Monday, September 01, 2014
மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்தும், விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை எதிர்த்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூரில் பெருந்திரள் உண்ணாவிரதம் நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மத்திய, மாநில அரசுகளின் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ஏழை மக்களுக்கான மானியம் வெட்டு, கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாராள சலுகைகள் வழங்குவது ஆகியவற்றை எதிர்த்தும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும், லஞ்ச ஊழல் சீர்கேட்டை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி இரு கட்சிகளின் சார்பில் செப்டம்பர் 24ம் தேதி முதல் 31ம் தேதி முடிய மாநில அளவிலான மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தப்பட்டது.
அந்த கோரிக்கைகளுடன், திருப்பூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்க வேண்டும், அடுக்குமாடி குடியிருப்பு ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து திருப்பூர் மாவட்டத்தில் நகரங்கள், கிராமங்களில் ஆயிரக்கணக்கான குழுக்களாக இரு கட்சி ஊழியர்கள் வீடு, வீடாக வீதிகள்தோறும் மக்களைச் சந்தித்தனர்.
இதன் தொடர்ச்சியாக செப்டம்பர் 1ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் மக்கள் கோரிக்கைகளை முன்வைத்து, ஆட்சியாளர்களுக்கு எதிராக பெருந்திரள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த இரு கட்சிகள் அறைகூவல் விடுத்திருந்தன.
இதன்படி திருப்பூரில் மாநகராட்சி அலுவலகம் எதிரில் திங்களன்று பெருந்திரள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் எம்.எல்.ஏ., இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.ரவி ஆகியோர் தலைமை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஜி.காளியப்பன் இந்த போராட்டத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றினார்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கானோர் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தனர். உண்ணாவிரத பந்தல், இருக்கைகள் நிரம்பிய நிலையில் முகப்புப் பகுதியில் கூடுதலாக சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டன. அவையும் நிரம்பி வழிந்தது. இருநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்.
இந்த போராட்டத்தின் நோக்கங்களை விளக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.ராஜகோபால், என்.கோபாலகிருஷ்ணன், சி.சுப்பிரமணியம், கே.ரங்கராஜ், வாலிபர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.முத்துக்கண்ணன், மாதர் சங்க மாவட்டத் துணைச் செயலாளர் ஆர்.மைதிலி, கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.குமார் ஆகியோரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டாரச் செயலாளர் எஸ்.ரவிச்சந்திரன் எம்.சி., பூண்டி செயலாளர் செல்வராஜ், அவிநாசி ஒன்றியச் செயலாளர கே.எம்.இசாக், தெற்கு வட்டாரத் துணைச்செயலாளர் என்.சேகர், இளைஞர் பெருமன்ற நிர்வாகி பன்னீர்செல்வம், தேசிய மாதர் சம்மேளன மாவட்டச் செயலாளர் நதியா ஆகியோர் உரையாற்றினர்.
நிறைவாக உண்ணாவிரதத்தை முடித்து வைத்து மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் கே.காமராஜ் உரையாற்றினார்.
காவல் துறை கெடுபிடி
கம்யூனிஸ்ட் கட்சிகளின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு முறைப்படி அனுமதி பெற்றிருந்தும், மாநகராட்சி எதிரில் பந்தல் அமைத்தபோது காவல் துறையினர் வந்து அங்கே அமைக்கக் கூடாது, போக்குவரத்து நெருக்கடி ஏற்படும், எனவே சற்றுத் தூரம் தள்ளி பந்தல் அமைக்கும்படி கெடுபிடி செய்தனர். அவர்கள் சொன்ன இடத்தில் பந்தல் அமைத்து இருக்கைகள் போடப்பட்டன. ஆனால் அதன் முகப்புப் பகுதியில் தண்ணீர் தேங்கி, சேறாக இருந்தது. அதையும் செப்பனிட்டு இருக்கைகள் அமைக்கப்பட்டு போராட்டம் நடைபெற்றது. சிறிது நேரத்தில் கூட்டம் அதிகமாக வந்தால் முகப்புப் பகுதியிலேயே கூடுதல் சாமியானா பந்தல் அமைத்து விரிவுபடுத்தப்பட்டது. அப்போது அங்கு வந்த உதவி ஆணையர் முத்துசாமி, சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு செய்யக் கூடாது என்று சொல்லி கெடுபிடி செய்தார். ஏற்கனவே காவல் துறை அனுமதி மறுத்த இடத்தைச் சொல்லி அங்கே பந்தல் அமைக்க வேண்டியதுதானே என்றார். இதையடுத்து நிர்வாகிகள் காவல்துறையின் அணுகுமுறை சரியில்லை என்பதை சுட்டிக்காட்டி, முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவதை ஆட்சேபித்தனர். மேலும் ஞாயிறன்று இந்து முன்னணி நடத்திய விநாயகர் சதுர்த்தி ஊர்வலம், கூட்டத்தில் காவல் துறையினர் எந்த கட்டுப்பாடும் விதிக்காமல், பல மணி நேரம் நகரின் போக்குவரத்து முடக்கப்பட்டபோதும் அமைதி காத்துவிட்டு, தற்போது கம்யூனிஸ்ட் கட்சிகளின் போராட்டத்தின்போது கெடுபிடி செய்வது சரியல்ல என்றும் விமர்சித்தனர். இதையடுத்து காவல் துறையினர் அமைதியானார்கள். போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி திருப்பைஞ்ஞீலி கோயிலில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் பூரண உடல் நலம் குணமடைய விநாயருக்கு 108 தேங்காய் உடைத்து சிவன்,எமதர்மன்...
-
உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்க கர்நாடகம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரியில் இன்று தொடங்கி தமிழகத்...
-
பள்ளி மாணவர் கராத்தே போட்டி யில் வேலூர் மாவட்ட அளவில் முதலிடம். உதவித் தலைமை ஆசிரியர் திரு .GP அவர்களால் பரிசு வழங்கப்பட்ட து. ...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
திருப்பூரில் ரூ.80 லட்சம் மதிப்பிலான பனியன் ஆடைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை அனுப்பர்பாளையம் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது...
-
தூத்துக்குடியில் போலீசார் வாகன சோதனையில் ஆயுதங்களுடன் வந்த கொலை வழக்கு பிரபல ரவுடி உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். 4 கார்கள் பறிமுதல் செ...
-
திருப்பூர் அருகே காவலரைப் போல் நடித்து பனியன் தொழிலாளியின் சைக்கிளைப் பறித்து சென்ற இளைஞரை அனுப்பர்பாளையம் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது ச...
-
சென்னை ஏழுகிணறு சுந்தரம் முதல் தெரு பகுதியில் ஏழுகிணறு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கையில் கோணிப்பையுடன் சந்தேகப்பட...
-
திருப்பூரில் அனுமதியின்றி மதுவிற்ற பார் ஊழியர்கள் 8 பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:– மிலாடி ...
0 comments:
Post a Comment