Wednesday, August 13, 2014
இந்த இடர்பாட்டை தவிர்க்க, வாரத்தில் ஒருநாள் மாநகராட்சி களில் உள்ள
மண்டல அலுவலகங் களிலும், நகராட்சிகளிலும், பேரூராட்சிகளிலும் பிறப்பு,
இறப்பு சான்றிதழ், வர்த்தக உரிமம், பாதாள சாக்கடை குழாய் இணைப்பு, குடிநீர்
குழாய் இணைப்பு, தொழில் வரி விதிப்பு, சொத்து வரி கேட்பு, கட்டிட
அனுமதி, பெயர் மாற்றம், காலிமனை வரி விதிப்பு, வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள
மக்களுக்கு சான்றிதழ் ஆகியவை கோரும் விண்ணப்பங்களின் மீது உடனடியாக உரிய
நடவடிக்கை எடுக்கும் வகையில், ‘அம்மா மக்கள் சேவை மையம்’ நடத்தப்படும்.இந்த
மையத்தில், ஒவ்வொரு புதன்கிழமையும் மாநகராட்சி மண்டல அலுவலகங்கள்,
நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் முறையே உதவி ஆணையாளர்கள், ஆணையர்கள்,
செயல் அலுவலர்கள் ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று,
அவற்றின் மீது ஆய்வு செய்து, மக்கள் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கால
வரையறைக்கு ஏற்ப ஆணை வழங்க நடவடிக்கை எடுப்பார்கள்.அனைத்து விண்ணப்பங்
களையும் கணினியில் பதிவு செய்து, ஒவ்வொரு கோரிக்கை மனுவுக்கும்
விண்ணப்பதாரர்களுக்கு முறையான பதில் வழங்க ஏற்பாடு செய்யப்படும். இப்பணி
முறையாக நடப்பதை உறுதி செய்ய அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், மனுக்கள்
மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அந்தந்த துறைத் தலைவர்கள் வலைதளம்
மூலம் கண்காணிக்கும் வசதி ஏற்படுத்தப்படும். இதன்மூலம் அரசின் சேவைகள்
பொதுமக்களுக்கு காலவிரயம் இல்லாமல் குறைந்த செலவில் சென்றடைவது உறுதி
செய்யப்படும். என தெரிவித்து இருந்தார் .இந்த உத்தரவை செயல்படுத்துகிற
வகையில் மதுரை மாநகராட்சி 4 மண்டலங்களிலும் மேயர் ராஜன் செல்லப்பா
இத்திட்டத்தை தொடங்கி வைத்தார் .இத்திட்டம் மகத்தான வெற்றி பெரும் என
ஒவ்வொரு வாரமும் பொன் கிடைத்தால் போல புதன்கிழமைகளில் மக்கள் கோரிக்கைகள்
நிறைவேற்றப்படும் என்றார் .மாநகராட்சி ஆணையர் கதிரவன் ,துணை மேயர் திரவியம்
,உதவி ஆணையர் பழனிச்சாமி ,குழு தலைவர்கள் முனியாண்டி ,சுகந்தி அசோக்
,மண்டலம் 2 ற் க்கு உட்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் ,வழக்கறிஞர் ரமேஷ்
,நிலையூர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
சட்டப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுத்தவர் முதல்வர் ஜெயலலிதா என சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெய...
-
திருப்பூர், பி.என்.ரோடு பொன்னம்மாள் நகரில் வசித்து வருபவர் பழனிசாமி(வயது 50). இவரது மனைவி பத்மாவதி(44).இருவரும் கட்டிடத்தொழிலாளிகள். இவர்க...
-
திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, தாராபுரம் (தனி), அவினாசி (தனி), பல்லடம், உடுமலை, மடத்துக்குளம், கா...
-
சென்னையில் மாபெரும் கூட்டம் ? புதுக்கோட்டை சத்தியமூர்த்தி நமக்கு அனுப்பிய அடுத்த வீடியோவில் கூறியிருப்பது. நேற்று நம...
-
திருப்பூர் : திருப்பூர் அருகே, மதுபோதையில் மனைவியை வெட்டிக்கொலை செய்ய முயன்ற கணவருக்கு, மகிளா கோர்ட்டில் ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....