Saturday, September 13, 2014
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகில் 3 ஆம் வகுப்பு படிக்கும்
மாணவரை தீவைத்துக் கொலை செய்ததாக அவரது சித்தியை காவல்துறையினர்
வெள்ளிக்கிழமை(12.09.2014) கைது செய்துள்ளனர்.
ஆத்தூர் அருகில் கீரனூர் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் முனியசாமி.
கட்டிடத் தொழிலாளி. இவரது மகன் காமேஸ்வரன்(8). இங்குள்ள இந்து துவக்கப்
பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வருகிறார். மதியம் 1.45க்கு காமேஸ்வரன்
பள்ளி விட்டு திரும்பியபோது அவரது தாய் டெய்சிராணியின் சகோதரி பேச்சி
அம்மாள்(30) காமேஸ்வரனை பிடித்து வீட்டிற்கு அழைத்து சென்று அவரது கையை
கட்டி அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்திருக்கிறார்.
பலத்த தீக்காயமடைந்த சிறுவனின் அலறல் கேட்டு காமேஸ்வரனை மீட்டு
தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர். அங்கு மாலை
5.30க்கு அச்சிறுவன் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.
சிறுவன் அருகிலுள்ள கோவிலில் சர்க்கரை பொங்கல் வாங்கி வந்ததாகவும் அதனை
அவரது வடக்கு தெருவிலுள்ள ஆச்சிக்கு கொண்டு சென்ற போது அங்கிருந்த பேச்சி
அம்மாள் தனக்கும் வாங்கி வரக்கூறியதாக கூறப்படுகிறது. அதற்கு காமேஸ்வரன்
மறுத்ததால் மன நலம் பாதிக்கப்பட்ட பேச்சி அம்மான் கையை கட்டி தீவைத்து
விட்டதாக காவல்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.
ராமையா நாடார் மகளான பேச்சி அம்மாளுக்கு திருமணமாகவில்லை. ஆத்தூர்
காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரித்து
வருகின்றனர். இச்சம்பவம் கீரனூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
0 comments:
Post a Comment