Wednesday, September 17, 2014
திருப்பூர் : வெயில் அதிகரித்து வருவதால், மின்பயன்பாடும் அதிகரித்துள்ளது. எனவே, மின் சிக்கனத்தை கட்டாயம் பின்பற்றுமாறு, பொதுமக்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சில வாரங்களாக கடும் வெயில் நிலவுகிறது. வீடுகளில் மின் விசிறி, பிரிட்ஜ், ஏ.சி., போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்துள்ளது. வழக்கத்தை காட்டிலும், 30 முதல் 40 சதவீதம் வரை, மின்சாரம் கூடுதலாக செலவாகிறது. மின்சிக்னத்தை நுகர்வோர் பின்பற்றினால் மட்டுமே, மின்தடையை தவிர்க்க முடியும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.வீடுகள், அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில், தேவையான எண்ணிக்கையில் மட்டுமே விளக்குகளை எரியவிட வேண்டும். ஜன்னல் மற்றும் கதவுகளை
திறந்து வைப்பதன் மூலம் காற்றோட்டமும், போதிய வெளிச்சமும் கிடைப்பதால், மின்விளக்கு, மின்விசிறி பயன்பாட்டை குறைக்கலாம்.
தெருவிளக்குகளை, இருள்சூழ்ந்த நேரத்தில் எரிய விட்டு, அதிகாலையில் "ஆப்' செய்ய வேண்டும். வெளிச்சமான நேரங்களில், மாலை 6.00 மணிக்கு முன்னதாகவும், காலை 10.00 மணிக்கு பிறகும் பல்வேறு இடங்களில் தெருவிளக்குகள் எரிவதால், மின்சக்தி விரயமாகிறது.ஜவுளிக்கடை, நகை கடை, வீட்டு உபயோக பொருள் விற்பனையகம், டிபார்ட்மென்டல் ஸ்டோர் போன்றவற்றில், அதிக வெளிச்சம் தரும் நூற்றுக்கணக்கான விளக்குகள் நாள் முழுவதும் எரிய விடப்படுகின்றன; இதை தவிர்க்க வேண்டும்.குடும்பத்தோடு வெளியூர் செல்லும் பட்சத்தில், வீட்டில் உள்ள மெயின் "ஸ்விட்ச் பாக்ஸ்' அணைக் கப்பட வேண்டும். அலுவலகம் மற்றும் நிறுவனங்களில், இரவு பணி முடிந்து பூட்டும்போது, மின்விளக்குகளை முழு வதுமாக அணைத்துவிட வேண்டும்.பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சி, விழா நடத்தும் பகுதிகளில், அதிக மின்விளக்கு மற்றும் சீரியல் பல்பு பயன்படுத்துவதை குறைக்க வேண்டும். பொதுக்கூட்டங்களில், அதிக எண்ணிக்கையில் ஸ்பீக்கர் கட்டி, நீண்டநேரம் அவற்றை அலற விடுவதால், மின்சக்தி வீணாகிறது.
மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது,"திருப்பூர் மின்பகிர்மான பகுதிகளில் தினசரி மின்பயன்பாடு, 530 மெகாவாட்டில் இருந்து, தற்போது 570 மெகாவாட் வரை அதிகரித்துள்ளது. மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவது அவசியம். இதனால், மின் கட்டணமும் நுகர்வோருக்கு கணிசமாக குறையும்; மின் தடையையும் தவிர்க்கலாம்,' என்றனர்.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாவட்டம், முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை சுற்றுவட்டார விவசாயிகளின் தேங்காய், கொப்பரை தேங்காய், எ...
-
தமிழ் சினிமாவில் 90களில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற பூவே பூச்சூடவா படத்தின் உல்டா தான் இந்த மஞ்சப்பை. இன்றைய காலகட்டத்தி...
-
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதா வது:– வருவாய்க்கு மீறி சொத்துக் குவித்த வழக்கில் அ.தி.மு.க. பொத...
-
இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி திருப்பூரில் பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். ஊத்துக்குளி செட்டிதோட்டம் அண்ணமார்நகர் பகுதியிலுள்ள ...
-
* மங்கள்யான் விண்கலம் செலுத்தப்பட்டதன் முக்கிய நோக்கமே, செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் உள்ளதா என்பதை கண்டுபிடிப்பதுதான். ...
-
திருப்பூர்,செப்.25- திருப்பூர் கோ-ஆப்டெக்ஸ் குமரன் விற்பனை நிலையத்தில் மகாராணி பட்டுச் சேலையை கலெக்டர் கோவிந்தராஜ் அறிமுகம் செய்து வைத்...
-
சிவகங்கை: மணல் கடத்திய லாரியை பிடிக்கச் சென்ற எஸ்.ஐ.க்கு அடி, உதை விழுந்தது. இந்த சம்பவத்தால், மானாமதுரை அருகே பரபரப்பு தொற்றிக்கொண்டது. ...
-
இந்தியாவின் முதன்மை கட்சியாக பா.ஜ.க. திகழ்கிறது என கேரளாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். கோழிக்கோடு: கேரள மாநிலம் க...

0 comments:
Post a Comment