Saturday, September 13, 2014
திருவட்டாரில் வாலிபர், ஆட்டை கடித்து குதறிய வெறிநாய் பஸ் மோதி செத்தது.
இதுகுறித்த விவரம் வருமாறு:–
வெறிநாய்
திருவட்டார் பகுதியில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருவட்டார் பாலம் அருகே ஓட்டல் இறைச்சி கழிவுகள் கொட்டப்படும் இடத்தில் தெருநாய்களின் கூட்டம் அதிகமாக காணப் படுகிறது. இந்த நாய்கள் அவ்வப்போது, சாலையில் செல்பவர்களையும் துரத்தி, துரத்தி கடிக்கின்றன.
இந்தநிலையில், நேற்று காலை திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் பகுதியில் வெறிநாய் ஒன்று சுற்றி, சுற்றி வந்தது. அப்போது, அந்த வழியாக சென்ற, செம்பறாவிளை பகுதியை சேர்ந்த 33 வயது வாலிபரை வெறிநாய் கடித்தது. பின்னர், அந்த நாய் திருவட்டார் பஸ் நிலையம் வந்தது. பஸ் நிலையத்தில் காலை நேரம் என்பதால், மாணவ– மாணவிகள், பொதுமக்கள் ஏராளமானோர் பஸ்சுக்காக காத்து நின்றனர்.
ஆட்டை கடித்தது
வெறிநாயை கண்டதும், பொதுமக்கள் அதை துரத்தினர். தொடர்ந்து, பஸ் நிலையத்தின் வெளியே வந்த நாய், அந்த பகுதியில் சாலையோரம் கட்டி வைத்திருந்த ஒரு ஆட்டை கடித்து குதறியது. பின்னர், அந்த பகுதியில் பஸ்சுக்காக காத்து நின்ற மாணவிகளை துரத்த தொடங்கியது.
இதற்கிடையே அந்த வழியாக வந்த பஸ் வெறிநாய் மீது மோதியது. இதில் அந்த நாய் சம்பவ இடத்திலேயே செத்தது. வெறிநாய் என்பதால், அதை யாரும் அப்புறப்படுத்த முன்வரவில்லை. காலை வேளையில் இந்த வெறிநாயின் அட்டகாசம் திருவட்டார் பஸ் நிலையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...

0 comments:
Post a Comment