Thursday, July 17, 2014
On Thursday, July 17, 2014 by Anonymous in Break
கொடுங்கையூர் தாமோதரன் நகரை சேர்ந்தவர் கோபால். பிரபல ரவுடியான இவன் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் இருந்தன.
கொடுங்கையூர் ராஜரத்தினம் நகர் பகுதியில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக கொடுங்கையூர் போலீசார் கோபாலை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். அவனிடம் போலீசார் நேற்று விசாரணை நடத்தினர்.
அப்போது தனக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறி அங்கேயே திடீரென மயங்கி விழுந்தான். உடனடியாக ஸ்டான்லி மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்றனர். ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட கோபால் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக கொடுங்கையூர் பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டது.
போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின் பேரில் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இணை கமிஷனர் சண்முகவேல், புளியந்தோப்பு துணை கமிஷனர் சுதாகரன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
அவர்கள் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் பாஸ்கர், சப்–இன்ஸ்பெக்டர் பாண்டியன் ஆகியோரை சஸ்பெண்டு செய்து கமிஷனர் ஜார்ஜ் நடவடிக்கை எடுத்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாவட்டம், முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை சுற்றுவட்டார விவசாயிகளின் தேங்காய், கொப்பரை தேங்காய், எ...
-
நண்பரை கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பூந்தமல்லி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. 10 நாட்களில் விசாரணை முடிக்கப...
-
தமிழ் சினிமாவில் 90களில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற பூவே பூச்சூடவா படத்தின் உல்டா தான் இந்த மஞ்சப்பை. இன்றைய காலகட்டத்தி...
-
இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி திருப்பூரில் பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். ஊத்துக்குளி செட்டிதோட்டம் அண்ணமார்நகர் பகுதியிலுள்ள ...
-
திருப்பூர்,செப்.25- திருப்பூர் கோ-ஆப்டெக்ஸ் குமரன் விற்பனை நிலையத்தில் மகாராணி பட்டுச் சேலையை கலெக்டர் கோவிந்தராஜ் அறிமுகம் செய்து வைத்...
-
கோவை அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் ரேஷன் கடையை இடித்து சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அ...
-
சிவகங்கை: மணல் கடத்திய லாரியை பிடிக்கச் சென்ற எஸ்.ஐ.க்கு அடி, உதை விழுந்தது. இந்த சம்பவத்தால், மானாமதுரை அருகே பரபரப்பு தொற்றிக்கொண்டது. ...
-
திருச்சி 7.12.15 சபரிநாதன் 9443086297 திருச்சி சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் பொன்மலை பணிமனை கோட்டம் சார்பில் சிறப்பு வெ...
-
J.J. College of Engineering and Technology, Tiruchirappalli Graduation Day – 26.08.2018 J.J. College of Engineering and Technolog...
-
தமிழகத்தில் தான் பொது விநியோக துறை சிறப்பாக செயல்படுகிறது என்ற பாராட்டு ஒருபுறம் இருந்தாலும் சில நியாய விலை கடை பணியாளர்களால் நுகர்வோர்கள...
0 comments:
Post a Comment