Wednesday, September 03, 2014
குழித்துறை அருகே நூதன முறையில் கடத்திய போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
குமரி மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிரடி பறக்கும் படை சிறப்பு தாசில்தார் கண்ணன், வருவாய் ஆய்வாளர் செய்யது அலி, டிரைவர் ஜாண்பிரைட் ஆகியோர் நேற்று காலை மார்த்தாண்டம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த லோடு ஆட்டோவை நிறுத்துமாறு சைகை காட்டினர். ஆனால், அந்த லோடு ஆட்டோ நிற்காமல் வேகமாக சென்றது.
உடனே, அதிகாரிகள் லோடு ஆட்டோவை துரத்தி சென்று, குழித்துறை அருகே கல்லுக்கெட்டி பகுதியில் வைத்து மடக்கி பிடித்தனர். ஆட்டோ டிரைவரிடம் விசாரித்த போது, அதில் மிட்டாய் பொருட்கள் இருப்பதாக கூறினார்.
அவரது பேச்சில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் சாக்கு மூட்டைகளை சோதனையிட்ட போது, அதில் மிட்டாய் பொருட் களுடன் போதை புகையிலை பொருட்கள், பாக்கு பொருட்கள் மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இவற்றின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் எனக்கூறப் படுகிறது.
இவை நாகர்கோவிலில் இருந்து களியக்காவிளையில் உள்ள ஒரு கடைக்கு கொண்டு செல்வதாக டிரைவர் கூறினார்.
கேரளாவில் இத்தகைய புகையிலை பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளன. எனவே, இத்தகைய போதை பொருட்களை களியக்கா விளையில் பதுக்கி வைத்து விட்டு அங்கிருந்து கேரளாவுக்கு கடத்தி செல்ல, எடுத்து வந்ததாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து, அதிகாரிகள், நூதன முறையில் கடத்திய போதை புகையிலை பொருட்களுடன் லோடு ஆட்டோவை பறிமுதல் செய்து களியக்காவிளை போலீசில் ஒப்படைத்தனர். மேலும், லோடு ஆட்டோ டிரைவர் நாகர்கோவில், கோட்டாறு பகுதியை சேர்ந்த டிரைவர் கணேசும் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...
-
திருப்பூர் வடக்கு போலீசாருக்கு திருப்பூர் பி.என்.ரோடு எஸ்.வி.காலனி 2–வது வீதியில் உள்ள ஒரு வீட்டில் கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதாக தகவ...
-
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் கடந்த 20 நாட்களாக சுற்றித்திரியும் ஒற்றை குரங்கு பார்ப்போரையும் பள்ளி மற்றும் கல்ல...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...

0 comments:
Post a Comment