகளவு தண்ணீர் குடிப்பதால் உடல் எடை குறையும் என்பது உண்மையா? எப்படி? 80 கிலோ எடையுள்ள ஒருவர், ஒரு நாளைக்கு 4 முதல் 5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்கிறார்கள். அப்படிக் குடித்தால் அந்தளவு அடிக்கடி சிறுநீரும் வெளியேறுமே... இதனால் சிறுநீரகம் பாதிக்கப் படாதா? அதிகளவு தண்ணீர் குடிப்பதால் எடை குறைந்து விடாது. நிறைய தண்ணீரும் குடித்துக் கொண்டு, கூடவே அரிசி உணவைக் குறைத்து, காய்கறி, பழங்களை அதிகம் எடுத்துக்கொண்டு, கலோரி குறைவான உணவு களை சாப்பிட்டு வந்தால் எடை குறையலாம். பொதுவாக வெயில் காலத்தில் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும்.
வியர்வை வழியே உடலின் நீர் வெளியேறுவதால், அதை ஈடுகட்ட, அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். வெயில் இல்லாத மற்ற நாள்களில், வியர்வை அதிகமிருக்காது. உடலின் தண்ணீர் சத்திலும் இழப்பிருக்காது. அதனால் அதிக தண்ணீர் குடித்தால், சிறுநீரின் அளவும் அதிகரிக்கும். அதிக தண்ணீர் குடிப்பது என்பது, ஆரோக்கியமான சிறுநீரகங்கள் மற்றும் இதயம் கொண்டவர்களுக்கு ஓ.கே. ஒன்றும் செய்யாது.
சிறுநீரகம் பழுதடைந்திருந்தாலோ, சுவாசப் பிரச்னை இருந்தாலோ, கல்லீரல் அல்லது இதயக்கோளாறு இருந்தாலோ, அதிகளவு தண்ணீரானது உடலுக்குள்ளேயே தங்கி, வெளியேற்ற முடியாமல் போகும். அந்த நிலையை ‘ஃப்ளூயிட் ஓவர் லோடு’ என்கிறோம். சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள் நாளொன்றுக்கு ஒன்றரை முதல் 2 லிட்டர் வரையிலும், இதயக் கோளாறு இருப்பவர்கள் 1 லிட்டரும் மட்டுமே தண்ணீர் குடிக்க அனுமதிக்கப்படுவார்கள். எனவே அவர்கள் மட்டும் குடிக்கிற தண்ணீரின் அளவில் கவனம் செலுத்தினால் போதும்.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் ரெயில் நிலையத்தில் ஆட்டோ நிறுத்தத்தை வேறு இடத்திற்கு மாற்ற, ஓட்டுனர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து அந்த பகுதியில் பரபரப்பு ...
-
திருப்பூர், : ஊத்துக்குளி வட்டம் கவுண்டம்பாளையத்தில் சாயக் கழிவு நீரை வெளியோற்றி விவசாய நிலத்தை பாதிப்படைச் செய்து வரும் பனியன் நிறுவனத்தை ...
-
காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் இந்திய ஸ்குவாஷ் அணியினருடன் பயிற்சியாளர் சைரஸ் போஞ்சா, ஸ்காட்லாந்துக்கு செல்லாததால் வீரர், வீராங்கனைகள் ...
-
திருச்சி 11.12.15 திருச்சி உங்களுடன் அமைப்பு சார்பாக இன்று ஊர்காவல் படை ரோட்டரி இன்னர்வீல் லயன்எக்ஸ்னோரா தமிழ்நாடு வியாபாரிகள் சங...
-
வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக மாநிலத்தில் பல்வேறு பகுதியில் பெய்து வருகிறது கடந்த 23.11.2015 அன்று பெய்த கனமழையின் காரணமாக தூத்து...
-
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். என முஸ்லிம் லீக...
-
சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் உலக மண்வள தின விழா சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். வுளமான மண் இருந்தால் தான் நிலையான ம...
0 comments:
Post a Comment