Saturday, September 13, 2014
சென்னை, செப். 13–
தென் இந்திய தொலைக் காட்சி மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவரின் நடவடிக்கைகளை கண்டித்து தமிழர் எழுச்சி இயக்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழர் எழுச்சி இயக்க பொதுச் செயலாளர் வேலு மணி தலைமை தாங்கினார். தமிழ் திரைப்பட பாதுகாப்பு கழக தலைவர் கே.ராஜன், நாம் தமிழர் கட்சி துணைத் தலைவர் கலைக்கோட்டுதயம், ஸ்டண்டு மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் தென் இந்திய தொலைக் காட்சி மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் தமிழில் பேசக்கூடாது, தமிழில் மாத இதழை வெளியிட முடியாது என்று அறிவித்துள்ள சங்க தலைவர் நாக்பாலை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
தென் இந்திய தொலைக் காட்சி மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் தமிழர்கள் தான் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களாக உள்ளனர். பிறமாநிலத்தினர் ஒருசிலர்தான் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இந்த சங்கத்தின் செயல்பாடு முழுவதும் தமிழை புறக்கணிப்பதாக உள்ளது. இது தமிழுக்கும், தமிழ் இனத்துக்கும் எதிரானது. இந்த போக்கை சங்க தலைவர் உடனே கைவிட வேண்டும்.
சீமான் கூறியதாவது:–
இந்த சங்கத்தில் ஆங்கிலத்தில் மட்டுமின்றி தமிழிலும் மாத இதழை வெளியிட வேண்டும். தமிழில் பேச அனுமதிக்க வேண்டும். சங்க நடவடிக்கைகள் தமிழில் இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த சங்க நிர்வாகிகள் ஜாக்குவார் தங்கம், கலைக்கோட்டுதயம், ஆதிராம் ஆகியோரை சங்கத்தில் இருந்து நீக்கி இருக்கிறார்கள். உறுப்பினர்கள் யாரிடமும் கேட்காமல் தன்னிச்சையாக சங்க தலைவர் நாக்பால் முடிவு எடுத்துள்ளார். இந்த நிலை நீடித்தால் தமிழ்நாடு தொலைக்காட்சி மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் என்ற பெயரில் புதிய சங்கம் தொடங்கும் நிலை வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் வஞ்சை அரசன், பாவரசு, பாலசிங்கம், வன்னியரசு, மடிப்பாக்கம் வெற்றிச் செல்வன், பார்வேந்தன், ஆதிராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...

0 comments:
Post a Comment