Friday, September 05, 2014
இயற்கை என்றால் நம் நினைவுக்கு வருவது எல்லாம் பசுமையான
மரங்கள், வயல்வெளிகள், நீளமான வானமும் தான். ஆனால் இயற்கையின் மற்றொரு
உருவான மலைகளும் அழகுதான். வெறும் காய்ந்த பாறைகளும், பறந்து விரிந்த
மலைகளும் அழகு என உணரவேண்டும் என்றால் நார்த்தாமலைக்கு வாருங்கள்.
திருச்சி-புதுகோட்டை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில்
இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் நார்த்தாமலை ஊர் அமைந்துள்ளது.
நார்த்தாமலை பேருந்து நிலயத்தில் இருந்து சற்று நடந்தால் நர்த்தாமலையை
அடையலாம். இவ்வூர் மேலமலை, கோட்டைமலை, கடம்பர் மலை, பறையன் மலை, உவச்சன்
மலை, ஆளுருட்டி மலை, பொம்மாடி மலை, மண் மலை, பொன் மலை என ஒன்பது மலைகளை
கொண்டுள்ளது. இதில் மேலமலை, சமணர் மலை என்றும் கூறபடுகிறது. இந்த மலைகளும்
வரலாற்று சிறப்பு மிக்க கல்வெட்டுகளையும், சிற்பங்களையும், கோவில்களையும்
கொண்டுள்ளன.
நார்த்தாமலையை 8 ஆம் நூற்றாண்டில் பல்லவர்களும், பிறகு
மூன்றாம் நந்திவர்மனும் ஆட்சி செய்யப்பட்டதாக வரலாறு கூறுகிறது. சோழர்
காலத்தில் விஜயாலய சோழனால் 9 ஆம் நூற்றாண்டிலும் பிறகு முதலாம் ராஜ ராஜ
சோழன், முதலாம் குலோத்துங்கன், இரண்டாம் ராஜேந்திரன் ஆகியோராலும் ஆட்சி
செய்யப்பட்டதாக வரலாற்றில் காணப்படுகிறது.
விஜயாலய சோழீஸ்வரம் கோவில் மலை உச்சியில்
கட்டப்பட்டுள்ளது. சோழர்களின் கலை நுணுக்கம் இப்போதும் எப்போதும்
ஆச்சர்யத்தில் ஆழ்த்துவதாகவே அமைந்திருக்கிறது. தமிழக வரலாற்றில் இந்த
கோவில் மிக முக்கியமானது என்றால் அது மிகை ஆகாது. கோவில் மேற்பரப்பில்
அழகிய விமானம் போன்று வடிமைக்கப்பட்டுள்ளது. நந்தி மண்டபம் ஒன்று வாசலை
நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. உலகில் நம் முன்னோர்களின் திறமையும், கலைநயமும்
ஓங்கி இருப்பதை காணலாம்.
இப்படி காலத்தால் போற்றவேண்டிய காலச்சுவடுகள் நிறைந்த இந்த நார்த்தாமலையை குறித்து அப்பகுதி மக்களுக்குக் கூட சரியாக தெரியவில்லை. அதேபோல், இந்த இடங்களை பற்றிய வரலாற்று குறிப்புகள் கூட தொல்லியல் துறையிடம் போதுமான அளவுக்கு இல்லை. இந்த பகுதி நம்மால் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம், இது ஒரு சுற்றுலாத் தலமாகவும், மாணவர்கள் படிப்பிற்கு ஆராய்ச்சி செய்யும் வகையில் அரசாங்கம் மாற்றினால் நம் முன்னோர்களின் சிறப்பை நாம் நமது அடுத்த தலைமுறைக்கு பரிசளிக்கலாம்.
காலத்தின் பொக்கிஷங்களை காப்பது அரசாங்கத்தின் கடமை மட்டும் அல்ல பொதுமக்களின் கடமையும் கூட. இந்த வரலாற்று சிறப்பை பற்றி அங்குள்ள மக்களுக்கு தெரியபடுத்தி காலச்சுவடை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தொல்லியல் துறைக்கு உள்ளது.
காலச்சுவடுகள் காப்பாற்றபடுமா! காப்பற்றபட்டால் தமிழர்களின் பெருமையையும், கலை நுணுக்கத்தையும் உலகம் அறியும்...
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
திருப்பூர், பி.என்.ரோடு பொன்னம்மாள் நகரில் வசித்து வருபவர் பழனிசாமி(வயது 50). இவரது மனைவி பத்மாவதி(44).இருவரும் கட்டிடத்தொழிலாளிகள். இவர்க...
-
சட்டப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுத்தவர் முதல்வர் ஜெயலலிதா என சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெய...
-
திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, தாராபுரம் (தனி), அவினாசி (தனி), பல்லடம், உடுமலை, மடத்துக்குளம், கா...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
திருமங்கலம் தாலுகா கள்ளிக்குடியில் கல்லுப்பட்டி மற்றும் காரியாபட்டி செல்லும் நெடுஞ்சாலைகள் உள்ளது. இந்த சாலைகள் மதுரை – தூத்துக்குடி மற்ற...
-
தெய்வத் திரு தாரா நல்லூர் கண்ணன் அறக்கட்டளை சார்பாக திருச்சி பிராட் டியூர் வட்டார போக்குவரத்து கழகம் அருகே தண்ணீர் பந்தல் தொழிலதிபர் ட...
0 comments:
Post a Comment