Monday, September 01, 2014
பொள்ளாச்சி, : பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், அணை நிரம்ப இன்னும் இரண்டு அடியே உள்ளது என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணையிலிருந்து பழைய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகளான வேட்டைக்காரன்புதூர், பொள்ளாச்சி, சேத்துமடை கால்வாய் வழியாக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் கிடுகிடு என்று உயர்ந்துள்ளது. மொத்தமுள்ள 120அடி கொண்ட ஆழியார் அணையின் நீர்மட்டம் கடந்த வாரம் 115 அடியாக உயர்ந்திருந்தது. பின்னர் அந்நேரத்தில் மழைப்பொழிவு குறைந்ததால், அணைக்கு தண்ணீர் வரத்து மிகவும் குறைந்தது. இதனால், கடந்த ஒரு வாரமாக நீர்மட்டம் உயராமல், அணை நிரம்ப தாமதமானது.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மேற்குதொடர்ச்சி மலைபகுதியில் தொடர்ந்து மழைபொழிவு இருப்பதால், ஊட்டுக்கால்வாய் மற்றும் குரங்கு அருவி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது. தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், அணையின் நீர்மட்டம் நேற்று மதியம் 118 அடியை எட்டியது. அணை நிரம்ப இன்னும் இரண்டு அடியே உள்ளது. தற்போது வினாடிக்கு 1300கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஓரிரு நாட்களில் அணை நிரம்பும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘ஆழியார் அணையின் நீர்மட்டம் தற்போது 118 அடியாக உயர்ந்துள்ளது.
அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், இன்னும் ஓரிரு நாட்களில், அணையின் மொத்த அடியான 120 அடியை எட்டி விடும். அணை நிரம்பும் போது, அணையின் பாதுகாப்பு கருதி, மெயின் மதகுகள் வழியாக ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும். அணை நிரம்ப உள்ளதால், ஆற்றோரத்தையொட்டி வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது‘ என்றனர்.
மேற்குதொடர்ச்சி மலை பகுதியில் நேற்று பெய்த மழையளவு வருமாறு: பரம்பிக்குளம் 48மிமீ(மில்லிமீட்டரில்), ஆழியார் 6மிமீ, மேல்நீரார் 94மிமீ, கீழ்நீரார் 62மிமீ, வேட்டைக்காரன்புதூர் 44மிமீ, மணக்கடவு 52மிமீ, நெகமம் 14மிமீ, நவமலை 7மிமீ, சர்க்கார்பதி 18மிமீ, தூணக்கடவு 25மிமீ, பெருவாரிபள்ளம் 28மிமீ, காடம்பாறை 24மிமீ என்ற அளவில மழை பதிவாகியுள்ளது.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
மே தின விழாவை திமுகவினர் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என அக்கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளர் செல்வராஜ் கேட்டுக்கொண்டுள...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
உடுமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு சுமார் 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தன...

0 comments:
Post a Comment