Monday, September 01, 2014
தண்டையார்பேட்டை, : மனைவியை பற்றி ஆபாசமாக பேசியதால் தலையில் கல்லைப்போட்டு சமையல்காரரை கொலை செய்தேன் என்று பிடிபட்டவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ. நகரை சேர்ந்தவர் குமார் (40). சமையல்காரர். இவர், கடந்த 6ம் தேதி ராயபுரம் சிங்கார தோட்டம் பகுதியில் தலை யில் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுகுறித்து ராயபுரம் போலீசார், 200க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். குமாருடன் பணியாற்றிய மாரியப்பன் (30) என்பவரை விசாரணைக்கு அழைத்தபோது அவர் திடீரென தலைமறைவாகிவிட்டார்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். விசாரணையில், தென்காசி அருகே இலஞ்சி என்ற கிராமத்தில் மாரியப்பன் பதுங்கியிருப்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்தனர். மாரியப்பனை கைது செய்து சென்னைக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது மாரியப்பன் அளித்த வாக்குமூலத்தில், ‘‘நானும் சமையல் வேலை செய்தேன். குமார் சரியாக சம்பள பணம் கொடுக்க மாட்டார். மேலும் என்னுடைய சம்பளத்தை வாங்கி மது வாங்கி குடித்துவிடுவார். கடந்த 6ம் தேதி இருவரும் மது குடித்தோம். அப்போது என் மனைவி பற்றி குமார் ஆபாசமாக பேசியதால் தகராறு ஏற்பட்டது. இதனால் அவரை தாக்கினேன். தொடர்ந்து என் மனைவியை பற்றி மேலும் ஆபாசமாக பேசினார். இதனால் கல்லை எடுத்து அவரது தலையில் போட்டு கொலை செய்தேன் என்று கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து, குமாரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
மே தின விழாவை திமுகவினர் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என அக்கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளர் செல்வராஜ் கேட்டுக்கொண்டுள...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
உடுமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு சுமார் 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தன...
0 comments:
Post a Comment